• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-01-30 10:32:19    
இலவசமாக சுரங்கத் தொழிலாளரின் ஆடைகளையும் காலணிகளையும்

cri

47 வயதான JIA JIN CAI குடைவழி தோண்டுதலுக்குப் பொறுப்பேற்கின்றார். நிலக்கரி தோண்டி எடுப்பதில் இயந்திர மயமாக்கம் நனவாக்கப்பட்டுள்ளதால், பல பணிகள், உடல் உழைப்புக்கு மாறாக இயந்திரங்களால் நிறைவேற்றப்பட்டுள்ளன.
JIA JIN CAI கூறியதாவது—
"பொது மக்களின் கருத்தில், நிலக்கரி சுரங்கத் தொழிலின் ஆபத்து குணகம் உயர்வாக உள்ளது. ஆனால் உண்மையில், மக்களின் எண்ணத்தை விட இது அவ்வளவு ஆபத்தாக இல்லை. பணிச் சுமை ஓரளவு அதிகம் என்ற போதிலும், ஆபத்தானதல்ல" என்றார் அவர்.


தற்போது, நிலக்கரி சுரங்கத் தொழிலாளர், மற்றவரால் அலட்சியம் செய்யப்பட்ட தொழிலாளர் அல்ல. அணுகு முறையிலிருந்து பார்த்தால், அவர்களின் வருமானம், போட்டியாற்றல் கொண்டதாக மாறத் துவங்கியுள்ளது. 2006ஆம் ஆண்டில் TUN LAN நிலக்கரி சுரங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்களின் ஆண்டு நபர்வாரி வருமானம் 30 ஆயிரம் யுவானை நெருங்கியது. உள்ளூர் நகர தொழிலாளர்களின் ஆண்டுக்கு நபர்வாரி வருமானம் 10 ஆயிரம் யுவானுக்கு அதிகம் மட்டுமே.
சுரங்கக்குழியில் தூசி அதிகம் என்பதால், சாதாரண மக்களை விட, சுரங்கத் தொழிலாளர்கள் நுரையீரல் காச நோயால் பீடிக்கப்படும் சாத்தியக்கூறு அதிகம். TUN LAN நிலக்கரி சுரங்கத்தில், காற்றோட்ட மற்றும் தூசி நீக்க சாதனங்களின் பயன்பாட்டினால், தொழில் நோய் ஏற்படும் விகிதம் மிகக் குறைவு. சுரங்கத் தொழிலாளர் ஒருவர் நோய்வாய்ப்பட்டால், தொடர்பான கொள்கைக்கு இணங்க, அவர் காப்பீட்டு நிறுவனம் மூலம் பெரும்பாலான மருத்துவ சிகிச்சை கட்டணத்தை பெறலாம்.
வசிப்பிட நிலைமை பெருமளவில் மேம்பட்டுள்ளமை, இந்தத் தொழிலாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சி தருகிறது. 2000ஆம் ஆண்டில் JIA JIN CAIயின் குடும்பம், அவரது தொழில் நிறுவனம் வழங்கிய வாடகை தொகை குறைவான வீட்டில் குடியேறியது. தற்போது, அவரது தொழில் நிறுவனத்தின் குடியிருப்பு கட்டிடங்கள் அடுத்தடுத்து கட்டி முடிக்கப்பட்டு வருகின்றன. 100 சதுர கிலோமீட்டருக்கு மேற்பட்ட பரப்பளவுடைய புதிய வீட்டை வாங்க JIA JIN CAI திட்டமிட்டுள்ளார். அவர் கூறியதாவது—

"முன்பு, மறு சீரமைக்கப்பட்ட குடிசைக் குடியிருப்பிலுள்ள சிறு வீட்டில் நாங்கள் வசித்தோம். கடந்த சில ஆண்டுகளில், எமது நிறுவனம் முதலீடு செய்து, 10 கட்டிடங்களைக் கட்டியமைக்கத் துவங்கியது. இந்த 10 கட்டிடங்கள் அனைத்தும் கட்டிமுடிக்கப்பட்ட பின், அதிகாரப்பூர்வ தொழிலாளர்கள் அனைவரும் ஆளுக்கொரு வீட்டைப் பெறலாம்" என்றார் அவர்.
JIA JIN CAI, நம்பிக்கை அதிகம் கொண்ட நபராவார். அவரது தந்தை ஓய்வு பெறும் முன் சுரங்கத் தொழிலாளராக வேலை செய்தார். எதிர்காலத்தில் அவரது மகன்கள் சுரங்கத் தொழிலாளராக பணிபுரிய விரும்புகின்றனர். மூன்று தலைமுறையைச் சேர்ந்த அனைவரும் சுரங்கத் தொழிலாளர்களாக இருந்த போதிலும், வாழ்க்கை மற்றும் வேலை நிலை முன்பை விட வித்தியாசமாக மாறியுள்ளது என்று அவர் கூறினார். அவரது மனதில் ஒரு விருப்பம் உள்ளது. எதிர்காலத்தில் தொழில் நுட்பம் முன்னேற்றம் அடைந்து, மேலதிக பணிகள் இயந்திரங்களால் செய்யப்படுவதால், தொழிலாளர்கள் மேலும் பாதுகாப்பாகவும் எளிமையாகவும் வேலை செய்வது மட்டுமல்ல, உற்பத்தி திறனும் பெருமளவில் உயர வேண்டும் என்பதுதான் அவரது விருப்பமாகும்.
1 2