• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-01-29 09:55:32    
தேயிலை

cri
தேயிலை அல்லது தேநீருக்கு இணையான பல வார்த்தைகள் சீன மொழியில் தேயிலைக்கு கூறப்படும் ச்சா என்பதிலிருந்தே வந்தது எனலாம். சீனாவில் ச்சா எனப்படுவது, ரஷ்யர்களால் ச்சாய் என்ற அழைக்கப்படுகிறது. இதற்கு ஈடாக வட சீனாவில் ச்சாயே என்று தேயிலையை அழைக்கின்றனர். ஆங்கிலத்தில் டீ என்றழைப்படும் தேயிலை, சியாமனிலும் ஏறக்குறைய அப்படியே அழைக்கப்படுகிறது. ஜப்பானிய எழுத்து வடிவில் தேயிலை என்பது சீன மொழியில் இருப்பதை போன்றே எழுதப்படுகிறது.


6வது நூற்றாண்டு வாக்கில் ஜப்பானுக்கு பரவியது தேநீர் அருந்தும் பழக்கம். ஆனால் ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளுக்கு தேநிர் அருந்தும் பழக்கம் அறிமுகமானது 17வது, 18வது நூற்றாண்டில்தான். இன்றைக்கு உலகில் தேநீர் அருந்தும் பழக்கம் கொண்டவர்களின் எண்ணிக்கை நிச்சயம் சில கோடிகளாவது இருக்கும். இவ்வெண்ணிக்கை அதிகரித்துக்கொண்டேயிருக்கிறது.
தேநீர் அருந்துவதென்றால், நமக்கெல்லாம் நாயர் கடைக்கு சென்று, சூடா ஒரு டீ போடுங்க என்று கேட்டு குடிப்பதும், வீட்டில், ஏம்மா மணி பத்தாகுது, காலையில் எட்டரை மணிக்கு ஒரு டீ கொடுத்த, அவ்வளவுதான், ஒரு டீ போடக்கூடாதா? என்று மனைவியை தேநீர் போட சொல்லி குடிப்பதும்தான் தெரியும். ஆனால், தேநீர் அருந்துவது கூட ஒரு சடங்கு போல, ஒரு முறையான நடவடிக்கையாக செய்வதை அறிந்தால் கொஞ்சம் வியப்பாகத்தான் இருக்கும். பண்டைக்காலத்தில் எப்படியெல்லாம் தேநீர் அருந்தும் வழமை இருந்தது தெரியவில்லை. ஆனால் நவீன காலத்தில் முக்கியமாக மூன்று வழிமுறை அல்லது சடங்குத்தன்மை கொண்ட நடவடிக்கைகள் உள்ளன. தேநீர் அருந்தவும், அதன் சுவையை மகிழ்ந்து பாராட்டவும் இத்தகைய சிறப்பு நடவடிக்கைகள் வழி செய்கின்றன.

அந்த மூன்று வழிமுறைகளை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம்.
கைவான் தேநீர் கைவான் தேநீர் என்பது மூடி போட்ட கோப்பையில் தேநீர் அருந்துவதாகும். அரச குடும்பத்தினர், அரச அதிகாரிகள் மட்டுமல்லாது அக்கால குடிமக்களும் இந்த கைவான் தேநீர் அருந்தும் முறையையே பயன்படுத்தினர். தேநீர் கோப்பைக்கு கீழே தட்டிருப்பதை பார்த்திருப்போம். கைவான் தேநீர் அருந்து முறையில் கீழே ஒரு தட்டு இருப்பதோடு, கோப்பைக்கு மேலே ஒரு மூடியும் பொருத்தப்பட்டிருக்கும். கோப்பையை தட்டோட்டு எடுத்து, ஒருகையில் மேல் மூடியை கொஞ்சமாக விலக்கி, தேநீரை அருந்துவதுதான் கைவான் தேநீர் முறை.
அடுத்து ச்சானியாங். ச்சானியாங் என்றால் அன்னை தேநீர் என்று பொருள். இது தான் சாதாரண மக்களிடையே பரவலாக காணப்படும் முறைமை. இந்த வழிமுறையில், ஒரு பெரிய தேநீர் கோப்பையிலிருந்து, சிறிய கோப்பைகளுக்கு தேநீர் பரிமாறப்படும். சிறிய கோப்பைகளை எடுத்து மக்கள் தேநீர் அருந்துவார்கள்.


மூன்றாவது முறை, குங்ஃபூ முரை. குங்ஃபூ என்றது நமக்கு புரூஸ்லீயும், ஜாக்கி சானும்தான் நினைவ்வுக்கு வருவார்கள்.
1 2