• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-02-04 08:27:48    
எலி ஆண்டின் வணிக வாய்ப்பு

cri

2008ம் ஆண்டு, சீனச் சந்திர நாட்காட்டிபடி எலி ஆண்டாகும். எலி ஆண்டு வரும் போதெல்லாம், எலி வடிவிலான அன்பளிப்புப் பொருட்களை, சிறிய மற்றும் பெரிய பேரங்காடிகளில் காணலாம். எலியைக் கொண்ட ஓவியங்கள் அல்லது எலி வடிவிலான விளையாட்டுப் பொம்மைகள், அலங்காரப் பொருட்கள், வீட்டுப் பயன்பாட்டு மின்சார வசதிகள் ஆகியவை இதில் அடங்கும்.


எலி ஆண்டுடன் தொடர்பான அன்பளிப்புப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள் உள்ளிட்ட வணிகப் பொருட்களை பெய்ஜிங்கில் புகழ் பெற்ற wantong என்ற வணிக மையம் ஒரு விற்பனை செய்கிறது. எலியுடன் தொடர்புடைய அன்பளிப்புப் பொருட்கள் மற்றும் அலங்காரப் பொருட்களை மக்கள் பொதுவாக விரும்புகின்றனர் என்று இக்கடையின் முதலாளியான guowenbin அம்மையார் தெரிவித்தார். அவர் கூறியதாவது: 
எலி வடிவிலான ஓவியங்கள், கம்பளியாலான விளையாட்டுப் பொம்மைகள், தாள் கத்திரிப்புகள் போன்ற அன்பளிப்புப் பொருட்கள் மிகவும் வரவேற்கப்பட்டு வருகின்றன. துணியாலான எலிகளை பொது மக்கள் மிகவும் விரும்புகின்றனர். பெரும் வரங்களைக் கொண்டு வரும் வகையில், இத்தகைய எலி வடிவிலான பொருட்களை மக்கள் வாங்க விரும்புகின்றனர் என்றார் அவர்.


கடந்த 5 ஆண்டுகள், புத்தாண்டு தொடர்பான அன்பளிப்புப் பொருட்களை chenlei என்பவர் விற்பனை செய்து வருகின்றார். ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் மற்றும் துவக்கத்திலும், அவர் புத்தாண்டு அன்பளிப்புப் பொருட்களை விற்பனை செய்கின்றார். 2007ம் ஆண்டு நவம்பர் திங்கள் முதல், தொடர்புடைய தொழில் நிறுவனங்களிலிருந்து எலி தொடர்பான விளையாட்டுப் பொம்மைகளையும் கைவினை பொருட்களையும் வாங்க
எனது கடையில் எலி தொடர்பான விளையாட்டுப் பொம்மைகள் அதிகமாக விற்கப்பட்டு வருகின்றன.

 இந்த பொருட்களை எல்லாம் தொழிற்சாலையிலிருந்து நான் நேரடியாக வாங்கினேன். எல்லா வகையான எலி விளையாட்டுப் பொம்மைகளும் இங்கு உள்ளன. எடுத்துக்காட்டாக, மின்சார எலி விளையாட்டுப் பொம்மைகள், மங்கலத்தை குறிக்கும் சிறிய எலி கைவினைப் பொம்மைகள் ஆகிய அனைத்தும் இங்குள்ளன என்றார் அவர்.
மின்சார எலி விளையாட்டுப் பொம்மைகள், இக்கடையில் மிகவும் வரவேற்கப்படும் அன்பளிப்புப் பொருட்களில் ஒன்றாகும். இத்தகைய எலி அன்பளிப்புப் பொருட்கள், மின்சாரக்குமிழ்களை கொண்டிருப்பதோடு, இனிமையான இசையையும் ஒலிக்கிறது. எலியின் உடல் பகுதி, இசைக்கேற்ப அசைந்தாடும். எனவே, இவ்வகையான எலி பொருட்கள் மக்களால் வரவேற்கப்பட்டு, வினியோகத்தை விட தேவை அதிகமாகும் நிலையில் அமைந்துள்ளன என்று அவர் கூறினார்.

1 2