• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-01-23 09:48:49    
பாலைவன மயமாகும் கட்டுப்பாட்டில் ஈடுபட்ட முதியோர் GAO LIN SHU

cri

GAO குடும்பத்தின் இச்சிறப்புச் செயல், உள்ளூர் அரசு வாரியத்தின் கவனத்தை ஈர்த்தது. மணல்விலவு மரம், குதிரை மசால் செடி முதலிய குளிர் மற்றும் வறட்சியைச் சகித்துக் கொண்டு வளரக் கூடிய தாவரங்களின் விதைகளை அது GAO LIN SHUவுக்கு இலவசமாக வழங்கத் துவங்கியது.


2003ஆம் ஆண்டு வரை, GAO LIN SHU நட்ட புற்பூண்டுகள் மற்றும் மரங்களால் பரவலாக்கப்பட்ட நிலப்பரப்பு 200 ஹெக்டரைத் தாண்டியது. 1990ஆம் ஆண்டுகளிலிருந்து, உள்ளூர் உயிரின வாழ்க்கைச் சூழலை மேம்படுத்த எல்தோஸ் நகராட்சி கொள்கை விதிகளை வகுத்துள்ளது. அதாவது, விவசாயிகள் மேம்படுத்தப்பட்ட பாலைநிலத்திலிருந்து பெறும் பொருளாதார பயன் பாலைநிலத்தைக் கட்டுப்படுத்தும் மனிதருக்கு உடையது. அத்துடன், இந்நகரம் வணிகர்களையும் முதலீட்டையும் ஈர்த்து, வன மற்றும் புற்பூண்டுகளின் உற்பத்திப் பொருட்களை பதனீடு செய்யும் தொழிலை பெரும் முயற்சியுடன் வளர்க்கிறது. மரங்களை நட்டு பாலைநிலத்தைக் கட்டுப்படுத்துவதில் விவசாயிகள் மற்றும் ஆயர்கள் கண்ட உயிரின வாழ்க்கையுடன் தொடர்புடைய பயன், இதனால் வேகமாக பொருளாதார வருமானமாக மாற்றப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக முயற்சி மேற்கொண்டு வரும் GAO LIN SHU முதலில் இப்பயனை அனுபவித்துள்ளார். அவரது குடும்பத்தின் ஆண்டு வருமானம் சுமார் 90 ஆயிரம் யுவான் அதிகம். உள்ளூரில் இத்தகைய வருமானம் குறைவாக யாரும் இல்லை என்னலாம்.


1997ஆம் ஆண்டில் GAO LIN SHU தாம் வளர்த்த காட்டுக்கு அருகில் 4 வீடுகளை கட்டியமைத்தார். அவருடைய குடும்பத்தினர் அனைவரும் அங்கே குடியேறி வாழ்கின்றனர். முற்றத்தைச் சூழ்ந்த உயரமான மரங்கள் 10 மீட்டருக்கு மேல் வளர்ந்துள்ளன. Tractor, motorcycle ஆகியவற்றை வாங்கியதோடு, பல்வேறு வசதிகளை பெற்று அவரது குடும்பம் வளர தொடங்கியது. GAO LIN SHU மரங்களை நடுவதன் மூலம் வளம் அடைந்துள்ளதைக் கண்டு, முன்னாள் ஏளனம் செய்த கிராமவாசிகளில் பலர், அவரை மெச்சி பாராட்டத் துவங்கினர். GAO LIN SHU அவர்களிடம் காடு வளர்த்து வளமடையும் இரகசியத்தை அவர்கள் கண்டு, கேட்டு தெரிந்து கொண்டுள்ளனர்.


2006ஆம் ஆண்டில், எல்தோஸ் நகரின் பாலைநிலத்தைக் கட்டுப்படுத்தும் வீரராக GAO SHU LI தேர்தெடுக்கப்பட்டார். அவரது அயரா முயற்சியால், எல்தோஸ் நகரில் புற்பூண்டுகள் மற்றும் காடுகளின் வளர்ச்சி விகிதம் 20 விழுக்காட்டிலிருந்து 70 விழுக்காடாக அதிகரித்துள்ளது. 13 இலட்சத்து 30 ஆயிரம் ஹெக்டர் மேய்ச்சல் நிலங்களும் 4 இலட்சம் ஹெக்டர் வயல்களும் காடுகளால் பாதுகாக்கப்பட்டுள்ளன என்பவை அவருக்கு மேலும் பெரும் மகிழ்ச்சி தருகின்றன.
1 2 3