• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-02-05 08:22:27    
நீரிழிவு நோய்

cri
நீரிழிவு நோய் நமது வாழ்க்கையில் காணப்படும் தீரா நோய்களில் ஒன்றாகும். மனித உடம்பில் insulin பற்றாக்குறை அல்லது உடம்பில் insulin பயன் செய்ய முடியாததால் ஏற்படும் தீரா நோய் இதுவாகும். தற்போது சீனாவில் 5 கோடி நீரிழிவு நோயாளிகள் உள்ளனர். உலகில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கையில் இது சுமார் 20 விழுக்காடாகும். இது மட்டுமல்ல, கடந்த சில ஆண்டுகளாக, சீனாவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிக்கும் போக்கு காணப்பட்டுள்ளது.
நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தி, நீரிழிவு நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை அளிக்கும் பணியைச் செவ்வனே செய்யும் பொருட்டு, கடந்த 3 ஆண்டுகளாக, சீன சுகாதார அமைச்சகமும், சீன மருத்துவ சங்கமும் 23 மாநிலங்களிலும் நகரங்களிலும் அடி நிலை மருத்துவர்களுக்கு இத்துறையிலான பயிற்சியை அளித்துள்ளன. அதேவேளையில், இப்பிரதேசங்களில் உள்ளூர் மக்களுக்கிடையில் நீரிழிவு நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை பற்றிய அறிவுகளைப் புகட்டியுள்ளன.


நீரிழிவு நோய் தீரா நோய்களில் ஒன்றாகும். தற்போது, நீரிழிவு நோயாளிகளை முற்றிலும் குணம் அடைய செய்ய முடியாது. ஆனால், அறிவியல் முறையிலும் உரிய முறையிலும் சிகிச்சை அளித்தால், நோய் நிலையை நன்றாகக் கட்டுப்படுத்தலாம். ஆகையால், கூடிய விரைவில் நீரிழிவு நோய் இருப்பதை உறுதிப்படுத்தி, சிகிச்சை அளிப்பது நீரிழிவு நோயாளிகளுக்கு மிக முக்கியமானது. சீன மருத்துவ சங்கத்தின் துணைத் தலைவர் Wu ming jiang கூறியதாவது
நீரிழிவு நோய் இருப்பது, உறுதிப்படுத்தப்பட்ட பின் சிகிச்சை அளிக்கப்படலாம். மருத்துவர்களின் சிகிச்சை தரத்தை மேலும் உயர்த்தி, நோயாளிகளுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிப்பது, இந்த நோய் மற்றும் இதன் இணைப்பு நோய்களின் பாதிப்பைக் குறைப்பதற்கு மிகவும் முக்கியமானது. இந்நோயால் ஏற்பட்ட உடல் சீர்குலைவு மற்றும் உயிர் இழப்பு விகிதத்தையும் குறைக்கலாம் என்றார் அவர்.
சீனாவில் மக்களின் வாழ்க்கை தரம் இடைவிடாமல் உயர்வதுடனும், மக்களின் வாழ்க்கை முறையின் மாற்றத்துடனும், நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. 1979ம் ஆண்டில், நீரிழிவு நோயாளிகள் 0.67 விகிதம் மட்டுமே. 1996ம் ஆண்டு, இது 3.6 விழுக்காடாக உயர்ந்துள்ளது. தற்போது, சில பிரதேசங்களில் இது 5 விழுக்காட்டைத் தாண்டியுள்ளது. மருத்துவமனை மற்றும் மருந்து ஆய்வகத்துக்கான ஆதரவை அதிகரித்து, நீரிழிவு நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை ஆற்றலை உயர்த்த சீன அரசு நிதி ஒதுக்கீட்டை அதிகரித்து வருகின்றது. ஆனால், இந்நோயின் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கான மூலவளம் முக்கியமாக பெரிய நகரங்களில் குவிந்து கிடக்கிறது. சிறிய மற்றும் நடுத்தர நகரங்களில், குறிப்பாக, கிராமப்புறங்களில் உள்ள மருத்துவர்களுக்கு இந்நோய் பற்றிய புதிய அறிவும், புதிய தொழில் நுட்பமும் மிகவும் குறைவு.
2004ம் ஆண்டு, உடல் நலத்துக்கான புதிய நெடுந்தூர நடை என்னும் நடவடிக்கையை சீன சுகாதார அமைச்சகமும், சீன மருத்துவச் சங்கமும் கூட்டாக ஏற்பாடு செய்தன. அடி நிலை பிரிவுகளில் நீரிழிவு நோய் பற்றிய கல்வியை பிரச்சாரம் செய்வது இந்நடவடிக்கையின் நோக்கமாகும். சில நூறு நிபுணர்கள் 23 மாநிலங்கள் மற்றும் நகரங்களுக்குச் சென்று, நகரங்களிலும் கிராமப்புற மருத்துவமனைகளிலும் பயிற்சி அளித்து வழிகாட்டினர். அவர்கள் மிக புதிய நீரிழிவு நோய்க்கு சிகிச்சை அளிக்கும் தொழில் நுட்பத்தைப் பரவல் செய்து, உள்ளூர் மருத்துவர்களின் சிகிச்சையளிக்கும் ஆற்றலை உயர்த்தியுள்ளனர். சீனாவின் தெற்கு பகுதியிலுள்ள குவான் துங் zhu jiang மருத்துவமனையின் பேராசிரியர் chen hong இந்த நிபுணர்களில் ஒருவராவார். அவர் கூறியதாவது
அடி மட்ட பிபிவுகளில் மருத்துவர்களுக்கு நீரிழிவு நோய் பற்றிய அறிவு மிக குறைவு என்பதைக் கண்டுப்பிடித்துள்ளேன். அங்கு நீரிழிவு நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை பணியின் பயனை இது நேரடியாக பாதித்துள்ளது என்றார் அவர்.
1 2