• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-02-14 10:23:27    
சீனாவின் சியௌச்சு

cri

கலை.......கவலைப்படாதீர்கள். சியௌச்சு தயாரிக்கும் போது உங்களுக்கு பிடித்த காய்களை உள்ளே வைக்கலாம். இறைச்சி இல்லாத நிலையில் கொஞ்சும் உணவு எண்ணெய் மற்று முட்டை வையுங்கள். அப்போது சியௌச்சு சுவை கிடைக்கும்.
க்ளீட்டஸ்.............அசைவ சியௌச்சு எப்படி தயாரிப்பது. அதை பற்றி விளக்கிக் கூறுங்கள்.
கலை......மகிழ்ச்சி. தேவைப்படும் பொருட்களில் இறைச்சி, காய்கறிகள் ஆகியவற்றை நுணுக்கமாக தேர்வு செய்து மரத் துண்டு பலகையின் மேல் வைத்து நன்றாக நறுக்கிக் கொள்ள வேணடும்.
க்ளீட்டஸ்........கலை ஒரு நிமிடம். சியௌச்சுக்கென தயாரிக்கும் போது காய்களை வெட்டும் போது எழும் சத்தம் பற்றி ஏதோ கதை இருக்கின்றது. அப்படிதானே.


கலை......ஆமாம். இது பற்றிய கதையை சொல்வேன். வெட்டு பலகையில் கத்தியால் காய்கறியை துண்டுத் துண்டாக வெட்டும் போது எழும் சத்தம் ப்பன் ப்பன் என்று ஒலிக்கின்றது. சொந்த வீட்டில் காய்கறிகளை துண்டு துண்டாக வெட்டும் போது சத்தம் உரக்க ஒலிக்க வேண்டும் என்று மக்கள் பொதுவாக ஆசைப்படுகின்றனர். ஏனென்றால் காய்கறித் துண்டுகளை வெட்டும் போது ஒலிக்கும் சத்தம் சீன மொழி உச்சரிப்பில் பாஃ பாஃ என்று ஒலிக்கின்றது. இந்த பாஃ சீன மொழியில் செல்வம் என்று பொருள்படுகினறது.
க்ளீட்டஸ் ...........அப்படியிருந்தால் யாருடைய குடும்பத்தில் காய்கறி வெட்டும் சத்தம் நீண்ட ேரம் ஒலிக்கின்றதோ அந்த வீட்டில் வளம் பொங்கி நிறையும் என்று கருதம் அப்படித்தானே.
கலை.......ஆமாம்.

க்ளீட்டஸ்.........சியௌச்சு உருவாக்கிய பின் எப்படி வேகவைக்க வேண்டும். இதில் செய்முறை கண்டிப்பாக பின்பற்ற வேண்டி உள்ளது என்று நினைக்கின்றேன்.
கலை.......ஆமாம். சியௌச்சு தயாரிக்கபட்ட பின் பாத்திரத்தில் நீரை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். சியௌச்சுவை தனித்தனியாக தண்ணீரில் போட வேண்டும். பின் கரண்டியால் பாத்திரத்தில் சியௌச்சுக்களை மெதுவாக கலக்க வேண்டும். இதன் மூலம் சியௌச்சுக்கள் பாத்திரத்தில் கீழே வீழாது. தண்ணீரில் வேகவைக்கப்படும் போது மூன்று முறை தண்ணீர் ஊற்ற வேண்டும். மறு செயல்பாடு செல்வம் மீண்டும் திரும்புவதாக பொருள்படுகின்றது.
க்ளீட்டஸ்.......இதை சமைக்கும் நேரம் எவ்வளவு நீளம்.
கலை.......குறுகிய நேரம் தான். அதாவது 10 நிமிடம் சியௌச்சு பாத்திரத்தில் வேகவைக்கப்பட்ட பின் சியௌச்சுகள் நன்றாக சமைக்கப்படுகின்றன.
க்ளீட்டஸ்........முன்பு 20 நிமிடம் தேவை என்று கேட்டறிந்தேன். ஏன் இந்த முறை 10 நிமிடம் மட்டும் போதும்.
கலை....... தண்ணீர் சூடாகும் நேரத்தை சேர்த்தால் 20 நிமிடம் தேவை.
க்ளீட்டஸ்.......எனக்கு புரிந்தது.
கலை.......சியௌச்சுகள் வேகவைக்கப்பட்ட பின் உட்கொள்ள வேண்டும். அப்போது குடும்பத்தினர்கள் தனித்தனியாக தட்டு வைத்துக் கொண்டு மற்றவர் உட்கொண்ட சியௌச்சுகளின் உள்ளே எந்தப் பொருள் இருக்கின்றது என்பதை பார்க்க வேண்டும்.
க்ளீட்டஸ்..........இது என்ன வழக்கம்.


