ஹுநான் மாநிலத்தின் ஷௌஷானிலான சுற்றுலா
cri
நான்ஜின் நகர வாசி ஒருவர், 2002 மற்றும் 2003ம் ஆண்டுகளில், ஷௌஷானில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். 2007ம் ஆண்டு, அவர் தனது கார் மூலம், இங்கு பயணம் மேற்கொண்டார். ஒவ்வொரு முறையும் ஷௌஷானுக்கு வருகின்ற போது, இங்கு ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்களைக் காண முடிகிறது என்று அவர் கூறினார்.
முன்பு, மா சே தூங் வெண்கல உருவச் சிலைச் சதுக்கத்தின் முன், ஒரு சந்தை இருந்ததால், அவ்விடம், நேர்த்தியாக இல்லை. இன்றுள்ளது போன்ற உணவகங்களும் இல்லை என்று அவர் கூறினார். Mingwang ஹோட்டல், ஷௌஷானின் 3 நட்சத்திர ஹோட்டல்களில் ஒன்றாகும். இதில், 16 அறைகள் இருக்கின்றன. 40 பேர் தங்கியிருக்கலாம். அதன் அளவு, பெரிதாக இல்லாத போதிலும், பயணிகள் அதனை மிகவும் வரவேற்கின்றனர் என்று அதன் உரிமையாளர் Xu Shifeng, எமது செய்தியாளரிடம் கூறினார்.
எங்கள் காய்கறித் தோட்டங்களில் நாங்களே காய்கறிகளைப் பயிரிடுகிறோம். இங்கு அறுவடை செய்யப்படுகிற காய்கறிகள் தான், விருந்தினர்களுக்கு சமைக்கப்படுகின்றன. இந்த ஹோட்டல் பற்றிய தகவல்கள், இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அவ்வப்போது, இவற்றை பற்றி இணையத்தில் தேட முடியும். அத்துடன், பலர் அடிக்கடி தொலைப்பேசி மூலம், தங்குமிட வசதி மற்றும் உணவு பற்றி விசாரிக்கின்றனர். அவர்கள், அனைவரும் இங்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று விருப்பம் தெரிவிக்கின்றனர். முன்பு, நான், பயணியர் போக்குவரத்துப் பணியில் ஈடுபட்டேன். ஆண்டு வருமானம், சுமார் 70 அல்லது 80 ஆயிரம் யுவான் கிடைத்தது. தற்போது, ஆண்டு வருமானமாக சுமார் 2 லட்சம் யுவான் வரை கிடைக்கிறது என்று அவர் கூறினார்.
ஷௌஷான் நகர வாசிகள், தற்போதைய சாதனைகளைக் கண்டு, மன நிறைவு கொள்ளவில்லை. அவர்கள், ஷௌஷான் என்ற பெயரில் வணிகச் சின்னம் பதிவு செய்துள்ளனர். பிற புரட்சிகர மாமனிதர்களின் பிறந்த ஊர்களுடன் இணைந்து, சீனாவின் புரட்சிகர புனித சுற்றுலா இடங்கள் என்ற தலைசிறந்த சுற்றுலா நெறியை உருவாக்கத் திட்டமிட்டுள்ளனர். 1 2
|
|