• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-02-25 12:53:54    
மரபுகளையும் பாரம்பரியங்களையும் பாதுகாக்க

cri
வேட்டியும் சட்டையும் அணிந்து மேல்துண்டை இலாவகமாக மேலே போட்டுக்கொண்டு நடப்பதே ஒரு தனி அழகுதான். இன்றைக்குள்ள பல இளவட்டங்களுக்கு வேட்டியை கட்டச் சொன்னால், இடுப்பில் சேர்த்து கட்ட வார் கேட்பார்கள். எட்டு முழ வேட்டிக்கட்டி அவன் நடந்துவர, சரிகைச்சேலை கட்டிக்கொண்டு அவள் நடந்துவர அழகான தமிழ்நாட்டு இணையைக் கண்டு உள்ளம் பூரிக்கும். ஆனால் இன்றைக்கு இதையெல்லாம் திரைப்படங்களின் பாடல்கள் காட்சிகளில்தான் அழுகுணர்ச்சியோடு காண முடிகிறது. வசதியாக இருக்கிறது என்பதற்காக கால்சட்டையைத்தான். நம்மூரின் கிராமங்களில் கூட இப்போது நடுத்தர வயதுக்காரர்கள் அதிகம் அணிகிறார்கள். ஏன் கிராமத்தை சேர்ந்தவர்கள் ஜீன்ஸ் கால்சட்டை அணியக்கூடாதா என்று சிலர் கேட்கக்கூடும். உடை எதுவோ, வசதியாக இருந்தால் அணிவதில் தவறில்லைதான். இருப்பினும், நமது பண்பாட்டு அம்சங்களில் ஒன்றான நமது பாரம்பரிய உடைகளின் பயன்பாடு அருகிக்கொண்டிருக்கிறதே என்ற கவலைதான் இதை பற்றி பேச வைக்கிறது.


அண்டை மாநில மலையாள சகோதரர்கள் இருக்கும் வரை வேட்டி சட்டைக்கு எப்போது மரணமில்லை என்பது ஒருபுறமென்றாலும், இது போன்ற பண்பாட்டு அடையாளங்களையும், மரபுச் செல்வங்களாகக்கூடிய விடயங்களையும் நாம் வழக்கொழித்து முற்றாக இழந்து விடுவோமோ என்ற அச்சம் மேலிடத்தான் செய்கிறது. நம்மூரின் சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யோகாசனம் எல்லாமும் இந்த வகையில்தான் அடங்கும். தப்பாட்டம், மயிலாட்டம், கரகாட்டம் போன்ற நாட்டுப்புறக்கலைகளுகும் இதில் விதி விலக்கல்ல. ஒரு எடுத்துக்காட்டுக்காகத்தான் வேட்டிய பற்றி குறிப்பிட்டேன். இன்றைக்கே கூட நாட்டுப்புறக் கலை வடிவங்கள் நலிந்துபோன நிலைதான் நம்மிடையே காணப்படுகிறது. மேலை நாட்டு இசை, கலை வடிவங்களுக்கும், வடக்கத்திய கலையம்சங்களுக்கும் கொடுக்கும் மரியாதையும், மதிப்பும், நம் மண்ணின் கலைகளுக்கு கொடுக்கப்படுவதில்லை என்பது பட்டவர்த்தனமான உண்மை.
இன்னும் சில தசாப்தங்களிலோ, நூற்றாண்டுகளிலோ இவையெல்லாம் அருங்காட்சியங்களில் தான் பார்க்கக் கிடைக்கும்.


அட இது கூட பரவாயில்லை, பின்னொரு காலத்தில் நமது கொள்ளுப்பேரனோ, எள்ளுப்பேரனோ, வேட்டியை பற்றியோ, பொம்மலாட்டம் பற்றியோ, சடுகுடு பற்றியோ அறிய விரும்பினால் வேறொரு நாட்டின் அருங்காட்சியகத்தில்தான் பார்க்க நேரிடும் என்றால், என்ன செய்வது.
இதற்கு நம் பண்பாட்டு அடையாளங்களை நாம் சரியாக பேணவில்லை என்பது ஒரு காரணமென்றால், அவற்றை நாம் ஒரு அறிவுசார் சொத்தாகவும் ஏன் பார்க்கவில்லை என்ற மெத்தனமும் காரணமாகிவிடும் நிலை உள்ளது.
என்னடா இவன் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுகிறான் என்று கேட்கிறீர்களா?
சரி, கொஞ்சம் விளக்கமாக இதை அறிந்துகொள்வோம். கடந்த சில வாரங்களுக்கு முன், தமிழன்பன் அவர்கள் அறிவியல் உலகம் நிகழ்ச்சியில், சீனாவின் சோயா அவரை, சீன நெல்லிக்காய் எல்லாம் எப்படி இன்றைக்கு சீனாவை தவிர்த்த வேறொரு நாட்டில் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது, எப்படி காப்புரிமை பெறாமல் பல பொருளாதார இழப்புகளையெல்லாம் சீனா சந்திக்க நேர்ந்துள்ளது என்பதை பற்றி விளக்கமாக சொல்லக் கேட்டிருப்போம்.
1 2