கலை.......பேரீச்சம் பழம் சியௌச்சு உள்ளே வைக்கப்பட்டால் புத்தாண்டில் வாழ்க்கை தேன் போல இனிக்கும் என்ற நம்பிக்கை உண்டு. காசு இருந்தால் புத்தாண்டில் செல்வம் வரும் என்ற நம்பிக்கையும் உண்டு. ஆகவே மக்கள் பொதுவாக சியௌச்சு உட்கொள்வதற்கு முன் உள்ளே இருப்பதை சரிபார்ப்பது வழக்கம்.
.................இசை...............
க்ளீட்டஸ்........சீனா விசாலமான நிலப்பரப்பு கொண்ட நாடு. ஆகவே சியௌச்சு உட்கொள்ளும் வழக்கமும் வித்தியாசப்படும். அப்படிதானே.
கலை......ஆமாம். எடுத்துக்காட்டாக சீனாவின் மத்திய பகுதியிலுள்ள ஹே நான் மாநிலத்தில் மக்கள் வசந்த விழா நாட்களில் சியௌச்சு உட்கொள்ளும் போது நூடுல்ஸை சியௌச்சுக்களுடன் சேர்த்து வேக வைக்க வேண்டும். அதாவது தங்க நூலால் காசுகளை சேர்க்க வேண்டும் என்று மக்கள் ஆசைப்படுகின்றனர்.
க்ளீட்டஸ்........சியௌச்சு சீன விழா பண்பாட்டில் ஒரு பகுதியாக கருதப்படுகின்றது. சீனாவுக்கு வந்த அன்னிய நண்பர்கள் சீனாவில் சியௌச்சு உட்கொள்ளா விட்டால் சீனாவின் உண்மையான உணவுப் பொருட்களை உட்கொள்ள வில்லை என்று உணர்ந்து கொள்வர்.
கலை......ஆகவே பொதுவாக சீன மக்களுடன் சேர்ந்து விழாவை கொண்டாடும் வகையில் அவர்களுடைய சீன நண்பர்கள் அவர்களை அழைப்பர்.


க்ளீட்டஸ்.......அப்போது அவர்கள் சீன நண்பர்களுடன்
சியௌச்சுகளை உட்கொள்வதன் மூலம் வசந்த விழாவை கொண்டாடுகின்றனர். மங்கலம், இன்பம், அமைதி, பாதுகாப்பு ஆகியவை சியௌச்சு உட்கொள்வதோடு இணைக்கப்படுகின்றன.
கலை.....நண்பர்களே சீனாவில் வசந்த விழா கொண்டாடும் போது சியௌச்சு உட்கொள்ளும் வழக்கம் பற்றி விளக்கிக் கூறினோம்.
க்ளீட்டஸ்......வாய்ப்பு இருந்தால் சீனாவுக்கு வரும் போது சியௌச்சு உட்கொள்வதை மறக்காமல் இருக்க வேண்டும் என்பதை நினைவு கூறுகின்றோம்.
கலை......நிகழ்ச்சியை கேட்டு கருத்து தெரிவிப்பதற்கு மிக்க நன்றி.
க்ளீட்டஸ்......முன்கூட்டியே சீன வசந்த விழாவுக்கான வாழ்த்துக்களை கூறிக் கொள்கிறோம்.


1 2