• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-02-29 09:41:33    
உள் மங்கோலியாவிலான நெடுஞ்சாலை போக்குவரத்துத் துறையின் வளர்ச்சி

cri

வசதியான நெடுஞ்சாலை போக்குவரத்தினால், உள்நாட்டு வெளிநாட்டு பயணிகள் உள் மங்கோலியாவுக்கு வருகை தந்து, புல்வெளியின் தனித்தன்மையை அனுபவித்துள்ளனர். பெய்சிங்கிலிருந்து வந்த Zhang Qi என்னும் பயணி கூறியதாவது:


"பெய்சிங்கிலிருந்து உள் மங்கோலியாவுக்கு செல்வது, வசதியானது என்று உணர்ந்து கொண்டுள்ளோம். இங்குள்ள இயற்கைக் காட்சிகள் பெய்சிங் பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளன" என்றார், அவர்.
21ம் நூற்றாண்டில் நுழைந்த பின், சீன அரசு முன்வைத்த "மேற்கு பகுதிக்கான பெரும் வளர்ச்சி" என்ற கொள்கையைச் செயல்படுத்தும் வகையில், உள் மங்கோலியத் தன்னாட்சி பிரதேசத்து அரசு, நெடுஞ்சாலை கட்டுமானத்தை விரைவுபடுத்தியுள்ளது. தன்னாட்சி பிரதேசத்தின் போக்குவரத்து அலுவலகத்தின் அதிகாரி Hao Ji Ye கூறியதாவது:
"திட்டத்தின் படி, உள் மங்கோலியாவில் சுமார் 800 கிலோமீட்டர் நீளமுடைய உயர் வேக நெடுஞ்சாலை கட்டியமைக்கப்பட வேண்டும். தவிர, ஆயிரத்து 600 கிலோமீட்டர் நீளமுள்ள முதல் நிலை நெடுஞ்சாலை கட்டியமைக்கப்பட வேண்டும். இதற்கிடையே, கிராமங்களில் சாலைகள் பெருமளவில் கட்டியமைக்கப்பட வேண்டும்" என்றார், அவர்.
தற்போது இக்குறிக்கோள் நனவாகியுள்ளது. 2003ஆம் ஆண்டில், உள் மங்கோலியத் தன்னாட்சி பிரதேசத்தில் மிக நீளமான, மிக உயர் தரமான நெடுஞ்சாலைகள் கட்டியமைக்கப்பட்டன. இந்நெடுஞ்சாலைகளின் கட்டுமானத்துக்கென மிகப் பெருமளவு முதலீடு செய்யப்பட்டது. உள் மங்கோலியாவில் பல்வேறு தேசிய இன மக்கள், ஓரளவு வசதியான சமூகத்தை முழுமையாக உருவாக்குவது என்ற குறிக்கோளை நோக்கி முன்னேறியுள்ளனர்.


நெடுஞ்சாலைகள், உள் மங்கோலிய மக்களுக்கு நம்பிக்கையும் இன்பமும் தந்து, புல்வெளி பிரதேசங்களுக்கும், வளர்ச்சியடைந்த பிரதேசங்களுக்குமிடை இடைவெளியைக் குறைத்துள்ளது. தன்னாட்சிப் பிரதேசத்தின் போக்குவரத்து வாரியத்தின் பொறுப்பாளர் ஒருவர் பேசுகையில், 2010ஆம் ஆண்டுக்குள் தன்னாட்சி பிரதேசத்தின் தலைநகர் Huhhotக்கும், பல்வேறு நகரங்களுக்குமிடையிலும், முக்கிய பிரசேங்களுக்கிடையிலும், முக்கிய நுழைவாயில்களுக்கிடையிலும், உயர் வேக நெடுஞ்சாலைகளும், முதல் நிலை நெடுஞ்சாலைகளும் கட்டிமுடிக்கப்பட வேண்டும். நகரங்களின் தலைநகர்களுக்கும், மாவட்டங்களுக்குமிடையே இரண்டாவது நிலை நெடுஞ்சாலைகள் கட்டிமுடிக்கப்பட வேண்டும். அனைத்து கிராமங்களிலும் சாலைகள் கட்டிமுடிக்கப்பட வேண்டும். அப்போது உள் மங்கோலியாவின் நெடுஞ்சாலை போக்குவரத்து மேலும் வசதியாக இருக்கும். சிறுபான்மை தேசிய இன மக்களின் வாழ்க்கை மேலும் இன்பமாக இருக்கும் என்று நம்புகின்றோம்.
நேயர்கள் இது வரை "உள் மங்கோலியாவிலான நெடுஞ்சாலை போக்குவரத்துத் துறையின் வளர்ச்சி பற்றி" கேட்டீர்கள்.
1 2