கலை.......இப்போது சீனப் பண்பாடு நிகழ்ச்சி நேரம். க்ளீட்டஸ்....... சீனாவின் சந்திரன் நாட்காட்டியின் படி பெப்ரவரி 7ம் நாள் சீன மக்கள் மிகவும் கவனம் செலுத்தும் விழாவான வசந்த விழா நாளாகும். கலை......ஆமாம். வசந்த விழா சீன மக்கள் மிகவும் ஆர்வத்துடன் கொண்டாடும் முக்கிய விழாவாகும். க்ளீட்டஸ்.......எனக்கு புரிந்தது. சீன நடுவண் அரசு மக்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் விழா நாட்களை சரிப்படுத்தி புதிய விதிகளை இவ்வாண்டு முதல் நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளது. கலை.......நீங்கள் குறிப்பிட்டது சரிதான்.
க்ளீட்டஸ்...........கலை. வசந்த விழா சீனாவின் விழாக்களில் மிக முக்கிய தேசிய அளவிலான விழாவாகும். அப்போது மக்கள் எந்த வடிவத்தில் இதை கொண்டாடுவார்கள். கலை........வசந்த விழா அரசின் புதிய தீர்மானத்தின் படி 7 நாட்கள் நீடித்திருக்கும். க்ளீட்டஸ்........விழா நாட்களில் கலைநிகழ்ச்சி கொண்டாட்டம் உண்டா. கலை......கண்டிப்பாக. இந்த கலை நிகழ்ச்சிகள் முக்கியமாக நகரின் முக்கிய பெரிய பூங்காக்களில் நடைபெறும். எடுத்துக்காட்டாக பெய்ஜிங் மாநகரிலுள்ள டித்தான் பூங்கா, தியென் தான் பூங்கா, தாக்குவேன்யுவான் பூங்கா, பையூன்குவான் கோயில் போன்ற இடங்களில் விழா கொண்டாட்ட நடவடிக்கைகள் நடைபெறும். க்ளீட்டஸ்..........கலை நிகழ்ச்சி கொண்டாட்டம் தவிர, சீன மக்களிடையில் எந்த வகை உணவு உட்கொள்வதுடன் கொண்டாட்டத்துடன் தொடர்புடையது கொஞ்சம் விளக்குவீர்களா கலை.......நீங்கள் சரியான கேள்வி கேட்டீர்கள். உணவு உட்கொள்வதன் மூலம் விழாவை கொண்டாடும் வழிமுறை சீனச் சமூகத்தின் பண்பாடாகும்.
க்ளீட்டஸ்......அதிலே மக்களுக்கு மிகவும் பிடித்த உணவு வகை என்ன? கலை......கண்டிபாக சியௌச்சு தான். க்ளீட்டஸ்...........சியௌச்சு என்பது என்ன வகை உணவு. கலை....சியௌச்சு என்பது கோதுமை மாவில் தயாரிக்கப்பட்ட டம்ப்லிங்களாகும். இது சீன மக்களின் வசந்த விழா கொண்டாட்டத்தின் பழக்கவழக்கமாக மாறியது. க்ளீட்டஸ்.......சியௌச்சு பற்றி கொஞ்சம் கூடுதலாக சொல்லுங்கள். .........இசை...........喜洋洋音乐.............. கலை......மகிழ்ச்சி. சியௌச்சு என்றால் கோதுமை மாவில் தயாரிக்கப்பட்ட சப்பாத்தியை விட, மெல்லிய மாவுத் தோலில் காய்கறி மற்றும் இறைச்சி கொண்ட உருண்டையை வைத்து, நன்றாக ஒட்டி கொதித்த வெண்ணீரில் வேகவைக்கப்பட்ட ஒரே வகை உணவு பொருளாகும்.
க்ளீட்டஸ்..............ஒரு மூச்சில் சியௌச்சு பற்றி சொன்னீர்கள். அதன் எதிர்கால அதிர்ஷடம் எப்படி காட்டுகின்றது. கலை..... பிறை வடிவத்தில் பண்டைய சீனாவில் பயன்படுத்தப்பட்ட நாணயம் போல் சியௌச்சு செல்வமாக சீன மக்களால் கருதப்படுகின்றது. இதில் காய்கறி உருண்டை இருந்தால் சீன மக்களிடையில் இது மீண்டும் ஒன்று கூடுதல் என்று பொருள்படுகின்றது. வசந்த விழா நாட்களில் சியௌச்சு உட்கொள்வது புத்தாண்டில் மீண்டும் ஒன்று கூடுவதென்ற விருப்பத்தைக் குறிக்கின்றது. க்ளீட்டஸ்......நீங்கள் விளக்கிய பின் இதை சமைத்து பார்க்கும் ஆர்வம் அதிகரிக்கிறது. நான் குடும்பத்துடன் இந்த ஆண்டின் வசந்த விழாவை பெய்ஜிங்கில் கொண்டாடுவேன். அப்போது நாங்கள் கடையில் சௌச்சு வாங்கி சோதனை முறையில் உட்கொள்வோம். கலை......நல்ல செய்தி. ஆனால் க்ளீட்டஸ் இதை உட்கொள்ளும் முறை தெரியுமா. க்ளீட்டஸ்........இல்லை கலை. அதை பற்றி சொல்லுங்கள். கலை.......சீன மக்கள் சியௌச்சு உட்கொள்வதில் பல நடைமுறைகள் உண்டு. இதற்குத் தேவையான இறைச்சி, காய்கறிகள், கோதுமை மாவுச் சப்பாத்தி, உருவாக்கும் வழிமுறை மற்றும் வடிவம் கண்டிப்பான முறையில் நடைமுறைபடுத்தப்பட வேண்டும். க்ளீட்டஸ்.......கலை நீங்கள் சொன்னது அசைவ உணவு பொருட்கள் தான். சைவ உணவு உண்பவர்கள் எப்படி இதை சமாளிக்க முடியும்.
1 2
|