• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-01-29 10:12:06    
loongson என்னும் மையச் செயலகக் கருவி

cri
 தகவல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியுடன், கணிணி, செல்லிடபேசி முதலிய தகவல் தொடர்புச் சாதனங்கள் பரவலாகி வருகின்றன. பணி, கல்வி, வாழ்க்கை முதலியவற்றில் மக்கள் பல்வகை தகவல் தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், இந்த தகவல் தொடர்பு சாதனங்களின் உற்பத்திக்கு முக்கியத்துவம் வாய்ந்த மைய தொழில் நுட்பம் வளர்ச்சியடைந்த சில ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது. குறிப்பாக தகவல் தொடர்பு சாதனங்களின் விசை பொறியாக அழைக்கப்படும் மையச் செயலகக் கருவி, அதாவது, மையச் செயலகக் கருவி பற்றிய தொழில் நுட்பம், அமெரிக்க, ஜப்பான் முதலிய ஒரு சில நாடுகளின் கையில் உள்ளன.
2001ம் ஆண்டு முதல், loongson 1 என்னும் மையச் செயலகக் கருவியை ஆராய்ந்து உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட சீனா துவங்கியது. 2002ம் ஆண்டு, loongson 1 என்னும் மையச் செயலக கருவி வெற்றிகரமாக தயாரிக்கப்பட்டது. சீன கணிணிகள் வெளிநாட்டு மைய மையச் செயலகக் கருவியை மட்டும் பயன்படுத்திய வரலாறு முடிவுக்கு வந்தது. பின்னர், loongson 2 பற்றிய ஆராய்ச்சியை சீனா துவங்கியது. தற்போது, loongson 2 பெரும் அளவில் உற்பத்தி செய்யபடுகின்றது. தவிர, உலகில் புகழ்பெற்ற ST நுண் மின்னனு நிறுவனம் என்னும் கூட்டு நிறுவனத்துடன் இணைந்து, loongson 2 சர்வதேச சந்தைக்குள் நுழையும். இன்றைய நிகழ்ச்சியில் சீனா சொந்தமாக ஆராய்ந்து தயாரித்த loongson 2E பற்றி அறிமுகப்படுத்துகின்றோம்.
சீன அறிவியல் கழகத்தின் கணிணியல் ஆய்வகம் loongson மையச் செயலகக் கருவியை ஆராய்ந்து தயாரிக்கும் பொறுப்பை ஏற்றது. அரசிலிருந்து பெரும் உதவி பெற்றுள்ளது. ஆய்வு பணிக்குத் தேவைப்படும் கட்டணம் எல்லாம் அரசிடமிருந்து பெறப்படும். ஆய்வகத்தைச் சேர்ந்த loongson திட்டப்பணியின் பொறுப்பாளர் hu wei wu கூறியதாவது,

வடிவமைப்பில் loongson 2E உலகின் முன்னேறிய தரத்தை எட்டியுள்ளது. அமெரிக்கா, ஜப்பான் ஆகிய 2 நாடுகள் ஆராய்ந்து தயாரித்த மையச் செயலகக் கருவிகளைத் தவிர, இது உலகில் முதலாவது உயர் பயனுள்ள மையச் செயலகக் கருவியாகும். இதன் கணக்கிடும் வேகம், ஒரு வினாடிக்கு 400 கோடி தடவைவை எட்டியுள்ளது. ஆனால் வேவைப்படும் எரியாற்றலின் அளவு மிகவும் குறைவானது. தற்போது, இந்த மையச் செயலகக் கருவி தொகுதியாக உற்பத்தி செய்யபட துவங்கியுள்ளது. தொகுதியாக விநியோகிக்கலாம் என்றார் அவர்.
உலகில் மிக முன்னேறிய மையச் செயலகக் கருவி loongson 2E அல்ல. இருந்தபோதிலும், இது அமெரிக்காவின் pentium 4 இன் தரத்தை எட்டியுள்ளது. இது மட்டுமல்ல, pentium 4 குடன் ஒப்பிடுகையில், குறைவான மின்னாற்றல் பயன்பாடு, குறைவான செலவு முதலிய மேம்பாடுகள் loongson 2E க்கு உண்டு. பயனும் விலையும் பரவாயில்லை. ஆகையால், பல மென் பொருள் வளர்ச்சி நிறுவனங்கள் மற்றும் உற்பத்தி ஆலைகளின் வரவேற்பை பெற்றுள்ளது.


கணிணி, தொலைக்காட்சி, கார் பல்லூடக வசதி முதலிய தகவல் தொடர்புச் சாதனங்களில் loongson 2E பயன்படுத்தப்படுகின்றது.
1 2