தமிழன்பன்........திபெதில் பணி பயண வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அங்குள்ள வளர்ச்சியை பார்வையிட்ட பின் சீனாவில் அடிப்படை சாதனங்களின் கட்டுமான வேகம் என் மனதில் ஆழமாக பதிந்து விட்டது.
கலை........திபெத் அவர் மனதில் நினைத்ததை விட சிறப்பாக இருந்தது. பல ஆயர்கள் வசதியான மாடி வீட்டில் வாழ்கின்றனர். அகலமான சாலைகளில் நடக்கின்றனர். தூய்மையான குடி நீர் வசதியுள்ளது. வசதியாக மின்சாரத்தை பயன்படுத்துகிறார்கள் இவையனைத்தும் அவர் தம் சகநாட்டவர்களுக்கு அறிவிக்க வேண்டிய தகவல்களாகும்
தமிழன்பன்........ஆமாம். கடந்த சில ஆண்டுகளில் சீன-இந்திய உறவு சீரடைந்துள்ளது. 2005ம் ஆண்டு ஏப்ரல் திங்கள் சீனத் தலைமை அமைச்சர் வென்சியாபாவ் இந்தியாவில் பயணம் மேற்கொண்ட போது இரு நாடுகளும் கூட்டறிக்கையை வெளியிட்டு உத்திப்பூர்வ ஒத்துழைப்பு கூட்டாளி உறவை நிறுவுவதாக அறிவித்தன.
கலை........2006ம் ஆண்டு நவம்பர் திங்களில் சீன அரசுத் தலைவர் ஹுச்சிந்தாவ் இந்திய பயணம் மேற்கொண்ட போது இரு நாடுகளும் கூட்டறிக்கையை வெளியிட்டன. இவ்வாண்டின் ஜனவரி திங்கள் இந்திய தலைமை அமைச்சர் மன்மோகன் சிங் சீனாவில் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டார். அப்போது 21ம் நூற்றாண்டுக்கான எதிர்ப்பார்ப்பு என்ற ஆவணத்தில் இரு நாடுகளும் கையொப்பமிட்டன.
தமிழன்பன்........இருநாடுகளுக்கிடையிலான உயர் நிலை பரஸ்பர தொடர்புகள் பயனுள்ள பல்வேறு துறைகளிலான பரிமாற்றத்தை முன்னேற்றியுள்ளன என்று இராகவேந்திரா மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
கலை........சீனத் தேசிய மக்கள் பேரவை மற்றும் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு பற்றி தன்னுடைய செய்தி அறிவிப்பில் மேலும் கூடுதலான விவசாய பிரதிநிதிகளை தாம் பேட்டி காண வேண்டும் என்று ராகவெண்திரா எங்கள் செய்தியாளரிடம் தெரிவித்தார்.
தமிழன்பன்........சைப்பால் தாஸ்குப்து தலைமை அமைச்சர் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் வினா எழுப்பி அதற்கான உரிய விளக்கத்தையும் பெற்றார்.
கலை........நேயர்கள் இதுவரை கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி மூலம் சீனத் தேசிய மக்கள் பேரவை பற்றியும் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு பற்றியும் அறிவிக்கப்பட்ட தகவல்களைக் கேட்டதற்கு மிக்க நன்றி.
தமிழன்பன்........அடுத்த சனிக்கிழமை நீண்டும் சந்திப்போம்.
கலை........வணக்கம் நேயர்களே. 1 2
|