• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-01-22 10:41:09    
tian qi என்று அழைக்கப்படும் தாவரம்

cri
ஆங்கிலத்தில் Panax Notoginseng என்று அழைக்கப்படும் மூலிகை மருந்து சீனாவில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றது. சீன மொழியில் tian qi என்று அழைக்கப்படும் இத்தாவரத்தின் தண்டு, இலை, பூ ஆகியவை எல்லாம் மருந்தாகப் பயன்படுத்தப்படலாம். ரத்தம் உருவாக்குவது, ரத்தக் கசிவை நிறுத்துவது, அழற்சியை குறைப்பது, வலியை குறைப்பது ஆகிய பயன்கள் கொண்டது இந்த மூலிகை. மூலிகை மருந்துகளில் இது மிகவும் புகழ்பெற்றது. உலகில் புகழ்பெற்ற யுனான் வெள்ளை மருந்தில் இது முக்கிய மூலப்பொருளாகும். யுனான் மாநிலத்தின் wen shan பிரதேசம், நிலவியல் சூழல், சீரான சூரிய ஒளி, தட்பவெப்ப நிலை, நீர், மண், காலநிலை முதலியவற்றுடன் தனிச்சிறப்பு மிக்க பிரதேசமாகும். ஆகையால், wen shan பிரதேசத்தில், Panax Notoginsengஇன் உற்பத்தி அளவும், தரமும் சீனாவில் முதலிடம் வகிக்கின்றது. Panax Notoginseng மருந்து தயாரிப்பு தொழிலின் வளர்ச்சியை விரைவுப்படுத்த, 100 ஹெக்டர் நிலப்பரப்புடைய Panax Notoginseng தொழிற் மண்டலத்தைக் கட்டியமைப்பதில் wen shan பிரதேச அரசு 30 கோடி யுவானை முதலீடு செய்துள்ளது. இந்த மண்டலத்தில், Panax Notoginseng மருந்தின் பயனை ஆய்வு செய்யும் அல்லது பதனிடும் தொழில் நிறுவனங்கள் குவிந்து வருகின்றன. யுனான் டாஃப்னி மருந்து தயாரிப்பு குழுமம் இவற்றில் ஒன்றாகும். தற்போது, Panax Notoginseng மருந்தின் அறிவியல் ஆய்வு, பதனீடு, தகவல், சரக்கு புழுக்கம், நிர்வாகச் சேவை ஆகியவற்றை ஒன்றிணைக்கும் தனிச்சிறப்பான தொழில் நிறுவனமாக இது மாறியுள்ளது. இந்நிறுவனத்தின் நெடுநோக்கு வளர்ச்சி பிரிவின் தலைவர் chen zhong jian கூறியதாவது

 

எமது குழுமத்தின் வளர்ச்சி Panax Notoginseng தயாரிப்புத் தொழிலுடன் நெருங்கிய தொடர்புடையது. வளர்ப்பு தளம் முதல் மருந்து தயாரிப்பு மற்றும் உடல் நலத்துக்கு ஏற்ற தரும் உணவு பொருட்களின் உற்பத்தி வரை, ஏன் வர்த்தக சந்தைக்குள் நுழைவதும் உள்ளடங்கிய முழு தொழில் தொடரை நிறைவேற்றுவது எமது இலக்காகும் என்றார் அவர்.
Panax Notoginseng க்கு பல பயன்கள் உண்டு. ஆகையால், மருந்துகள், உடலுக்கு நலன் தரும் உணவு பொருட்கள், makeup முதலிய துறைகளில் பரந்த அளவிலான வளர்ச்சி எதிர்காலம் இதற்கு உண்டு. யுனான் டாஃப்னி மருந்து குழும நிறுவனத்தின் எதிர்காலம் பற்றி திரு chen zhong jian அறிமுகப்படுத்தினார். இருதய மற்றும் மூளை ரத்த குழாய் நோய்களைத் தடுத்து சிகிச்சை அளிப்பதில் Panax Notoginsengஐ பயன்படுத்தும் ஆய்வில் தமது நிறுவனம் வெற்றி பெற்றுள்ளது. இதுமட்டுமல்ல, hepatitis, ரத்தக் கசிப்பு நிறுத்துதல், கண் மருத்தவம், முதலிய துறையிலான மருந்துகளிலும் Panax Notoginsengஇன் பயன்பாடு ஆக்கப்பூர்வமாக ஆராயப்பட்டு வருகின்றது. தவிர, உள்நாட்டு சந்தையில் வகிக்கும் விகிதத்தை உறுதிப்படுத்தி அதிகரிக்கும் அதேவேளையில், தமது நிறுவனம் அமெரிக்கா, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகளின் கிளை நிறுவனங்கள் மூலம் வெளிநாட்டுச் சந்தையை விரிவாக்க முயன்று வருகின்றது என்று கூறினார்.


Wen shan பிரதேசத்தில் ping ba எனும் வட்டத்தில், உள்ளூர் விவசாயிகள் பெரும்பாலோர் Panax Notoginsengஐ பயிரிடுவதில் ஈடுபடுகின்றனர். கடந்த சில ஆண்டுகளில், விவசாயிகளின் வாழ்க்கை தரம் பெரிதும் உயர்ந்து வருகின்றது. விவசாயிகள் புதிய வீடுகளில் குடியேறியுள்ளனர். ஊரில், கார், துள்ளுந்து, வேளாண் வாகனங்கள் ஆகியவற்றை எங்கெங்கும் காணலாம்.

1 2