ஹுநான் மாநிலத்தின் ஷௌஷானிலான சுற்றுலா
cri
ஷௌஷான், சீனாவின் நடுவிலுள்ள ஹுநான் மாநிலத்தின் ஒரு மாவட்ட நிலை நகரமாகும். இது, நவ சீனாவின் நிறுவனர் மா சே தூங்கின் பிறந்த ஊர் ஆகும். போக்குவரத்து வசதியின்மை, மக்கள் தொகை குறைவு ஆகியவற்றால், உள்ளூர் பொருளாதாரம், மந்தமாக வளர்ந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக, அங்குள்ள சிறப்புகளைப் பயன்படுத்தி, பொருளாதாரத்தை வளர்ப்பது எப்படி என்று, ஷௌஷான் ஆக்கப்பூர்வமாக ஆராய்வு செய்தது. சுற்றுலாவை வளர்ப்பதன் மூலம், பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றும் வழிமுறைகளை அது கண்டறிந்துள்ளது.
நீங்கள் இப்பொழுது கேட்கின்ற பாடல், சீன மக்கள் தலைவர் மாவைப் பாராட்டும், அனைவருக்கும் தெரிந்த ஒரு பாடலாகும். ஷௌஷான், சீன மக்களால் தலைவரின் ஊர் என்று அழைக்கப்பட்டு, சீனாவில், புகழ்பெற்றதாக இருக்கிறது. பலர், அங்கு சுற்றுப் பயணம் செய்து, தலைவர் மா முன்பு வாழ்ந்த இடத்தின் சுற்றுச்சூழலை அறிந்து கொள்கின்றனர். புரட்சிகர நினைவு இடங்கள், நினைவுப் பொருட்கள், அவற்றின் புரட்சிகர எழுச்சி ஆகியவற்றைப் பயன்படுத்தி, பார்வையிட பயணிகளை ஈர்ப்பது, சீனாவில் புரட்சிகர புனித இடங்களிலான சுற்றுலா என அழைக்கப்படுகிறது. இப்படியான சுற்றுலா, அங்கு பெரிய அளவில் மேம்பட்டதை, சில ஆண்டுகளுக்கு முன், ஷௌஷான் உள்ளூர் அரசு, அறிவு கூர்மையுடன் கண்டறிந்தது. இம்மேம்பாட்டைப் பெரிதும் வெளிக்கொணர்ந்து ஷௌஷானின் சுற்றுலாவை சீனாவின் புரட்சிகர புனித இடங்களிலான முதல் தர சுற்றுலா இடமாக மாற்ற வேண்டும் என்று உள்ளூர் அரசு, ஆக்கப்பூர்வ ஆராய்ச்சிகள் மூலம், தீர்மானித்தது. மா சே தூங் நினைவு மண்டபம், ஷௌஷான் புரட்சிகர சுற்றுலா இடங்களிலுள்ள முக்கிய காட்சித்தலமாகும். இம்மண்டபத்தின் உள் புறம், விசாலமாகவும், சுத்தமாகவும் இருக்கிறது. இதிலுள்ள வசதிகள் முழுமையாக உள்ளன. அங்கு, கணினி மூலம் தகவல் ஆலோசனை பெறும் முறைமை இருக்கிறது. இம்மண்டபம், தகவல் ஆலோசனையை பயணிகளுக்கு இலவசமாக விளக்கிக் கூறும் சேவையை வழங்குகிறது.
மா சே தூங், விவசாயியின் குழந்தையாக இருந்து உறுதியான மார்க்சிசவாதியாக மாறிய போக்கை, இக்காட்சி இடம், முக்கியமாக அறிமுகப்படுத்துகிறது. கடந்த சில ஆண்டுகளாக, சீனாவின் புரட்சிகர புனித சுற்றுலா இடங்களில் முதல்தரமானதாக இதனை மாற்ற வேண்டும் என்ற குறிக்கோளை நனவாக்குவதற்கு, ஷௌஷான் அரசு, அறிவியல் பூர்வமான வளர்ச்சித்திட்டத்தின் மூலம், சுற்றுலாவின் பொருளாதாரக் கட்டுமானத்துக்கு வழிகாட்டியுள்ளது. அதே வேளையில், அடிப்படை வசதி கட்டுமானம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பணியாளர்களின் கல்வி அறிவு முதலிய துறைகளிலும், ஈடுபாடு காட்டியுள்ளது. இந்த ஐந்து ஆண்டுகளில், ஷௌஷான் உயர்வேகத்தில் வளர்ந்துள்ளது என்று அங்குள்ள அரசு அதிகாரி Mao Yushi கூறினார். அவர் மிகுந்த விருப்பத்துடன் இவ்வாக்கியம் பற்றி பிறரிடம் எடுத்துகூறினார். ஷௌஷான் சுற்றுலாப் பொருளாதார அளவிலான வளர்ச்சியின் சாட்சியும் அதனை அனுபவிப்பவரும் அவரே. அவர் கூறியதாவது,
முன்பு, இங்கு 3 நட்சத்திர ஹோட்டல் இல்லை. இப்பொழுது, Hualong, Desheng, ஷௌஷான் முதலிய ஹோட்டல்கள் இருக்கின்றன. அவற்றின் சேவை மற்றும் உபசரிக்கும் பண்பு, மேலும் உயர்ந்துள்ளன என்று அவர் கூறினார். 3 ஆண்டுகளுக்கு முன், ஷௌஷான் உள்ளிட்ட பல புரட்சிகர நினைவு இடங்களிலுள்ள அடிப்படை வசதிகளின் கட்டுமானத்தை ஆதரிப்பதற்காக, சீன நடுவண் அரசு 30 கோடி யுவான் ரென்மின்பியை ஒத்துக்கீடு செய்தது. இதை வாய்ப்பாகக் கொண்டு, மா சே தூங் வெண்கல உருவச் சிலைச் சதுக்கம், மா சே தூங்கின் பழைய இல்லம், அவரது நினைவு மண்டபம் ஆகிய காட்சித்தலங்களை, ஷௌஷான் அரசு விரிவாக்கிச் சீரமைத்தது. பல புதிய காட்சித்தலங்களை அதிகரித்துக் கட்டியமைத்ததோடு, அங்குள்ள அடிப்படை வசதியை மேம்படுத்தியது. 1 2
|
|