• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-01-30 10:32:19    
இலவசமாக சுரங்கத் தொழிலாளரின் ஆடைகளையும் காலணிகளையும்

cri
உயிரோட்டமான இசை ஒலியுடன், CHEN LA YING அம்மையார் TUN LAN சுரங்கத்தின் நுழைவாயிலுக்கு அருகில் போட்ட தையல் இயந்திரம் டகடகவென்று இயங்கியது. 24 ஆண்டுகளாக, இலவசமாக சுரங்கத் தொழிலாளருக்கு ஆடைகளையும் காலணிகளையும் காலுறைகளையும் தைப்பதில் அவர் உறுதியாக ஈடுபட்டு வருகிறார்.


"ஒவ்வொரு நாளும் காலை 7 மணியளவில் வருகின்றேன். மாலையில் சில சமயம் வருகின்றேன். சில சமயம் வராமல் வீட்டில் தொழிலாளருக்கு காலுறைகளைத் தயாரிக்கின்றேன்" என்றார் CHEN LA YING அம்மையார்.
57 வயதான அவர், நிலக்கரி தோண்டி எடுக்கும் தொழிலாளர் ஒருவரின் மனைவி. தமது கணவர் வேலையிலிருந்து ஓய்வு பெறும் முன், அவர் நாள் முழுவதும் கணவரின் பாதுகாப்பு பற்றி கவலைப்பட்டார். கணவர் ஓய்வு பெற்ற பின், அவரது மகன் சுரங்கக்குழியில் வேலை செய்யத் துவங்கினார். ஆனால், அவர் முன்பு போல் அவ்வளவு கவலைப்படவில்லை. ஏனென்றால், கடந்த சில ஆண்டுகளில், சுரங்கத்திலுள்ள பாதுகாப்பு கருவிகள் அனைத்தும் பெருமளவில் மேம்படுத்தப்பட்டுள்ளன.
47 வயதான FAN XIU HONG என்பவர், நிலக்கரி சுரங்கத்தில் 19 ஆண்டுகளாக வேலை செய்துள்ளார். உடல் சோதனை பணியாளரான அவர், பெரும்பாலான நேரத்தை சுரங்கத்தில் செலவிடுகிறார். சுரங்கக்குழியில் இறங்கும் தொழிலாளர் மீதான அன்றாட பாதுகாப்பு சோதனைக்கு அவர் பொறுப்பேற்கிறார்.


"சுரங்கக்குழியில் நுழையும் முன் தொழிலாளர்கள் சிகரெட்டையும் தீயையும் கொண்டு வருகின்றனரா, விதிக்கப்பட்ட உடையை அணிகின்றனரா என்பவை போன்ற அம்சங்களைச் சோதிக்கின்றேன்" என்றார் அவர்.
நிலக்கரி தோண்டி எடுக்கும் தொழிலாளர்களுடன் ஒப்பிட்டு பார்த்தால், FAN XIU HONGகின் வேலை எளிதாகவே உள்ளது. சுமார் 10 ஆண்டுகளுக்கு முன், உடல் சோதனை, குறைவாக பார்க்கப்பட்ட தொழில் வகையாக இருந்தது. ஆனால் தற்போது, நிலக்கரி சுரங்கப் பாதுகாப்புக்கு சீன அரசு முக்கியத்துவம் தருவதால், FAN XIU HONG போன்ற உடல் சோதனை பணியாளர்கள், பல்வேறு சுரங்கங்களிலும் காணப்படுகின்றனர். TUN LAN சுரங்கத்தின் பொறுப்பாளர் TANG JIANG, செய்தியாளரிடம் பேசுகையில், முறைமை மயமாக்கம், பாதுகாப்பான உற்பத்திக்கான முன்நிபந்தனையாகும் என்று கூறினார்.


"முன்பு, அதாவது 50, 60ஆம் ஆண்டுகளில், அனேகமாக கயிறு ஒன்றைப் பயன்படுத்தி, தொழிலாளர்கள் சுரங்கக்குழியில் இறங்கினர். தற்போது இவ்வாறு செயல்படக் கூடாது. வேலை துவங்கும் முன் இன்றியமையாத பயிற்சி பெற வேண்டும். பாதுகாப்பு பற்றிய அறிவையும், செயல்பாட்டு முறை பற்றிய அறிவையும் கற்றுக் கொள்ள வேண்டும். தேர்வில் வெற்றி கண்டு தகுதிச் சான்றிதழைப் பெற்ற பின்தான் பணியில் ஈடுபட முடியும்" என்றார் அவர்.
சுரங்கத் தொழிலாளர்களுடன் இணைந்து, உடல் சோதனை பணியாளர் FAN XIU HONGகின் சோதனையை ஏற்றுக் கொண்ட பின், 200 மீட்டருக்கு மேல் ஆழமான சுரங்கக்குழிக்குள் செய்தியாளர் நுழைந்தார். குடைவழியில் தானியக்க எச்சரிக்கை கருவி, கண்காணிப்பு கருவி உள்ளிட்ட பல்வகை பாதுகாப்பு தொகுதிகள் காணப்படுகின்றன.
1 2