• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-02-25 12:53:54    
மரபுகளையும் பாரம்பரியங்களையும் பாதுகாக்க

cri

பண்பாட்டு அடையாளங்களும் அதே போல், பறிபோகும் நிலையைத்தான் இன்றைக்கு நான் உங்களிடம் முன் வைக்கிறேன். எடுத்துக்காட்டாக, குய்சோ மாநிலத்தில் வாழும் மியாவ் சிறுபான்மை இனத்தை குறிப்பிடலாம். இவ்வினத்தோர் தலைமுறை தலைமுறையாக குவான்யின் ஸாவ் என்ற ஒருவகை புல்லைக் கொண்டு, சளி, இருமல், தொண்டை அழற்சி போன்றவற்றுக்கு மருந்தாக பயன்படுத்தி மிக எளிதாக குணமடைகின்றனர்.
ஆனால் இன்றைக்கு இந்த குவான்யின் ஸாவ் வகை புல்லின் மூலக்கூறுகளை ஜப்பானிய மற்றும் தென்கொரிய நிறுவனங்கள் ஆய்வு செய்துகொண்டிருக்கின்றன. இந்த புல்லின் அடிப்படையிலான மருந்து மற்றும் சிகிச்சைக்கு இந்த வெளிநாட்டு நிறுவனங்கள் காப்புரிமை பெறுமேயானால், அதனால் சீன மருந்து தயாரிப்பாளர்களுக்கு ஏற்படும் இழப்பை கொஞ்சம் எண்ணிப்பாருங்கள்.
சரி அதை விடுவோம். மியாவ் இனத்தின் மற்றொரு பாரம்பரிய சிறப்பு, அவர்களுடைய பாரம்பரிய உடை. சீனர்கள் இந்த உடை அணிவதை, வரலாற்றை அணிவதாக கூறுகின்றனர். இந்த உடையை வார்த்தைகளில்லாத வரலாற்று புத்தகம் என்றும் சீனர்கள் குறிப்பிடுகின்றனர். மிக அழகான வடிவமைப்பும், நேர்த்தியான வேலைப்பாடுகளும் கொண்ட இந்த உடையின் தயாரிப்பும், வழிவழியாக, தலைமுறை தலைமுறையாக கையேற்றப்பட்டு இன்றளவும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.
வெளிநாட்டு கலைப்பொருள் சேகரிப்பாளர்களின் மனதைக் கவரும் ஒரு முக்கிய பொருள் இந்த மியாவ் இன பாரம்பரிய உடையாகும். இன்றைக்கு குய்சோவிலுள்ள இத்தகைய பாரம்பரிய உடைகளின் சேகரிப்பு அல்லது தொகுதியை விட அதிகமாக பிரான்ஸ் நாட்டு பாரிஸில் உள்ள ஒரு தனியார் அருங்காட்சியகத்தில்தான் அதிக எண்ணிக்கையில் இந்த உடைகள் இருக்கின்றன என்றால், நம்ப முடிகிறதா. மியாவ் மற்றும் தொங் இனங்கள் பற்றிய ஆய்வாளரான லெய் ஷியுவூ என்பவரின் கருத்துப்படி, இன்னும் 100 ஆண்டுகளுக்குள், மியான் இனம் பற்றி சீன மக்கள் விரும்பினால், வெளிநாடுகளுக்குச் சென்றே கற்று வரவேண்டிய நிலை ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.


