உள் மங்கோலியாவிலான நெடுஞ்சாலை போக்குவரத்துத் துறையின் வளர்ச்சி
cri
வட சீனாவின் உள் மங்கோலியத் தன்னாட்சிப் பிரதேசம் பரந்துபட்டது. முன்பு இங்குள்ள போக்குவரத்து வசதி பின்தங்கிய நிலையில் இருந்தது. இதனால், விவசாயிகள் மற்றும் ஆயர்களின் வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. தற்போது, இத்தன்னாட்சி பிரதேசத்தின் போக்குவரத்து நிலைமை பெரிதும் மாறியுள்ளது. மிகப் பல விவசாயிகள் மற்றும் ஆயர்களுக்கு நெடுஞ்சாலைகள் இன்பம் கொண்டு வந்துள்ளன.

உள் மங்கோலிய புல்வெளியில் பரவலாகி வரும் இந்த இனிமையான நாட்டுப்புறப் பாடலின் பெயர் "Noenjia". இப்பாடலில் ஒரு துக்கரமான கதை வர்ணிக்கப்படுகிறது. "Noenjia" என்னும் அழகான மங்கோலிய இன மங்கை திருமணம் செய்த பின், தொலை தூரத்தில் உள்ள கணவரின் வீட்டுக்குச் செல்ல வேண்டும். தமது ஊருக்குத் தாம் திரும்ப முடியாது என கவலைப்பட்டதால், இம்மங்கை கண்ணீர் வடித்தார். கடந்த 40ஆம் ஆண்டுகளின் இறுதி வரை, இந்நிலைமை உள் மங்கோலிய புல்வெளியில் நிலவியிருந்தது. நவ சீனா நிறுவப்பட்டதற்கு பிந்திய சில பத்து ஆண்டுகளாக, புல்வெளியில் அடர்த்தியான அகலமான கீல் நெடுஞ்சாலைகள் கட்டியமைக்கப்பட்டுள்ளன. உற்பத்திச் சாதனம் மற்றும் மூலவளம், அன்றாடத் தேவைப் பொருட்கள் ஆகியவற்றை ஏற்றிச்செல்லும் வாகனங்கள், நெடுஞ்சாலை மூலம் மிகப் பல விவசாயிகள் மற்றும் ஆயர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளன.

2001ஆம் ஆண்டு, உள் மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசத்தின் மேற்கு பகுதியில் உள்ள Alxaல், மகிழ்ச்சி தரும் நாளை இங்குள்ள மக்கள் வரவேற்றனர். அன்று Alxaலுள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கும், அதற்கு 700 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாவட்ட தலைநகருக்கும் இடையே ஒரு நெடுஞ்சாலை கட்டிமுடிக்கப்பட்டது. அந்த ஆண்டு Alxaல் இந்நெடுஞ்சாலை போக்குவரத்துக்குத் திறந்து விடப்பட்டது. உள்ளூர் பிரதேசத்தின் மங்கோலிய இன மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். அவர்கள் அழகான ஆடைகள் அணிந்து, ஒட்டகத்தின் மீதேறி சவாரி செய்து, இந்நெடுஞ்சாலையில் கவனத்துடன் முன்னகர்ந்து சென்றனர். சற்று நேரத்துக்கு பின் அவர்கள் ஒட்டகத்திலிருந்து இறங்கி கீல் போட்ட சாலையில் நடந்து சென்றனர். Alxaல் நெடுஞ்சாலை இல்லாத நிலைமை முடிவுக்கு வந்த பின், உள் மங்கோலியா முழுவதிலும் உள்ள 101 மாவட்டங்களில் நெடுஞ்சாலைகள் முற்றிலும் போக்குவரத்துக்குத் திறந்து விடப்பட்டுள்ளன. தன்னாட்சிப் பிரதேசத்தில் போக்குவரத்துக்கான நெடுஞ்சாலையின் மொத்த நீளம், ஒரு லட்சத்து 30 ஆயிரம் கிலோமீட்டரை எட்டியது. இத்தன்னாட்சி பிரதேசம் நிறுவப்பட்ட துவக்கத்தில் இருந்ததை விட இது 60 மடங்கு அதிகமாகும். உயர் வேக நெடுஞ்சாலை கட்டியமைக்கப்பட்டு, நெடுஞ்சாலை போக்குவரத்துத் துறையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. தன் வாழ்நாளில் மேய்ச்சல் நிலையத்தை விட்டு விலகாத ஆயர்கள் இப்போது தாம் வாழும் கிராமங்கள் அல்லது குடியிருப்புப் பிரதேசங்களிலிருந்து வாகனங்களில் வெளியூருக்குச் செல்ல முடியும். திருமணம் செய்ய தொலைதூரத்துக்குச் சென்ற மங்கோலிய இனப் பெண்கள் நெடுஞ்சாலை போக்குவரத்தினால் ஏற்பட்டுள்ள வசதியை அனுபவிக்க முடியும். அவர்கள் முன்பை போல் அவ்வளவு துக்கமடைய போவதில்லை. உள் மங்கோலியத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைநகர் Huhhot நகரில் வாழ்கின்ற Wurinile அம்மையார் கூறியதாவது:

"முன்பு, என் தந்தைதாயின் வீடு திரும்ப, தொடர் வண்டி, வாகனம் மற்றும் மாட்டு வண்டியில் வந்தால் 4-5 நாட்கள் தேவைபட்டன. நெடுஞ்சாலை போக்குவரத்து தொடங்கிய பின் வாகனத்தில் தந்தைதாயின் வீடு திரும்ப, ஒரு நாள் மட்டுமே தேவைப்படுகின்றது. இது நல்ல வசதியை தந்துள்ளது" என்றார், அவர். உள் மங்கோலியத் தன்னாட்சிப் பிரதேசத்தில் நெடுஞ்சாலை போக்குவரத்துத் துறையின் விரைவான வளர்ச்சி, எல்லைப் பிரதேசத்தின் பொருளாதாரம் மற்றும் பண்பாட்டை வளப்படுத்தி, சிறுபான்மை தேசிய இனப் பிரதேசத்து மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு முக்கிய பங்காற்றியுள்ளது. பரந்துபட்ட உள் மங்கோலியத் தன்னாட்சி பிரதேசத்தில், நெடுஞ்சாலைகள் பரவலாக கட்டியமைக்கப்பட்டுள்ளன. இந்த நெடுஞ்சாலைகளின் நெடுகிலும், வர்த்தகம் செழிப்பாகியுள்ளது. சிறுபான்மை தேசிய இன மக்களின் வாழ்க்கை நாளுக்கு நாள் இன்பமடைந்துள்ளது. ஒரு உணவகத்தின் உரிமையாளர் Li Guo Qi கூறியதாவது: "நெடுஞ்சாலை போக்குவரத்துக்குத் தொடங்கிய பின், இந்த உணவகத்துக்கு நேரடியாக செல்வாக்கு ஏற்பட்டுள்ளது. 2006ஆம் ஆண்டில் இருந்ததை விட, 2007ஆம் ஆண்டில் பயணிகளின் எண்ணிக்கை மடங்காக அதிகரித்துள்ளது" என்றார், அவர். 1 2
|
|