• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-01-23 09:48:49    
பாலைவன மயமாகும் கட்டுப்பாட்டில் ஈடுபட்ட முதியோர் GAO LIN SHU

cri
பாலைவன மயமாகும் கட்டுப்பாட்டில் ஈடுபட்ட முதியோர் GAO LIN SHU
சீனாவின் வட பகுதியில் அமைந்துள்ள உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம், பாலைவன மயமாக்கம் கடுமையாக ஏற்பட்டுள்ள மாநிலம் மற்றும் பிரதேசங்களில் ஒன்றாகும். உள்ளூர் அரசு மற்றும் பொது மக்களின் தொடர்ச்சியான முயற்சியுடன், கடந்த சில ஆண்டுகளில், பாலைநிலத் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டில் இப்பிரதேசம் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது. GAO LIN SHU எனும் முதியோர், 19 ஆண்டுகளாக பாலைவன மயமாக்கத்தைத் தடுக்க மரங்களை நட்டு, காடு வளர்ப்பில் பெரும் பங்காற்றுவது குறிப்பிடத்தக்கது.


70 வயதான GAO LIN SHU உள்மங்கோலியாவின் தென் மேற்கிலுள்ள எல்தோஸ் நகரில் வசிக்கிறார். சுமார் 90 ஆயிரம் சதுர கிலோமீட்டர் நிலப்பரப்புடைய இந்நகரத்தில், மௌவூசு பாலைநிலம் மற்றும் குபுசி பாலைவனத்தின் பரப்பளவு 48 விழுக்காடு வகிக்கிறது. GAO LIN SHUனின் வீடு குபுசி பாலைவனத்துக்கு அருகில் உள்ளது. தற்போது அவரது வீடு வரிசை வரிசையான பச்சைப் பசேலென மரங்களால் சூழப்பட்டுள்ளது.
19 ஆண்டுகளுக்கு முன், அவ்விடம் கிராமமாக இருந்தது. நிலத்தின் பாலைவன மயமாக்கம் அதிகமாக வந்ததால், பயிர் விளைச்சல் ஆண்டாண்டு குறைந்து வந்தது. வேறு வழியின்றி, கிராமவாசிகள் அங்கிருந்து வெளியேற வேண்டியிருந்தது.
இப்பகுதியில் குடியேறுவதென முடிவு செய்த போது GAO LIN SHUவுக்கு வயது 50. வீட்டிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பாலைவனத்தில் குடிசை அமைத்து, புற்பூண்டுகளையும் மரக்கன்றுகளையும் நடத் தொடங்கினார். அப்போது GAO LIN SHUவின் செயலை, கிராமவாசிகள் புரிந்து கொள்ளவில்லை. அது மட்டுமல்லாமல், அச்செயலை குடும்பத்தினராலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
ஆனால், மன உறுதிமிக்க GAO LIN SHU பிறரின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் இருந்தார். அவரது எண்ணம் மிகவும் எளிமையானது. ஆனால் உயர்வானது. அதாவது, எப்படி இருந்தாலும் வாரிசுகளுக்கு நல்ல வழி ஒன்றை விட்டு செல்ல வேண்டும் என்பதே அது.


1988ஆம் ஆண்டு, GAO LIN SHU 20 யுவான் செலவிட்டு, சில நூறு கிலோகிராம் எடையுடைய மணல்விலவு மரக்கன்றுகளை வாங்கினார். பாலைவனத்தில் சாலை இல்லை. அவர் தமது 3 மகன்களுடன் இணைந்து மணல்விலவு மரக்கன்றுகளைச் சுமந்து கொண்டே, கால் நடையாக பாலைவனத்தை கடந்து வீடு திரும்பினர். குளிர் காற்றில் அவர்கள் விலவு மரக்கன்றுகளை பாலைநிலத்தில் நட்டனர். மரக்கன்றுகளும் புற்பூண்டுகளும் பலத்த காற்றால் கீழே சாய்ந்து விழுந்து விட்டால், GAO LIN SHU மீண்டும் அவற்றை நடுவார். மகன்கள் அவருடன் இணைந்து வேலை செய்தனர். மருமகள் அவர்களுக்கு உணவுகளை அனுப்புவார். இவ்வாறு, குடும்பத்தினர் அனைவரும் மரக்கன்றுகளை நட்டு காட்டை வளர்ப்பதில் ஈடுபட்டு வந்தனர்.
1 2 3