• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-03-07 12:27:34    
திபெத் இன ஆயர் ஒருவரின் விருப்பம்

cri

கிராம அரசு Ying Senவின் எண்ணத்தை மிகவும் ஆதரித்தது. தொடர்புடைய செயல்முறைகளை மேற்கொண்டு, அவர்களுக்கான அலுவல் வரியை கிராம அரசு விலக்கியுள்ளது. தவிர, பயணிகளை உபசரிக்கும் கூடாரம் ஒன்றை அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது. இவ்வாறு, Dainzin Coவின் குடும்பம், கிராமத்தில் "Zang jia le" என்ற குடும்ப சுற்றுலாவை நடத்தத் துவங்கியது. இச்செயல்பாடு இக்கிராமத்தில் இதுவே முதன்முறை. Ying Sen கூறியதாவது:

 
"அரசு வழங்கும் உதவித்தொகை இறுதியில் செலவழிக்கப்படும். இப்படிப்பட்ட குடும்ப சுற்றுலா முறையை நடத்தினால், எங்கள் வாழ்க்கை உத்தரவாதம் செய்யப்படும். "Zang jia le", ஒரு சிறந்த வழிமுறை ஆகும். சீனாவின் பிற இடங்களிலிருந்து வருகின்ற பயணிகள் எங்கள் வீட்டுக்கு வருகை தந்து, தயிர் மற்றும் பால் கலந்த தேனீர் ஆகியவற்றை குடிக்க விரும்புகின்றனர். ஆண்டுதோறும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் திங்களில் வியாபாரம் விறுவிறுப்பாக இருக்கின்றது. கடந்த திங்கள் 4 ஆயிரம் யுவான் வருமானம் பெற்றோம்" என்றார், அவர்.
ஆடுமாடுகள் இல்லாமல் இருந்த போதிலும், குடும்ப சுற்றுலா பணி விறுவிறுப்பாகியுள்ளது. மேலும் அவருக்கு மகிழ்ச்சி தருவது, தமது இரண்டு குழந்தைகளும் பள்ளியில் சேர்ந்து, கல்வி பயில்வதாகும். நகரங்களில் வாழும் குழந்தைகளைப் போல், அவர்களும் பாடல்களைக் கற்றுக்கொள்கின்றனர். அவர்களின் கல்வி கட்டணத்தை அரசு விலக்கியுள்ளது.
Ying Senவின் இளைய மகனுக்கு வயது 13. தற்போது, நாள்தோறும் தமது நண்பர்கள் பலருடன் இணைந்து கல்வி பயின்று, பழகுவதால், தனக்கு மிகவும் மகிழ்ச்சி என்று அவர் கூறினார். சிங்காய் ஏரி மென்மேலும் அழகாக மாற வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார். உயிரின வாழ்க்கை சூழலை மேம்படுத்த, "மரங்களை நட்டு, காடுகளை வளர்ப்பது" என்பது சிங்காய் மாநில அரசு மேற்கொண்டுள்ள முக்கிய வழிமுறைகளில் ஒன்றாகும். கடந்த பத்து ஆண்டுகளில், சிங்காய் மாநிலத்தில் 9 இலட்சத்து 50 ஆயிரம் ஹெக்டர் நிலப்பரப்புடைய நிலத்தில் மரங்கள் நடப்பட்டுள்ளன. இம்மாநிலத்தில், காடுகளின் நிலப்பரப்பு, பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட 3 இலட்சம் ஹெக்டர் அதிகரித்துள்ளது. ஊரின் சுற்றுச் சூழல் மேம்பட வேண்டுமென்பதும், மக்களின் வாழ்க்கை நிலை மேலும் சிறப்பாக மாற வேண்டுமென்பதும், Dainzin Coவின் விருப்பமாகும். தமது விருப்பத்தை செய்தியாளருக்கு அவர் தெரிவித்தார். அவர் கூறியதாவது:


"தற்போது குடும்ப சுற்றுலா பணியில் ஈடுபடுகின்றோம். அரசு எங்களுக்கு பல சலுகைகளை வழங்கியுள்ளது. பயணிகள் அதிகமாக இருப்பதால், முன்பை விட எங்கள் வாழ்க்கை நிலை மேம்பட்டுள்ளது. இங்குள்ள மலைகள் மீண்டும் பசுமையாக மாறி, சுற்றுச்சூழல் மேம்படும் போது, ஆடுமாடுகளை மீண்டும் வளர்க்க வேண்டும் என்று விரும்புகின்றோம். 500 முதல் 600 வரையான ஆடுமாடுகளை வாங்க வேண்டும். எதிர்காலத்தில் குழந்தைகள் பல்கலைக்கழகத்தில் கல்வி பயில, வேண்டுமென்பதால் மேலதிக பணம் ஈட்ட வேண்டும் என்று விரும்புகின்றோம்" என்றார், அவர்.
நேயர்கள் இது வரை "திபெத் இன ஆயர் ஒருவரின் விருப்பம் பற்றி" கேட்டீர்கள். இத்துடன், இன்றைய "சீனத் தேசிய இனக் குடும்பம்" நிகழ்ச்சி நிறைவுற்றது.
1 2