உணவு விலைப்பட்டியல் இனி எதற்கு?


உணவகத்திற்கு சென்றால் இன்முகம் காட்டி உபசரித்து நமக்கான உணவு மேசையை காட்டி என்ன வேண்டும் என அன்பெழுக விசாரிக்கும் பண்பெல்லாம் இனி தேவையில்லை. நேராக உணவகம் செல்ல வேண்டியது. மேசையில் இருக்கும் கணித்திரையில் உணவுப் பொருட்கள் மற்றும் விலை விபரங்களை பார்க்க வேண்டியது. அதிலேயே பதிவு செய்தால் போதும், உணவு நமது மேசைக்கே வந்து விடும். ஐரோப்பா, அமெரிக்கா, இஸ்ரேல், ஐப்பான் நாடுகளின் உணவகங்களில் தற்போது பயன்படுத்தப்படும் தொழில் நுட்பத்தை தான் விவரித்து கொண்டிருக்கிறேன். நாம் உண்ண விரும்புகின்ற உணவு வகைகளை கணித்திரையில் படங்களோடு பார்த்து விபரங்கள் அறிந்து தேர்வு செய்யும் முறை இளைஞர்களையும், இளம் பெண்களையும் நுகர்வேராக ஈர்த்துள்ளது. பிரான்ஸ், தென் ஆப்பிரிக்கா மற்றும் பெல்ஜியத்தில் உள்ள காய்கறி மற்றும் விலங்கு பண்ணைகள் இத்தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தங்கள் காய்கறிகள் மற்றும் இறைச்சி போன்ற உணவு வகைகளுக்கான முன்பதிவை பெற்று வினியோகம் செய்யும் முறையை வளர்த்துள்ளன. வளர்ந்து வரும் அறிவியல் தொழில் நுட்பங்கள் அன்றாட வாழ்க்கையின் பயன்பாடாக வருவது இதன் மூலம் கண்கூடு. 1 2
|