• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-02-04 08:27:48    
எலி ஆண்டின் வணிக வாய்ப்பு

cri

wantong வணிகப் பொருட்கள் மையத்தின், ஒரு வாடிக்கையாளர் sunping அம்மையார் பல கடைகளில் அலைந்து திரிந்துவிட்டு, எலி வடிவிலான கம்பளி அன்பளிப்புப் பொருட்களைக் கூர்மையாக பார்த்து தேர்ந்தெடுத்தார். அவர் கூறியதாவது:


என் தோழிகள் சிலர், இவ்வாண்டில் குழந்தைகள் பெற்றெடுக்க உள்ளனர். எனவே, அவர்களுக்கு அன்பளிப்புப் பொருட்களை நான் வாங்க விரும்புகின்றேன். குழந்தைகள் ஆர்வம் கொள்ளும் எலி வடிவிலான கம்பளிப் பொம்மைகள் அல்லது அது தொடர்பான விளையாட்டுப் பொம்மைகள் அன்பளிப்புக்கு மிகவும் பொருத்தமானவை. எலி ஆண்டான இவ்வாண்டில், இத்தகைய அன்பளிப்புப் பொம்மைகளை வாங்கி, அம்மாவாகும் எனது தோழிகளுக்கு அளிக்க நான் திட்டமிட்டிருக்கிறேன் என்றார் அவர்.
அலங்கரப் பொம்மைகள் மற்றும் விளையாட்டுப் பொம்மைகள் தவிர, சீனச் சந்தையில், தங்க நினைவு காசுகள், எலியுடன் தொடர்புடைய வணிகப் பொருட்களில் மிகவும் வரவேற்கப்படுகின்றன. இவ்வகை காசுகள், குறிப்பிட்ட அளவில் வினியோகிக்கப்படுள்ளன. ஒவ்வொரு வகை காசுகளும், தெளிவான நினைவு தலைப்புகள் மற்றும் மென்மையான அழகு ஓவியங்களைக் கொண்டுள்ளன. அவற்றால், எலி ஆண்டின் தங்க நினைவுக் காசுகள், தங்கக் கம்பிகள் முதலியவை, பல முதலீட்டானர்களால் அதிகமாக வரவேற்கப்பட்டு வாங்கப்படுகின்றன.
சீன எண்ணெய் வேதியியல் தொழிற்துறைக் குழுமத்தில் வேலை செய்யும் lizhongren, பெய்ஜிங் மாநகரத்தின் caishikou என்ற பல பொருள் விற்பனைக் கடையில் எலி ஆண்டின் நினைவு தங்க காசுகளை வாங்கினார். அவர் கூறியதாவது:
இந்நினைவுத் தங்கக் காசுகளை நான் வாங்குகிறேன். ஏனென்றால், நான் எலி ஆண்டில் பிறந்தேன். இப்புத்தாண்டான எலி ஆண்டு எனக்குப் பெரும் வரங்களை கொண்டு வரலாம். தவிரவும், தங்கத்தில் முதலீடு செய்ய நான் விரும்புகின்றேன் என்பது மிக முக்கியமானது என்றார் அவர்.


தங்க நினைவுப் பொருட்கள் தவிர, பல தங்கமுலாம் பூசுப்பட்ட எலி வடிவிலான நினைவுப் பொருட்கள் மிகவும் வரவேற்கப்படுகின்றன. இந்தச் சிறந்த வணிக வாய்ப்பை, கணினி மையங்கள் பல இறுகப்பற்றியுள்ளன. தங்களது இணைய மையங்களில் பல தங்கமுலாம் பூசுப்பட்ட எலி வடிவிலான கைவினைப் பொருட்களை நண்பர்களை கவருவதற்கு வைத்துள்ளனர் என்று சிறிய அன்பளிப்புப் பொருட்களை விற்பனை செய்யும் கடைக்காரரான gaopeng கூறினார். அவர் கூறியதாவது: 
இவ்வாண்டு தங்கத்தால் தயாரிக்கப்பட்ட பல எலி தொடர்பான பொருட்களை நான் வாங்கியுள்ளனேன். செல்வ செழிப்பை கொண்டு வருவதாக எண்ணப்படும் தங்க எலி கைவினைப் பொருட்கள், மிக அதிக விலையான கைவினை பொருட்களில் ஒன்றாகும். தங்க எலி கைவினைப் பொருளின் விலை 900 யுவான் மதிப்பாக இருந்த போதிலும், பொது மக்கள் மிகவும் விருப்பத்தோடு வாங்குகின்றனர் என்றார் அவர்.
இக்கடைக்காரரின் வாடிக்கையாளர்களில், சிலர் எலி கைவினைப் பொருட்களை வீட்டில் காட்சிக்கு வைக்கின்றனர். சிலர் அன்பளிப்புப் பொருட்களாக கொடுக்கின்றனர். ஒரு திங்களில், ஏறக்குறைய 30 தங்கமுலாம் பூசுப்பட்ட எலி கைவினைப் பொருட்களை இக்கடைக்காரர் வாங்கியுள்ளார். வெகுவிரைவில் இப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதோடு, அதன் மூலம், அதிகமான வருவாயும் அலருக்கி கிடைக்கும். இதனால்தான், அவர் மேலதிகமான எலிப் பொருட்களை வாங்கத் திட்டமிட்டுள்ளார்.


2007ம் ஆண்டின் இறுதில், அம்மா செல்லமாக வளர்க்கும் ஒர் இணை எலிகளை வாங்கி, புத்தாண்டு அன்பளிப்புப் பொருளாக அளித்ததாக 9 வயதான சிறுமி lele கூறினார். அவர் கூறியதாவது:
எலி ஆண்டு வரும் போது, என் அம்மா ஒர் இணை எலிகளை வாங்கியுள்ளார். அவை மிகவும் சுறுசுறுப்பாக இருக்கின்றன. நாள்தோறும், நான் அவற்றை குளிக்கச் செய்து, உணவு தின்னச் செய்கிறேன் என்றார் அவர்.
சீன மக்களின் மனதில், எலி மோசமான புகழைக் கொண்டு வருகிறது என்ற எண்ணம் உள்ளது. ஆனால், இவ்வாண்டில் எலி தோற்றத்தை மாற்றி, மக்களுக்கு அளவுக்கு மீறிய மகிழ்ச்சியையும் பல வணிக வாய்ப்புகளையும் கொண்டு வருகின்றன என்று எண்ணப்படுகிறது.


1 2