• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-03 11:46:16    
செய்தி அறிவிப்பில் பங்கெடுத்த இந்திய செய்தியாளர்கள் (ஆ)

cri
கலை.......இந்த முறை செய்தியறிவிப்பில் இன்னொரு இந்திய செய்தியாளர் பங்கெடுத்தார். அவருடைய பெயர் இராகவேந்திரா.

தமிழன்பன்........ஆமாம். இராகவேந்திரா கடந்த ஆகஸ்ட் திங்கள் தான் பெய்ஜிங் வந்தார். அவருடைய அறிமுகத்தை கேளுங்கள்.

நான் பெய்ஜிங்கிலுள்ள பிராஸ் டிரஸ்ட் ஆவ் இந்தியாவைச் சேர்ந்த செய்தியாளர். சீனத் தேசிய மக்கள் பேரவையின் கூட்டத் தொடரின் துவக்க விழாவில் கலந்து கொண்டு தலைமை அமைச்சர் வென்சியாபாவ் அளித்த அரசுப் பணியறிக்கையை கருத்தூன்றி விபரமாக கேட்டறிந்தேன் என்று அவர் கூறினார்.

கலை.......பிரஸ்டிரஸ்ட் ஆப் இந்தியா இந்தியாவில் 1947ம் ஆண்டு நிறுவப்பட்ட மிக பெரிய செய்தி ஊடகமாகும். அதன் தலைமையகம் மும்பையில் அமைந்துள்ளது. செய்தியறிவிப்புக்குப் பொறுப்பான தலைமை பதிபாசிரியர் பகுதி புது தில்லியில் அமைந்துள்ளது. பெய்ஜிங்கிலான அலுவலகத்தில் இராகவேந்திரா மட்டுமே வேலை செய்கிறார் என்று அறிந்து கொண்டேன். சீனாவின் முக்கிய அரசியல் வாழ்க்கையை அறிவிக்கும் போது அவருடைய எண்ணம் என்ன என்பது பற்றி விவரிக்கலாமா?

தமிழன்பன்........மகிழ்ச்சி. பெய்ஜிங்கில் நடைபெற்ற சீன் தேசிய மக்கள் பேரவை மற்றும் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு என இரண்டு கூட்டங்கள் பற்றி உயர்ந்த உற்சாகத்துடன் தனியாக செய்தியறிவிப்பில் அவர் ஈடுபட்டார். சீனத் தலைமை அமைச்சர் வென்சியாபாவ் துவக்க விழாவில் அளித்த அரசுப் பணியறிக்கையை அவர் மதிப்பீடு செய்தார். பணியறிக்கையில் குறிப்பிடப்பட்ட அடிப்படை வசதிகளின் கட்டுமானம், கிராப்புற வளர்ச்சி ஆகியவை அவர் கவனம் செலுத்திய பிரச்சினைகளாகும்.

கலை.......இது பற்றிய அவரின் கருத்தை விபரமாக அறிமுகப்படுத்தலாமா?

 

தமிழன்பன்........கண்டிப்பாக. அது பற்றி அவரது உரையை கேளுங்கள்.

இந்தியாவும் சீனாவும் பரஸ்பரம் கற்றுக் கொள்ள வேண்டியது பல. அடிப்படை வசதிகளின் கட்டுமானத்திலும் வேளாண் வளர்ச்சியிலும் சீனாவிலிருந்து இந்தியா பல அனுபவங்களை கற்றுக் கொள்ளலாம்.

கலை........இது பற்றி சைப்பால் தாஸ்குப்து என்ன குறிப்பிடுகிறார்?

தமிழன்பன்........கிராமப்புற பிரச்சினை சீனாவும் இந்தியாவும் எதிர்நோக்கியுள்ள பெரும் பிரச்சினையாகும். சீனாவின் பொருளாதாரம் மற்றும் சமூகத்தில் காணப்பட்ட மாற்றங்கள் உலக கவனத்தையும் இந்திய கவனத்தையும் ஈர்த்துள்ளன. ஆகவே இம்மாற்றங்களும் நான் என் சக நாட்டவர்களுக்கு அறிவிக்க விரும்பிய விபரங்களாகும் என்று சைப்பால் தாஸ்குப்து கூறினார்.

கலை.......செய்தியறிவிப்பில் அவர் காட்டிய உற்சாகத்தை பாராட்டுகின்றோம். சில நாட்களுக்கு முன் அவர் திபெதில் பயணம் மேற்கொண்டார். அவருடைய திபெத் அனுபவத்தை கேளுங்கள்.

1 2