Chen gao zhu என்பவர், Panax Notoginsengஐ பயிரிடும் விவசாயியாவார். இவ்வாண்டு 30 வயது மேற்பட்ட அவருக்குச் சில கோடி யுவான் சொத்து சேர்ந்துள்ளது, தங்கள் குடும்பம் எவ்வளவு Panax Notoginsengஐ பயிரிடுகிறது? நானும் சகோதரர்களுடன் இணைந்து நூற்று 30 ஹெக்டருக்கு அதிகமான நிலப்பரப்பில் Panax Notoginsengஐ பயிரிடுகின்றோம். தற்போதைய வாழ்க்கை எப்படி? மகிழ்ச்சியான வாழ்க்கை. சில ஆண்டுகளுக்கு முன்பே Wen shan மாவட்டத்துக்குக் குடியேறினோம். குடும்பத்தில் எத்தனை கார் உண்டு? அனைவருக்கும் கார் உண்டு.
Wen shan வட்டத்தில், Chen gao zhu போன்ற விவசாயிகளின் வாழ்க்கை மென்மேலும் மிகழ்ச்சியாகி வருகின்றது. தவிர, இங்கே, சந்தை விற்பனை வலைப்பின்னலும் உருவாகியுள்ளது. சர்வதேச Panax Notoginseng வர்த்தக மையத்தை முக்கியமாகக் கொண்ட சந்தை, தகவல் மற்றும் வர்த்தக துறை உருவாக்கப்பட்டது. இந்த மையம் Panax Notoginseng தொழிற் மண்டலத்தின் முக்கிய பகுதியாக மாறியுள்ளது. ஆண்டுதோறும் பல விவசாயிகளும் நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்து வரும் வணிகர்களும் இங்கே Panax Notoginseng வர்த்தகம் செய்கின்றனர். பல வெளிநாட்டு வணிகர்களும் இங்கே வந்து Panax Notoginseng வாங்குகின்றனர். 2006ம் ஆண்டு, இந்த வர்த்தக மையத்தில் 50 இலட்சம் கிலோகிராம் Panax Notoginseng அல்லது இதன் மூல பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. வர்த்தகத் தொகை 38.3 கோடி யுவானைத் தாண்டியுள்ளது. இதன் விற்பனை வலைப்பின்னல் சீனாவின் 17 மூலிகை மருந்து சந்தைகளில் பரவலாகின்றது. இது மட்டுமல்ல, Panax Notoginseng ஏற்றுமதியும் விரைவாக அதிகரித்து வருகின்றது. கடந்த ஆண்டு 1000 டன்னுக்கு அதிகமான Panax Notoginseng மூல பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. Wen shan Panax Notoginseng மருந்து தயாரிப்பு தொழில் சுமூகமாக வர்த்தக சந்தைக்குள் நுழைந்துள்ளது. Wen shan Panax Notoginseng மருந்து தயாரிப்பு தொழிலின் வளர்ச்சி பல நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. Wen shan மாவட்டத்தின் Panax Notoginseng தொழில் பிரிவின் துணை தலைவர் wang cheng biao கூறியதாவது.

கடந்த சில ஆண்டுகளாக, ஜப்பானிய தேசிய பல்கலைக்கழகத்தின் நிபுணர்களும் பேராசிரியர்களும் இடம்பெறும் பயணக் குழு wen shanஐ பார்வையிட்டது. தாய்லாந்து சுகாதார அமைச்சின் அதிகாரிகளும் wen shan இல், ஆய்வுப் பயணம் செய்து Panax Notoginsengஐ பயிரிடும் மற்றும் பதனீடு செய்யும் தொழில் நிறுவனங்களைப் பார்வையிட்டனர். வியட்நாமின் பலகட்சி பிரதிநிதிக் குழுக்களும் இங்கே ஆய்வுப் பயணம் மேற்கொண்டன என்றார் அவர். Panax Notoginseng என்னும் சீன மூலிகை மருந்தின் மதிப்பு மென்மேலும் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றது. Wen shan Panax Notoginseng மருந்து தயாரிப்பு தொழிலின் வளர்ச்சிக்கும், உள்ளூர் பொருளாதாரம் மற்றும் சமூகத்தின் பன்முக வளர்ச்சிக்கும் புதிய வாய்ப்புகளை வழங்கியுள்ளது. இசை 4 Panax Notoginseng பூத்துக்குலுங்குகின்றது. இது wen shanக்கு மேலும் ஒளிமயமான எதிர்காலத்தைக் கொண்டு வரும் என்று நம்புகின்றோம். 1 2
|