• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-03-21 09:27:24    
சிங்காய் மாநிலத்தின் சிறுபான்மை தேசிய இனப் பண்பாடு மீதான பாதுகாப்பு

cri

நீண்டகாலமாக, "Thang--ga", தலைசிறந்த, பளபளக்கும் ஓவியம், பூ வேலைப்பாடு ஆகியவற்றால் புகழ் பெற்றது. இந்த அரிய நாட்டுப்புறக் கலை முன்னேற்றப்படும் பொருட்டு, நாட்டுப்புற கலை பொருட்காட்சியை நடத்துவது, "Thang--ga" ஓவியத் துறையைத் திறந்து வைப்பது முதலிய நடவடிக்கைகள் மூலம், மேலதிக மக்கள், "Thang--ga" ஓவியத்தின் வாரிசுகளாக மாறுவதற்கு சிங்காய் மாநில அரசு ஊக்கமளித்துள்ளது.


கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக, 36 வயதான Niang Ben, "Thang--ga" ஓவியத் துறையில் ஈடுபட்டு வருகின்றார். இத்துறையில் அவர் மாபெரும் சாதனைகளை பெற்றுள்ளார். "Thang--ga" கலையைப் பரவல் செய்து, வாரிசுகளைப் பயிற்றுவிக்கும் பொருட்டு, 2007ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள், அவருடைய சொந்த முதலீட்டில், Re Gong ஓவியப் பள்ளியை நிறுவினார். இது வரை, சிச்சுவான், திபெத், சிங்காய் முதலிய இடங்களின் சுமார் 40 மாணவர்கள் இப்பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். "Thang--ga" ஓவிய திறமைசாலிகளைப் பயிற்றுவிப்பதற்கு, 3 முதல் 7 ஆண்டுகள் தேவைப்படுகின்றன. வறுமை பிரதேசங்களிலிருந்து வருகின்ற கல்வி கட்டணம் கொடுக்க முடியாத மாணவர்களுக்கு இலவச பயிற்சியை இப்பள்ளி வழங்கியுள்ளது என்று Niang Ben கூறினார்.
திபெத் இன ஓவியக் கலைஞர் Xi He Dao, "Thang--ga" ஓவியத் துறையின் பிரதிநிதியாக திகழ்கின்றார். கடந்த 55 ஆண்டுகள் "Thang--ga" ஓவியத் துறையி்ல் அவர் ஈடுபட்டு வருகின்றார். 2006ஆம் ஆண்டு, சீன நுண் கலை பேராசிரியர் என்ற புகழ் அவருக்கு சூட்டப்பட்டது. "Thang--ga" தையற்கலை, சிங்காய்-திபெத் பீடபூமிக்கு சொந்தமாயிருக்கின்றது. மட்டுமல்ல, இது சீனத் தேசத்தின் ஒளிவீசும் பண்பாட்டின் ஒரு பகுதியுமாகும். மனித குலத்தின் பொது செல்வமும் இதுவாகும். தற்போது, "Thang--ga" கலையைப் பாதுகாக்க, சிங்காய் மாநில அரசும், அரசு சாரா அமைப்புகளும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. இக்கலையின் முன்னேற்றம் பற்றி Xi He Dao முழு நம்பிக்கை கொள்கின்றார். அவர் கூறியதாவது:


"'Thang--ga தையற்கலை' முன்னேற்ற அளவு மென்மேலும் விரிவாகியுள்ளது. தேசிய இனப் பண்பாடு பற்றிய நாட்டின் கொள்கை மிக நல்லது. நடுவண் மற்றும் மாநில நிலை பண்பாட்டு வாரியங்கள் இத்துறையிலான பணிகளை மிகவும் ஆதரித்துள்ளன" என்றார், அவர்.
சிங்காய் மாநிலத்துக்கு பழமை வாய்ந்த வரலாறு மற்றும் ஓளிவீசுகின்ற தேசிய இன பண்பாடு உண்டு. "Hua Er" மற்றும் "Thang--Ga", அங்குள்ள அதிகப்படியான தேசிய இன மக்களின் அன்றாட கலைகளில் ஒரு சிறிய பகுதியாக மட்டுமே இருக்கின்றன. இதர நாட்டுப்புறக் கலை வடிவங்கள் பற்றி சிங்காய் மாநிலம், வெவ்வேறான நடவடிக்கைகளை மேற்கொண்டு, பாதுகாத்துள்ளது.
சிங்காய் மாநிலத்தின் சிறுபான்மை தேசிய இனக் கலைகளைப் பாதுகாப்பது என்பது, இம்மாநிலத்தின் சிறுபான்மை தேசிய இனப் பண்பாட்டைப் பரவல் செய்து, இணக்கம் படைத்த பண்பாட்டை உருவாக்குவதற்கு ஆழந்த முக்கியத்துவம் வாய்ந்தது என்று சிங்காய் மாநிலத்தின் துணைத் தலைவர் Ji Di Ma Jia தெரிவித்தார். அவர் கூறியதாவது:


"சிங்காய் மாநிலத்தின் பல தேசிய இனங்களுக்கு அரிய நாட்டுப்புறக் கலைகள் உண்டு. இந்த நாட்டுப்புற கலைகள், சீனத் தேசிய இன மற்றும் நாட்டுப்புறப் பண்பாட்டு களஞ்சியத்தில் பிரிக்கப்பட முடியாத பகுதியாகும். பண்பாடு, நாட்டின் ஒட்டுமொத்த ஆற்றலின் முக்கிய காரணியாகும். பண்பாட்டு இணக்கம், சமூக மற்றும் தேசிய இனங்களுக்கிடை இணக்கங்களை நனவாக்குவதற்கான முக்கிய அடிப்படையாகவும் முன்நிபந்தனையாகவும் திகழ்கின்றது. எனவே இது மிகவும் முக்கியமானது" என்றார், அவர்.
1 2