• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-01-29 10:12:06    
loongson என்னும் மையச் செயலகக் கருவி

cri
loongson 2Eக்கு உரிய மென் பொருள் தொகுதியையும் அலுவலக மென் பொருட்களையும் வழங்குவது பற்றிய ஒப்பந்தங்களில் மைக்ரோ சாப்ட், சின்குவா முதலிய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழில் நிறுவனங்கள் கையொப்பமிட்டுள்ளன.
தற்போது, loongson 2E பொருத்தப்பட்ட கணிணிகள் ஆய்வு முறையில் சீன சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன. இதன் விலை 1599 யுவான் மட்டுமே. முக்கிய வசதியின் எடை 1 கிலோகிராமுக்குள் உள்ளது. இந்த எடை பாரம்பரிய கணிணியின் எடையின் பத்தில் ஒரு பகுதி மட்டும். பயன்படுத்தும் மின்னாற்றல் பாரம்பரிய கணிணியின் ஐந்தில் ஒரு பகுதி மட்டும்.
loongson 2E இன் உற்பத்தியும் விற்பனையும் தகவல் துறையின் மைய தொழில் நுட்ப பகுதியில் சீனா மாபெரும் வெற்றி பெற்றுள்ளதாக வெளிப்படுத்தியுள்ளன என்று சீன அறிவியல் கழகத்தின் கணிப்பு தொழில் நுட்ப ஆய்வகத்தின் தலைவர் li guo jie கருதுகின்றார். அவர் கூறியதாவது


தற்போது, கணிணியும் மடிக்கணிணியும் முக்கியமாக உயர் நுகர்வு கொண்ட மக்களின் தேவையை நிறைவேற்றுகின்றன. குறைவான வருமானமுடையவர்களுக்கான கணிணிகளை ஆரய்ந்து பரவல் செய்ய முயற்சி செய்கின்றோம். எதிர்காலத்தில் loongson கருவி, உலகின் மையச் செயலகக் கருவி சந்தையின் கட்டமைப்பை மாற்றியமைக்கக் கூடும். முழு உலகில் குறைவான செலவுடைய தகவல் மயமாக்கத்தின் முன்னேற்றத்தில், loongson எனப்படும் மையச் செயலகக் கருவி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பங்கு ஆற்றும் என்றார் அவர்.
ST Micro electronics நிறுவனத்துடனான ஒத்துழைப்பு மூலம், சீனாவின் சொந்த அறிவு சார் சொத்துரிமை கொண்ட loongson எனப்புடம் மையச் செயலகக் கருவி முழு உலகில் பரவல் செய்யப்படும். சீன அறிவியல் கழகமும் ST Micro electronics நிறுவனமும் கையொப்பமிட்ட ஒப்பந்தத்துக்கிணங்க, ST Micro electronics நிறுவனம் loongson மையச் செயலகக் கருவிகளை உற்பத்தி செய்யும். அதேவேளையில், தனது விற்பனை வலைப்பின்னல் மூலம் loongson மையச் செயலகக் கருவியை சர்வதேச சந்தைக்குள் அனுப்பும். தவிர, ST Micro electronics நிறுவனம் சீன அறிவியல் கழகத்தின் கணிப்பு தொழில் நுட்பஆய்வகத்துக்கு தொழில் நுட்ப பயன்பாட்டு கட்டணத்தையும், விற்பனை பங்கையும் வழங்கும். பெரிய வெளிநாட்டு நிறுவனம் ஒன்று சீனாவின் மையச் செயலகக் கருவி பற்றிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவதற்காக சீனாவுக்கு கட்டணம் வழங்குவது இதுவே முதல் முறையாகும்.
ST Micro electronics நிறுவனம் ஆண்டுக்கு 1000 கோடி அமெரிக்க டாலர் விற்பனை தொகை கொண்ட உலகில் புகழ்பெற்ற தகவல் தொழில் நுட்ப நிறுவனமாகும். உலகில் முன்னேறிய உற்பத்தி செயல் முறை நுட்பம் இதற்கு உண்டு. குறைந்த செலவு, குறைந்த எரியாற்றல் பயன்பாடு ஆகிய போட்டி மேம்பாடுகள் loongson 2E கொண்டுள்ளது. இது தமது நிறுவனத்தின் உற்பத்தி பொருட்களுடன் நல்ல பரஸ்பர நிரப்புத் தன்மை வாய்ந்தது என்று ST Micro electronics நிறுவனத்தின் துணைத் தலைமை இயக்குநர் BERTINO தெரிவித்தார். அவர் கூறியதாவது

சீன அறிவியல் கழகத்தின் கணிப்பு தொழில் நுட்ப ஆய்வகத்துடன் ஒத்துழைப்பது பற்றி ST Micro electronics நிறுவனம் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றது. எமது சாதனங்கள், தொழில் நுட்பங்கள் ஆகியவற்றை loongson மையச் செயலகக் கருவியை உற்பத்தில் செய்வதில் பயன்படுத்த விரும்புகிறோம். சீன அறிவியல் கழகத்தின் கணிப்பு தொழில் நுட்ப ஆய்வகத்தின் தேவையை நாங்கள் அறிந்து கொண்டுள்ளோம். நாங்கள் நல்ல ஒத்துழைப்பு கூட்டாளியாக மாறுவோம் என்றார் அவர்.
loongson 2E ஐ அடுத்து, loongson தொகுதி மையச் செயலகக் கருவிகளின் ஆய்வில் சீனா தொடர்ந்து ஈடுபடும். இந்த திட்டப்பணிக்குப் பொறுப்பான ஆய்வாளர் HU WEI WU கூறியதாவது
loongson 2E இன்று மேம்பாட்டு உற்பத்தி பொருளான loongson 2F, ஆகியவை இவ்வாண்டின் பிற்பாதியில் தொகுதியாக உற்பத்தி செய்யப்படும். loongson 2E உடன் ஒப்பிடும் போது, இதற்கு மேலும் அதிகமான பயன் உள்ளது என்றார் அவர்.
தவிர, loongson 3 பற்றிய ஆய்வில் சீனா ஈடுபடும். இந்த வகை மையச் செயலகக் கருவி முக்கியமாக உயர் மின்னாற்றல் கணிணி மற்றும் சேவை வழங்கல் கணிணியில் இல் பயன்படுத்தப்படும்.
1 2