• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-02-18 15:28:53    
கொள்ளை நோய்

cri
பொதுவாக ஒருவரை சபிக்கும் போது, "நாசமாய் போக", கட்டையில போக", "கொள்ளையில் போக" என்றெல்லாம் வாழ்த்துவதை கேட்டிருக்கலாம். நல்லாயிரு என்பதற்கு நேர் மாறானதுதான் நாசமாய் போக. நீடுழி வாழ்க என்பதற்கு நேர் எதிராக வசைபாடுவதுதான், கட்டையில போக அல்லது பாடையில போக, அதாவது செத்தொழி, இறந்துபோ என்பது.
அதென்ன "கொள்ளையில போக"? சரியாக சொல்லாவிட்டால், வீட்டிற்கு பின்புறமான "கொல்லையில் போக" என்று பொருள்கொள்ளக்கூடும். இளவயதினருக்கு, கொள்ளை என்றால், திருட்டு, களவு ஆகியவற்றுடன் தொடர்புடைய கொள்ளைதான் நினைவுக்கு வரும். ஆனால் கொள்ளையில் போக என்று சபிக்கும்போது, கொள்ளைநோயை குறிப்பிட்டுத்தான் சொல்கிறார்கள் என்பது இன்றைய இளம் தலைமுறையினருக்கு தெரிந்திருக்காது. ஏன் நம்மில் பலருக்குக்கூட கொள்ளை நோய் என்பது பற்றி அவ்வளவாக தெரிந்திருக்காது.


கிறித்தவ சமயத்தினர் தங்களது திருமறையான பைபிளில் இந்த கொள்ளை நோய் பற்றி வாசித்திருக்கலாம். வரலாற்று பாடத்தில் ஈடுபாடு கொண்டவர்கள், எப்படி இந்த கொள்ளை நோய் பல்வேறு காலக்கட்டங்களில் உயிர்பலி வாங்கியது என்பதை அறிந்திருக்கலாம். உலக அறிவில் நாட்டம் கொண்டவர்களுக்கு எந்தெந்த ஆண்டுகளில் ஐரோப்பிய கண்டத்தில் இந்த கொள்ளை நோய் எப்படியெல்லாம் தாண்டவமாடியது, உயிர்வெறியுடன் மனிதகுலத்தை அலைகழித்தது என்று தெரிந்திருக்கலாம்.
ஆனால், என்னை போன்ற சாதாரண மக்கள் பலருக்கு கொள்ளை நோய் பற்றிய அறிதல் குறைவாகத்தான் இருக்கும்.
கொள்ளை நோய் என்பது பரந்த நிலையில் பரவக்கூடியது. சரியான மருந்துகளும், சிகிச்சையும், பராமரிப்பும் இல்லாத நிலையில், மனித உயிர்களை கொள்ளையடித்து போகும். வரலாற்றில் ஆயிரக்கணக்கில், இலட்சக்கணக்கில் உயிர்பலி வாங்கிய இந்த கொள்ளை நோய், இரண்டு மூன்று வகைகளாக பகுக்கப்படுகின்றன. எப்படி வகைப்பட்டாலும், அறிகுறிகள் சிலவற்றில் வேறுபாடுகள் இருக்குமே ஒழிய, அவற்ற்இன் வீரியத்திலோ, வேகமான பரவலிலோ, உக்கிரமான உயிர் தாகத்திலோ எந்த வேறுபாடுகளும் கிடையாது.


ஐரோப்பிய நாடுகளை புரட்டிப்போட்ட இந்த கொள்ளைநோய் இப்போது மீண்டும் துளிர்த்து தழைத்து உலகளவில் பரவி வருகிறது என்ற தகவலைக் கேட்டால் உங்களுக்கு கொஞ்சம் கிலியேற்படத்தானே செய்யும். சரி, அதிகம் யோசிக்க வேண்டாம் அன்பர்களே, தொடர்ந்து கவனமாக கேளுங்கள்.
கடந்த 20 ஆண்டுகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக 100லிருந்து 200 பேர் வரை பலிகொண்ட இந்த கொள்ளை நோய், கடந்த சில தசாப்தங்களில் இதற்கு முன் காணப்படாத நாடுகளில் தலைகாட்டியிருப்பதாக, தோன்றியுள்ளதாகவும், குறிப்பாக ஆப்பிரிக்க கண்டத்தை நோக்கி இது திசை மாறியிருப்பதாகவும் சில் ஆய்வாளர்கள் நமக்கு சுட்டிக்காட்டுகின்றனர். "கறுப்பு மரணம்", கறுப்பு இறப்பு எனப்படும் பூபோனிக் பிளேக் என்ற கொள்ளை நோய், யெர்சினியா பெஸ்டிஸ் என்ற பாக்டீரியாவால் உருவக்கப்படுகிறது.
வரலாற்றில் இடைக்காலத்தில் நோய் தொற்றிய ஈக்கள் உள்ளிட்ட பூச்சியினங்களால் இந்த கொள்ளை நோய் பரவியது. மேலும் நிமோனிக் பிளேக் எனப்படும் சளிக்காய்ச்சல் கொள்ளை நோய், தும்மல் மற்றும் இருமல் மூலம் மனிதர்களிடையே பரவியது. "இதெல்லாம் அந்தக் காலத்தில் நடந்ததுதானே, அதுக்கு இப்ப என்ன அப்பு?" என்று கேட்பவர்களுக்கு, எச்சரிக்கை மணி அடித்து, "அசைந்தால், ஆளையே விழுங்கும் இந்த கொள்ளை நோய் மீண்டும் தீவிரமடையும் ஆபத்து இருக்கிறது" என்கிறார்கள் லிவர்பூல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மைக்கேல் பெகான் என்ற இயற்கைச் சூழலியலாளரும் அவரது சகாக்களும்.
1 2