பயிற்சியில் கலந்து கொண்ட அடி நிலை மருத்துவர்கள் இந்நடவடிக்கையை மிகவும் வரவேற்றனர். இத்தகைய குறிப்பிட்ட நோக்கம் கொண்ட, அடி பிரிவுகளுக்கு ஏற்ற நடவடிக்கைகள் சிறிய மற்றும் நடுத்தர நகரங்களுக்கும் கிராமப்புறங்களுக்கும் மிகவும் அவசியமாகின்றன. அங்குள்ள மருத்துவர்களின் சிகிச்சை தரத்தை இவை உயர்த்தி, சிகிச்சை தொழில் நுட்பத்தை முறைமைப்படுத்துகின்றது என்று அவர்கள் கருதுகின்றனர். மேற்கு பகுதியிலுள்ள கான் சு மாநிலத்தின் lin xia மாவட்டத்தின் மக்கள் மருத்துவமனையின் மருத்துவர் hu zheng qiang கூறியதாவது,
இந்த அடி நிலை பிரிவுக்கான பயிற்சி நீரிழிவு நோய் பற்றிய நமுடைய அறிவை பெரிதும் உயர்த்தியுள்ளது. இந்நோய்க்கு சிகிச்சை அளிப்பது பற்றிய பல புதிய அறிவையும் வழிமுறைகளையும் பயிற்சி மூலம் பெற்றுள்ளோம். இதில் கலந்து கொண்ட மருத்துவர்களாகிய நாங்கள் பயிற்சியிலிருந்து அதிக பயன் பெற்றுள்ளோம் என்றார் அவர். ஜுன் திங்கள் உடல் நலத்துக்கான நெஞ்தூர் நடை என்னும் நடவடிக்கை முடிவடைந்தது வரை, 1200க்கும் அதிகமான அடி நிலை மருத்துவ பிரிவுகள் இதில் கலந்து கொண்டன. 32 ஆயிரத்துக்கு அதிகமான மருத்துவர்கள் பயிற்சி அளிக்கப்பட்டனர். இந்நடவடிக்கைக்கான நிபுணர் குழுவின் முதன்மை நிபுணர் பேராசிரியர் xu zhang rong கூறியதாவது இந்த நடவடிக்கை சுமார் ஒரு இலட்சம் கிலோமீட்டர் தூரத்தை கடந்து 30 ஆயிரத்துக்கு அதிகமான அடி நிலை பிரிவு மருத்துவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளது. இத்தகைய பயிற்சி முன்பு அவர்களுக்கு கிடைப்பதர்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்றார் அவர்.

உடல் நலத்துக்கான நெடுஞ்தூர நடை என்னும் நடவடிக்கை மாபெரும் வெற்றி பெற்றுள்ளது என்று சீனச் சுகாதார அமைச்சின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு பிரிவின் துணைத் தலைவர் kong ling zhi அம்மையார் தெரிவித்தார். இதன் அனுபவங்களை உரிய முறையில் தொகுத்து, இதன் கனிகளை மேலும் அதிகரிக்க வேண்டும். நீரிழிவு நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை பற்றிய அறிவை வழங்கும் இத்தகைய பயிற்சி வகுப்பை அடி நிலை மருத்துவர்களிடையில் மேலும் ஆழமாகவும் நீண்டகாலமாகவும் நடத்த வேண்டும் என்று அவர் கூறினார். 1 2
|