• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-02-18 15:28:53    
கொள்ளை நோய்

cri

மனிதர்களிடையிலான கொள்ளை நோய் பரவல் எண்ணிக்கை, ஒப்பீட்டளவில் குறைவுதான் என்றாலும், மனிதகுலத்திற்கு எதிரான இந்நோயின் அச்சுறுத்தலை குறைவாக மதிப்பிடுவதோ, புறந்தள்ளுவதோ, தவறாகிவிடும். காரணம், இந்நோயின் தொற்றக்கூடிய தன்மையும், வேகமான பரவலும், வீரியமும், சிகிச்சையளிக்காத பட்சம் ஏற்படும் உயிரிழப்பு நிலையும்" தட்டிக்கழிக்கவோ, பாராமுகமாய் இருந்துவிட முடியாத அளவு உக்கிரமானவை என்கிறது இந்த ஆய்வாளர் குழு.
எலிகள் மூலம் மிக எளிதாக பரவக்கூடியது கொள்ளை நோய். எனவே இதை முற்றாக அழிக்க,துடைத்தொழிக்க முடியாது. விலங்கினங்களுக்கிடையில் பரவி எப்போதும் மனித குலத்துக்கு அச்சுறுத்தலாய் தொடரக்கூடியது இந்த கொள்ளை நோய்.
எதார்த்தத்தில் உலகிலுள்ள எல்லா எலிகளையும் கொன்றுவிட முடியுமா என்ன? என்று கேட்கும் மைக்கேல் பெகான், தற்போது கொள்ளை நோயின் பரவல் அதிகரித்துக்கொண்டிருக்கிறது என்றும், முதன்முறையாக, ஆப்பிரிக்க நாடுகளிலும் இது ஆங்காங்கே தலைதூக்கியிருக்கிறது என்றும் கூறுகிறார்.


உலக சுகாதார் நிறுவனத்தின் மதிப்பீட்டின் படி, ஆண்டுதோறும் ஆயிரத்திலிருந்து மூவாயிரம் பேர் வரை கொள்ளை நோய்க்கு ஆளாகின்றனர். கடந்த ஐந்து ஆண்டுகளில், ஆப்பிரிக்க நாடுகளான, மொசாம்பிக், மடகாஸ்கர், தான்சானியா, மலாவி, காங்கோ ஜனநாயகக் குடியரசு ஆகியவற்றில் கொள்ளை நோயின் பரவல் காணப்பட்டுள்ளது என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. 20ஆம் நூற்றாண்டில் பெருமளவில் தலை தூக்காத, உக்கிரமாய் மனித குலத்தை உயிர்வதை செய்யாத இந்த கொள்ளை நோய், பல்லாண்டுகள் கழித்து தற்போது உயர்ந்த கதியில் பரவத்தொடங்கியுள்ளதுதான் கவலைத் தரக்கூடிய செய்தி என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
பழைய பாணி உடைகள், சிகையலங்காரங்கள், வடிவமைப்புகள் மறுபடி நம்மிடையே உலா வருகின்றன. திரைப்படங்களில் பழைய பாடல்கள் கூட ரீமேக் எனப்படும் மறு அல்லது மாற்று வடிவத்தில் வலம் வருகின்றன. வரலாற்று புத்தகத்தில் கூட எளிதில் பார்த்து தெரிந்துகொள்ள முடியாத நோய்கள் கூட மறு உலா வரத்தொடங்கினால், நம் நிலை என்னாவது.
அட, அறிவியலும் தொழில்நுட்பமும்தான் வளர்ந்து கிடக்கிறதே. செய்ற்கை இதயம், செயற்கை கருப்பை, மிக நுண்ணிய கருவிகள் மூலமான உடலுக்குள்ளான ஆய்வுகள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என்றெல்லாம் மருத்துவத்துறை மகத்தான வெற்றிகளோடு உலா வருகிறதே, பிறகு எதற்கு கொள்ளை நோய்க்கும் இதர கிள்ளை நோய்க்கும் பயப்படவேண்டும் என்று உங்களில் சிலருக்கு நியாயமான ஒரு எண்ணம், கேள்வியாக எழும். ஆனால், அறிவியலும், தொழில்நுட்பமும் முன்னேறிய நமது காலத்தில்தான், ஆந்திராக்ஸ், உயிரியல் ஆயுதங்கள் என்றெல்லாம் மனிதகுலத்தை, மனிதகுலமே அழிக்கும் வேடிக்கை நிலை.
ஐயா கொஞ்சம் இருங்க. நீங்க சொல்வதை பார்த்தால், இந்தக் கொள்ளை நோயைக்கூட ஒரு ஆயுதமாக பயன்படுத்தக்கூடுமோ? என்று வானொலிப்பெட்டியை முறைத்தபடி என்னைக் கேட்கும் நேயர்களுக்கு, பதில், ஆம். ஆயுதமாக இந்தக் கொள்ளை நோயை பயன்படுத்தும் சாத்தியக்கூறு அதிகமே. அவ்வளவு ஏன், வரலாற்றை புரட்டிப்பார்த்தால், மனித குலம், ஏற்கனவே இப்படி கொள்ளை நோயை ஆயுதமாக்கி சமராடியுள்ளதை காணமுடியும். இதை நான் கற்பனையாக திரித்து சொல்லவில்லை, லிவர்பூல் பல்கலைக்கழகத்தின் இயற்கைச் சூழலியலாளர் மைக்கேல் பெகான் தலைமையிலான ஆய்வாளர்கள்தான், அண்மையில் வெளியான பிலோஸ் மருத்துவம் என்ற அறிவியல் இதழிலான தங்கள் கட்டுரையில் இந்தத் தகவல்களை எழுதியுள்ளனர்.


போரிடும்போது எதிரியின் கோட்டைக்குள்ளே, கொள்ளை நோய் கண்டு இறந்தவர்களின் உடலை கவண் கொண்டு வீசுவதும், நோய் தொற்றிய ஈக்கள் முதலிய பூச்சிகளை எதிரி நாட்டின் மீது விமானத்தின் மூலம் கொட்டுவது என பல வகைகளில் வரலாற்றில் கொள்ளை நோய் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. அவ்வளவு ஏன், காற்றில் பரவக்கூடியதாய், கொசு மருந்து தெளிப்பான், நறுமணத்தைல தெளிப்பான் போல, கொள்ளை நோய் நச்சுயிரிகளைக எளிதில் பரவச்செய்யலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
"அடப்பாவிகளா! இவர்களுக்கு எப்படியெல்லாம் தோன்றுகிறது பார் யோசனை" என்று நிகழ்ச்சியை கேட்டுக்கொண்டிருக்கும் என் தாயார் நிச்சயம் இத்தகைய தீய எண்ணம் கொண்டவர்களை இப்படித்தான் சபிப்பார் "கொள்ளையில் போக".
1 2