ஆனால் குய்சோ மாநில அரசின் விதிகளில் தற்போது பாரம்பரிய அறிவு மற்றும் கலைக்கான பாதுகாப்பு பற்றிய உள்ளடக்கம் இணைக்கப்பட்டதால், இங்கேயுள்ள நாட்டுப்புறக்கலைகள், பாரம்பரிய அறிவு ஆகியவற்றை கொண்டிருப்போரின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டுள்ளன.
உங்கள் தகவலுக்காக சிலவற்றை கூறுகிறேன், இதை கேட்டால் நிச்சயம் இந்த கட்டுரையின் நோக்கம் உங்களுக்கு புரியும். மரபணு ரீதியான ஆய்வு மேற்கொண்டு, அதை வர்த்தக பயன்பாட்டில் இறக்க திட்டமிடும் மரபணு வேடர்களும், நட்டுப்புறக்கலை மற்றும் பண்பாட்டுச் செல்வ சேகரிப்பாளர்களும் தவிர இன்னும் பல வகையான மக்கள் சீனாவின் தாவர, விலங்கின மற்றும் பண்பாட்டு செல்வங்கள், மூலவளங்களிலிருந்து பயன் பெறும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். 2002ம் ஆண்டு ஜூன் திங்கள் 20ம் நாளன்று படி, சீனாவிலிருந்தான இறக்குமதி செய்யப்படுவதாக அமெரிக்கா பட்டியலிடும் சுமார் 20 ஆயிரத்துக்கு மேலான, தாவர மூலவளங்களில், 4452 வகை சோயா அவரை வகைகள். இவற்றில் 168 இனங்கள் வனவளத்தில் சேர்ந்தவை. அந்த குறிப்பிட்ட நாளின் படி, சீன அரசின் விதிகளுக்கு இணங்க ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்பட்டவை 2177 வகை தாவரங்களே, இவற்றில் வனவளம் சார் சோயா அவரை இடம்பெறவே இல்லை. உலகின் 90 விழுக்காட்டு சோயா அவரை மூலவளத்தைக் கொண்ட சீனா இன்றைக்கு உலகின் முதல் சோயா இறக்குமதி நாடாக இருப்பதற்கான காரணத்தை இந்த புள்ளிவிபரத் தகவலே எண்பிக்கிறது அல்லவா. பெரும்பாலான சீன சோயா அவரை வகைகள் வேறு நாடுகளால் காப்புரிமை பெறப்பட்டுள்ளன என்பது இன்னும் கொடுமையான தகவல்.


இது மட்டுமா, பண்டைய சீன மருத்துவ புத்தகங்கள் இரண்டிலிருந்தான சுமார் 210 வகை மருந்து மற்றும் சிகிச்சை முறைகளை ஜப்பான் காப்புரிமை பெற்று, சொந்தமாக்கியுள்ளது.
இதையெல்லாம் ஒரு களவாக கருதும் சீனாவில், தற்போது மாநில நிலை சமூக அறிவியல் கழகங்கள், பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த வல்லுனர்கள் கடந்த ஈராண்டுகள் 40 இடங்களில் மேற்கொண்ட கள ஆய்வுகளின் அடிப்படையில், சில விதிகளை வரைவு செய்துள்ளனர். அடுத்த ஆண்டு முதல் பாதியில், உள்ளூர் சட்டமியற்றல் அவையில் இவை மீளாய்வு செய்யப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படும் எனப்படுகிறது. உரிமையாளர்களின் அனுமதியின்றி, மரபணு ரீதியான ஆராய்ச்சி, பாரம்பரிய கலை பற்றிய ஆய்வு மற்றும் இவை பற்றி கல்வியை மேற்கொள்ளும் நிறுவனங்களும், தனி நபர்களும் இனி 50 ஆயிரம் முதல் ஒரு இலட்சம் யுவான் வரை அபராதம் செலுத்த நேரிடும். இந்த விதிகள் சீனாவின் நாட்டுப்புற கலை மற்றும் இலக்கியங்கள், பாரம்பரிய தொழில்நுட்பங்கள், நுண்கலை நுட்பங்கள், பாரம்பரிய உயிரியல் அறிவு ஆகியவற்றை பாதுகாக்க உதவும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளன. சீனாவின் மதிப்புமிகு பாரம்பரிய மரபுச்செல்வங்களின் வெளியூற்றை, சுரண்டலை குறைக்கும் ஒரு முயற்சியாக குய்சோ மாநிலம் இதை செய்துள்ளது. இதனிடையில் நடுவண் அரசுமே கூட பாரம்பரிய அறிவுசார் அம்சங்களை பாதுகாக்க தேசிய அளவில் சட்டமியற்றுவது பற்றிய சாத்தியக்கூற்றை ஆராய்ந்து வருகிறது. தாய்லாந்து, இந்தியா, எகிப்து முதலிய நாடுகளும் அறிவுசார் சொத்துரிமை அடிப்படையில் பாரம்பரிய அறிவு வளத்தை பாதுகாக்க உள்ளூர் மற்றும் தேசிய நிலை சட்டங்களை இயற்றியுள்ளன.


இத்தகைய சட்டங்கள் மிக மிக அவசியமானதே. இல்லையென்றால், எதிர்காலத்தில் கரகாட்டம், மயிலாட்டம், தப்பாட்டம் போன்ற நாட்டுப்புறக் கலைகளை கற்ற வெளிநாடுகளுக்கு நாம் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
1 2