• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-01-29 09:55:32    
தேயிலை

cri
ஆனால் இந்த குங் ஃபூ தேநீர் அருந்தும் முறை தேநீர் பற்றி டாங் வம்சக்காலத்தில் லூ யூ என்பவரால் எழுதப்பட்ட குறிப்புகளிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வகை தேநீரானது, சுனை நீரில் அல்லது ஊற்று நீரில் தேயிலை போட்டு தயாரிக்கப்படுகிறது. சூடான நீரை தேநீர் கெண்டி அல்லது பானையில் ஊற்றி அதில் தேநீரை போடவேண்டும். அதன் பின் சூடான நீரை பாத்திரத்தின் மீது ஊற்றவேண்டும். இந்த முறையில் சிறப்பு என்னவென்றால் தேயிலையை பானைக்கு உள்ளேயும் வெளியேயும் வெந்நீருற்றி சூடு படுத்துவதாகும். இதன் மூலம் தேயிலையின் சிறப்பான சுவையை பெற முடியும் என்று நம்ப்பபடுகிறது.
தேயிலை உற்பத்தி
தட்டில் பரிமாறப்படும் உணவு ஒரு நாள் விளைநிலத்தில் கதிராய் கிடந்தது, தழையாய் வளர்ந்தது என்பதையெல்லாம் பொதுவாக நாம் எண்ணி அடடா என்ன அதிசயம் என்று புகழ்ந்து கொண்டிருப்பதில்லை. அழகியல் கண்ணோட்டத்தில் இல்லையென்றாலும், கொஞ்சம் அறிவை வளர்த்துக்கொள்ளவாவது, வேளான்மை, விளை நிலம், கதிர், பயிர் என்றெல்லாம் தேடி நாடி நாம் படிப்பதோ, கேட்டு அறிவதும் குறைவே.
சரி, நாம் நமது தேயிலைக்கு வருவோம். கீழ்குந்தா நேயர் கே. கே. போஜனுக்கு தெரிந்திருக்கும், தேயிலை எப்படி உற்பத்தி செய்யப்படுகிறது என்று. சீனாவில் தேயிலை பயிருட்டு அதை எப்படி பறித்து பயன்படுத்துகின்றனர் என்பது பற்றி சில தகவல்கள் இப்போது உங்களுக்காக.
பொதுவாக ஒரு புது தேயிலைச் செடி 5 ஆண்டுகள் வளர்ந்தாலொழிய அதன் இலைகளை பறிக்கக்கூடாது. அதேபோல் 30 ஆண்டுகள் ஆனபின் அச்செடியால் பெரிதும் எந்தப் பயனுமில்லை. எனவே வயதான செடிகளின் அடிப்பாகம் வரை வெட்டினால், எஞ்சிய பகுதியின் வேர்ப்பகுதியிலிருந்து புதிய கிளை அலது தண்டு தழைத்து வளரும். இப்படி தொடர்ச்சியாக அடியோடு வெட்டி மறுபடி தழைக்கச் செய்வதன் மூலம் ஒரு தேயிலைச் செடி கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் வரை சிறப்பாக பலன் தரும்.


தேயிலைச் செடிகள் நன்றாக வளர, சோயா அவ்ரையால் தயாரிக்கப்பட்ட மாவுக்கட்டிகளையும், இதர கரிம உரங்களையும் போடுகின்றனர். பொதுவாக வேதியல் உரங்கலை பயன்படுத்துவது குறைவே. செடியில் ஏதாவது ஒட்டுண்ணி அல்லது பூச்சிகள் படிந்தால், பாதிக்கப்பட்ட செடி களைந்து அப்புறப்படுத்தப்படும். அதன் மூலம் மற்ற தேயிலைச் செடிகளுக்கு நோய் பரவாமல் தவிர்க்கலாம். மேலும், பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாடும் இதனால் தவிர்க்கப்படுகிறது.
பொதுவாக தேயிலை பறிப்பதற்கான நேரம் குறிப்பிட்ட அந்த இடத்தின் தட்பவெப்பநிலையை பொறுத்து அமையும்.
1 2