• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-03-07 12:27:34    
திபெத் இன ஆயர் ஒருவரின் விருப்பம்

cri
மேற்கு சீனாவின் சிங்காய் மாநிலத்தில் சிங்காய் ஏரி அமைந்துள்ளது. ஏரிக்கு அருகில் வாழ்கின்ற திபெத் இன ஆயர்கள், ஆடுமாடுகளை மேய்த்து, வாழ்க்கை நடத்துகின்றனர். தற்போது, உயிரின வாழ்க்கை சூழலை மேம்படுத்தி, சிங்காய் ஏரியைப் பாதுகாக்கும் பொருட்டு, உள்ளூர் அரசு "மேய்ச்சல் நிலங்களை ஏரிக்குத் திரும்பிக் கொடுப்பது" என்ற கொள்கையை நடைமுறைப்படுத்துவதுடன், திபெத் இன மக்களின் வாழ்க்கை முறையும் மாறியுள்ளது. இன்றைய நிகழ்ச்சியில், வாழ்க்கை முறை மாறியுள்ள திபெத் இன ஆயர்கள் பற்றி கூறுகின்றோம்.
Dainzin Co என்னும் திபெத் இன ஆயர் நடுத்தரவயதினர். சிங்காய் ஏரிக்கிற்கு வட கிழக்கில் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள Hai Yan மாவட்டத்தில் வாழ்கின்றார். Hai Yan மாவட்டத்தில், திபெத் இனத்தவர்கள் குழுமி வாழ்கின்றனர். அவருடைய வீடு, ஓர் உதாரணமான திபெத் இன கூடாரம் போன்று வட்டமானதாகும். இக்கூடாரத்துக்கு முன், நேரான நெடுஞ்சாலை இருக்கின்றது. தலைமுறை தலைமுறையாக ஆயராக இருந்த அவர்கள், தற்போது வாழ்க்கை நடத்துவதற்கு தேவைப்படும் ஆடுமாடுகள் இல்லாமல் இருப்பது பற்றிய தமது உணர்வுகள் பற்றி Dainzin Co புன்னகையுடன் கூறியதாவது:

 
"ஆடுமாடுகள் அனைத்தும் விற்கப்பட்டுள்ளன. சிங்காய் ஏரியைப் பாதுகாப்பது என்பது, இயற்கையைப் பாதுகாப்பதற்காகும். ஆடுமாடுகளை விற்ற பின் மிகவும் கவலைபட்டேன். அவை, ஆட்டுக்குட்டி பருவத்திலிருந்தே வளர தொடங்கியவை. தற்போது அவற்றை விற்று, 6 திங்கள் ஆகிவிட்டதால், எனது மன உணர்வுகள் மேம்பட்டுள்ளன" என்றார், அவர்.
சிங்காய் ஏரியில், உயிரினங்கள் அதிகம். வட கிழக்கு சிங்காய்-திபெத் பீடபூமியின் உயிரின வாழ்க்கை சூழலுக்கு சிங்காய் ஏரி முக்கிய பங்கை ஏற்படுத்தியுள்ளது. தவிர, மேற்கு பகுதியின் பாலைவனமயமாக்கம், கிழக்கு பகுதிக்கு பரவாமல் தடுப்பதற்கான இயற்கையான தடை இதுவாகும். 1992ஆம் ஆண்டு, உலகில் முக்கிய சதுப்பு நிலங்களின் பெயர் பட்டியலில் சிங்காய் ஏரி சேர்க்கப்பட்டது. இருந்த போதிலும், கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக, உலக வெப்பமேறலினால், சிங்காய் ஏரிக்கு அருகில் உள்ள மேய்ச்சல் நிலத்தில் மணல் மயமான நிலப்பரப்புகள் அதிகம். அதனால் ஏரியின் நீர் மட்டம் தாழ்ந்து விட்டது. ஆண்டுதோறும் சிங்காய் ஏரியின் நீர் மட்டம் சராசரியாக 12.1 centimeter குறைந்து, 2000ஆம் ஆண்டில் 21 centimeter குறைந்துள்ளது. நீர் மட்டம் தாழ்ந்து வருவதன் பின்விளைவால், சீனாவில் மட்டுமல்ல, உலகின் காலநிலை மாற்றத்தையும் நேரடியாக பாதிக்கும். சிங்காய் ஏரியின் உயிரின வாழ்க்கையின் சீரான நிலையை பேணிக்காக்கும் பொருட்டு, 2001ஆம் ஆண்டு முதல், "விளை நிலம் மீண்டும் காடுகளாகவும் புல்வெளிகளாகவும் மாற்றப்படுவது" மற்றும் "மேய்ச்சல் நிலம் மீண்டும் காடுகளாக மாற்றப்படுவது" என்ற திட்டங்களை சிங்காய் மாநில அரசு செயல்படுத்தியுள்ளது. சிங்காய் ஏரி்க்கு அருகில் உள்ள மேய்ச்சல் நிலத்தைப் பாதுகாத்து, நீர் மற்றும் மண் அரிப்பு ஏற்படாமல் தடுப்பது, இத்திட்டங்களின் நோக்கம்.
உயிரின வாழ்க்கைச் சூழலைப் பாதுகாப்பதற்கான இந்நடவடிக்கைகள், Dainzin Co மற்றும் அவருடைய குடும்பத்தினரைப் பொறுத்த வரை, தத்தமது ஆடுமாடுகளை விற்பனை செய்வதோடு, நாடோடியான ஆயர் வாழ்க்கையை முடித்துக்கொள்ள வேண்டும் என்று பொருட்படுகிறது. இக்குடும்பத்தின் பெண் உரிமையாளர் Ying Sen கூறியதாவது:

 
"முன்பு 400 ஆடுகளையும், 400 மாடுகளையும் என் குடும்பம் வளர்த்தது. ஆண்டுத்தோறும் ஆடுமாடுகளை விற்பனை செய்து, சுமார் 10 ஆயிரம் யுவான் ஈட்ட முடியும். வாழ்க்கை நிலை பரவாயில்லாமல் இருந்தது. சிறுபான்மை தேசிய இன மக்கள் தலைமுறை தலைமுறையாக ஆடுமாடுகளை வளர்ப்பதன் மூலம் வாழ்க்கை நடத்தி வந்துள்ளனர். அப்படியே வாழ்க்கை தொடர்வது மிக கடினம் என்று அப்போது நினைத்தோம்" என்றார் அவர்.
இத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டதன் துவக்கத்தில், தமது மனைவி போல் அதிக ஆயர்கள் இக்கொள்கை பற்றி நன்றாக புரிந்து கொள்ள வில்லை என்று Dainzin Co கூறினார். ஆனால், தற்போது தாம் இக்கொள்கையை புரிந்து கொள்வதாகவும், நீண்டகால அளவில் இது நன்மை தரும் என்றும் அவர் கூறினார். சுற்றுச்சூழல் மோசமாகினால், கடும் பின்விளைவு ஏற்படும் என்றும் அவர் ஆழமாக உணர்ந்து கொண்டுள்ளார். அவர் கூறியதாவது:
(ஒலிப்பதிவு 4)
"முன்பு இங்கு அழகான இயற்கை காட்சிகள் காணப்பட்டன. நீல வானம், வெண்மையான மேகங்கள் புல்வெளிகள் ஆகியவை இருந்தன. கடந்த சில ஆண்டுகளில் இங்குள்ள மேய்ச்சல் நிலம் மணல்மயமாகி நிலைமை மோசமாகி விட்டது. ஆடுமாடுகள் உட்கொள்ளும் புற்கள் பற்றாக்குறை. பசும் மலைகள் காணாமல் போயின. இந்நிலைமை மாற்றப்படாமல் இருந்தால், நாங்கள் வாழும் இடம் காணாமல் போய் இருக்கும். அதனால், எதிர்காலத் தலைமுறை, நீல வானம், வெண்மையான மேகங்கள் மற்றும் பசும் புல்வெளியை மீண்டும் காண, மேய்ச்சல் நிலங்களிலிருந்து வெளியேற விரும்புகின்றோம்" என்றார், அவர்.
இப்பகுதி ஆயர்களின் வாழ்க்கையை உத்தரவாதம் செய்யும் பொருட்டு, ஆடுமாடுகளை விற்பனை செய்த ஆயர்களுக்கு, உள்ளூர் அரசு உதவித்தொகையையும் சலுகையையும் வழங்கியுள்ளதோடு, பல்வகை இலவச பயிற்சிகளையும் வழங்கியுள்ளது. இவற்றை செவ்வனே பயன்படுத்தி, விடாமுயற்சியுடன் முயன்றால், மேலும் செவ்வனே வளர முடியும் என்று Dainzin Co செய்தியாளரிடம் கூறினார். Dainzin Co வாழும் கிராமத்தில், சிலர் வெளியூருக்கு சென்று வேலை செய்கின்றனர். சிலர், வாகன ஓட்டுதலைக் கற்றுக் கொண்டு, ஏற்றிச்செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று Dainzin Co செய்தியாளருக்கு கூறினார். அவர்களின் வாழ்க்கை நிலை நன்றாக இருக்கின்றது. Dainzin Coவின் வீட்டுக்கு முன், பயணிகளை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் அடிக்கடி கடந்து செல்கின்றன. புத்திக்கூர்மை மிக்க பெண் உரிமையாளர் Ying Senக்கு சுற்றுலாத் துறையில் ஈடுபடும் எண்ணம் ஏற்பட்டது.
1 2