



கற்பதற்கு வயது தடையல்ல
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்று கூறி சிறு வயதில் கற்றுக் கொள்ள முடியும். பிற்கால முயற்சிகள் எல்லாம் பயனற்றவை என அறிவுறுத்தி இருக்கின்றோம். இதனை பொய்யாக்கும் விதமாக Chongqing மாநகராட்சி Changxian னில் உள்ள துவக்கப்பள்ளியில் 64 வயதான Liu Baofu விவசாயி துவக்கக்கல்வி கற்றுக் கொண்டிருக்கிறார். கடந்த ஆண்டு சமூக கூட்டம் ஒன்றிற்கு சென்றபோது அவர் வழி தவறி போய்விட்டார். பிறரிடம் சரியாக கேட்டு வர தெரியாமல், தொலைபேசியை பயன்படுத்த தெரியாமல் அல்லலுற்றுள்ளார். அந்த அனுபவத்திற்கு பிறகு அவருடைய மகள் பள்ளிக்கு சென்று படிக்க ஊக்குவிக்க அவரே ஆச்சரியப்படும் வகையில் பள்ளி நிர்வாகம் பள்ளியில் அவரை சேர்த்துள்ளது. படிப்பை ஆரம்பித்த சில நாட்களிலேயே 20 சீன எழுத்துக்களையும், தொலைபேசி பயன்பாட்டையும் Liu கற்றுக் கொண்டுவிட்டார். கிராமத்திலுள்ள பிற விவசாயிகளும் Liu வுடைய மாதிரியை பின்பற்ற முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர். நாம் வாழ்வு முழுவதும் கற்றுக்கொள்ளவும், பயிற்சிகள் பெறவும், திறன்களை வளர்க்கவும் வயது தடையல்ல, நமது முயற்சிகள் தான் மிக முக்கியம். அறிவு தொடர் தேடல்.
1 2
|