சிங்காய் மாநிலத்தின் சிறுபான்மை தேசிய இனப் பண்பாடு மீதான பாதுகாப்பு
cri
சிங்காய் மாநிலம், சிங்காய்-திபெத் பீடபூமியில் அமைந்துள்ளது. இங்கு பல தேசிய இனங்கள் வாழ்கின்றன. செழிப்பான பல்வகை தேசிய இனப் பண்பாடுகளால், சிங்காயில் தனித்தன்மை வாய்ந்த நாட்டுப்புறக் கலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. கடந்த சில ஆண்டுகளாக, நவீனகால பண்பாடு, பாரம்பரியக் கலைகளிடம் தாக்கம் ஏற்படுத்துவதுடன், சிங்காய் மாநிலத்தில் பல பழமை வாய்ந்த நாட்டுப்புறக் கலைகள் அழியும் அபாயத்தில் உள்ளன. இப்பிரச்சினையைத் தீர்க்க, சிங்காய் மாநில அரசு பல பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இன்றைய நிகழ்ச்சியில், சிங்காய் மாநிலத்தின் நாட்டுப்புற கலைகளான "Hua Er" மற்றும் "Thang ga" ஆகியவை, அரசு மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்களின் கூட்டு முயற்சிகளுடன், எவ்வாறு மீண்டும் வளர தொடங்கியது என்பது பற்றி அறிமுகப்படுத்துகின்றோம்.
 நேயர்களே, இப்போது நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பது, சிங்காய் மாநிலத்தின் He Huang பிரதேசத்தில் பரவலாக பரவி வரும் நாட்டுப்புறக் கலை வடிவமாகும். "Hua Er" என்ற இவ்வடிவத்துக்கு தனித்தன்மை வாய்ந்த பாடல் வரிகள் மற்றும் இராகம் உண்டு. கடந்த பல நூற்று ஆண்டுகளாக சீனாவின் Gan Su, சிங்காய், Ning Xia, சிங்கியாங் முதலிய சிறுபான்மை தேசிய இன மக்கள் வாழும் பிரதேசங்களில் "Hua Er" கலை வடிவம் பரவி இருக்கின்றது. இப்பிரதேசங்களிலான பொது மக்கள் இக்கலை வடிவத்தை மிகவும் நேசிக்கின்றனர். ஆனால், சமூக வளர்ச்சியுடன் கூடிய நவீனகால பண்பாடு ஏற்படுத்திய தாக்கத்தினால், "Hua Er"கலையின் வளர்ச்சி அழியும் நிலையில் சிக்கிக்கொண்டது. இக்கலை வடிவத்தை மேம்படுத்தும் வாரிசு பற்றாக்குறை, மிக பழமை வாய்ந்த இசைகள், காலதாமதமின்றி காப்பாற்றப்படாமல் இருந்ததால், இவ்வடிவம் அழியும் அபாயத்தில் உள்ளது. சிங்காய் மாநிலத்தின் பண்பாட்டு வாரியம் இதில் அதிக கவனம் செலுத்தியுள்ளது. இந்த அரிய கலை வடிவத்தைக் காப்பாற்ற, தொடர்புடைய வாரியம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சிங்காய் மாநிலத்து பண்பாட்டு அலுவலகத்தின் அதிகாரி Li Xiao Yan அம்மையார் பேசுகையில், தற்போது சிங்காய் மாநில அரசு, பழமை வாய்ந்த நாட்டுப்புற இசைகளைத் திரட்டுவதோடு, இளம் "Hua Er" கலை பாடகர்களைப் பயிற்றுவிக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்று தெரிவித்தார். அவர் கூறியதாவது: (

"நாட்டுப்புற பாடகர்களைக் கண்டுபிடிக்க, ஆண்டுதோறும், "Hua Er" கலை பாடகர் போட்டியை நடத்துகின்றோம். போட்டிகளில் பரிசு பெற்ற பாடகர்கள், பெய்சிங்கில் உள்ள பல்வேறு குடியிருப்புப் பிரதேசங்களிலும், உயர் கல்வி நிலையங்களிலும் நிகழ்ச்சிகள் அரங்கேற்ற ஏற்பாடு செய்கின்றோம். அவர்களின் உற்சாகமும் வலுவடைகிறது. சிறுபான்மை தேசிய இன மற்றும் நாட்டுப்புற பண்பாடுகளைக் காப்பாற்றுவதற்கும், அதன் வாரிசுகளைப் பாதுகாத்து வளர்ப்பதற்கும் இது உந்துவிசையாக உள்ளது. "Hua Er" கலை பாடகர் போட்டிகள் நடைபெறுவதை தவிர, சிங்காய் மாநிலத்தில் புகழ் பெற்ற இளம் "Hua Er" பாடகர்கள் பற்றிய தரவுத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இம்மாநிலத்தில் உள்ள பல்வேறு பிரதேசங்களின் பண்பாட்டகங்களும், கலை பள்ளிகளும் இளம் "Hua Er" பாடகர்களுக்குப் பயிற்சி அளித்துள்ளன. தவிர, "Hua Erவின்" இராகம் மற்றும் பாடல் வரிகளும் புத்தாக்கம் செய்யப்பட்டுள்ளன. தற்போது, சிங்காய் மாநிலத்தின் "Hua Er" வடிவம், நாட்டின் முதலாவது தொகுதி பொருள் சாரா பண்பாட்டு மரபுச்செல்வங்களின் பாதுகாப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டு, பெரிதும் பாதுகாக்கப்பட்டுள்ளது. Hua Er, சிங்காய் மாநிலத்தின் நாட்டுப்புறப் பாட்டு கலை வடிவங்களில் பிரதிநிதியாக திகழ்கின்றது என்றால், "Thang--ga", இம்மாநிலத்தின் நாட்டுப்புற ஓவியம் மற்றும் பூ தையல் கலையின் பிரதிநிதியாக திகழ்கின்றது. "Thang--ga", பொன் வெள்ளி பட்டு சரிகையிலான ஓவியம் மற்றும் பூ வேலைப்பாடு ஆகும். இதன் உள்ளடக்கம், திபெத் இன மதம், வரலாறு, பண்பாடு, கலை, அறிவியல் தொழில் நுட்பம் முதலியவற்றுடன் தொடர்புடையது. திபெத் இன மக்களின் நம்பிக்கையும் விவேகமும், "Thang--ga" மூலம் வெளிப்படுத்தப்படுகின்றன. 1 2
|
|