உங்களுக்குத் தெரியுமா? தூய்மையற்ற நகர கழிவு நீரை கையாளப்பட்ட பின், மின்னாக்கத்தில் பயன்படுத்தப்படலாம். நிலக்கரி எரிந்த பிறகு உருவாக்கப்பட்ட கழிவுப் பொருள் பதனீடு செய்யப்பட்ட பின், கட்டுமானத்தில் இன்றியமையாத காரையாக மாறலாம். இவற்றைப் போன்ற எரிபொருளைச் சிக்கனப்படுத்தும் வழிமுறைகள் வடக்கு சீனாவிலுள்ள உள் மங்கோலியத் தன்னாட்சி பிரதேசத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. இது மட்டுமல்ல, மீத்தேன் வாயு, சூரிய ஆற்றல் உள்ளிட்ட புதிய ரக தூய எரியாற்றல்கள் அங்கே அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன.
ஊ ஹாய் நகரம் உள் மங்கோலிய நடுப்பகுதியில் அமைந்துள்ளது. அனைவரும் அறிந்த படி, நிலக்கரி உற்பத்தி தொழில் சுற்றுச்சூழலைக் கடுமையாகப் பாதிக்கும் தொழிலாகும். ஆனால், இந்நகரின் SHEN HUA ஊ ஹாய் நிலக்கரிக் கீல் கூட்டு நிறுவனத்தின் உற்பத்தி பிரதேசத்தில், சாதாரண நிலக்கரி தொழில் நிறுவனங்களின் கேடான சூழல் காணப்படவில்லை. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் தமது தொழில் நிறுவனம் மிகவும் கவனம் செலுத்தி, நிலக்கரியின் கழிவுப் பொருட்களைக் கையாண்டு மீண்டும் பயன்படுத்துவதில் புதிய தொழில் நுட்பம் பற்றி அயராமல் ஆராய்ந்து வருகின்றது என்று இந்தத் தொழில் நிறுவனத்தின் தலைமை இயக்குநர் LI HUAI GUO அறிமுகப்படுத்தினார். எரியாற்றலைச் சிக்கனப்படுத்தி, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பாதையில் இத் தொழில் நிறுவனம் நடை போடுவதாக அவர் கூறினார். அவர் கூறியதாவது

நிலக்கரியின் உற்பத்தி போக்கில் அதிகக் கழிவு பொருட்கள் உருவாகின்றன. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகின்றது. இப்போது, இந்தக் கழிவுப் பொருட்களை மீண்டும் பயன்படுத்தி, மின் உற்பத்தி செய்கின்றோம் அல்லது காரையை உற்பத்தி செய்கின்றோம். கழிவு நீரையும் மீண்டும் தூய்மைப்படுத்தி பயன்படுத்துகின்றோம். எமது உற்பத்தி வளாகத்தில் நீர் வளம் மறு சுழற்சி செய்து பயன்படுத்தப்படுகின்றது. வீணாகவில்லை என்றார் அவர்.
முன்பு, நிலக்கரி தூசு போன்ற சுற்றுச்சூழலை மாசுப்படுத்திய கழிவுப் பொருட்கள், தற்போது மீண்டும் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய வடிவம் மூலம், SHEN HUA ஊ ஹாய் நிலக்கரிக் கீல் கூட்டு நிறுவனம், அதிக எரியாற்றலைப் பயன்படுத்தி, சுற்றுச்சூழலை மாசுபடுத்திய நிலையை மாற்றி, தற்போது சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் அதேவேளையில், அதிக பொருளாதார பயனை வேகமாக அதிகரித்துள்ளது.

உள்மங்கோலியாவில், செழிப்பான எறியாற்றல் வளம் உள்ளது. நிலக்கரி, இரும்புருக்கு, மின்னாற்றல் ஆகியவற்றை முக்கியமாகக் கொண்ட தொழில்கள் இங்கே சுறுசுறுப்பாக வளர்ந்து வருகின்றன. ஆனால், இத் தொழில்கள் உள் மங்கோலியாவின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்திய வேளையில், அதிக எரியாற்றலைப் பயன்படுத்தி சுற்றுச்சூழலையும் கடுமையாக மாசுபடுத்தியுள்ளன. கடந்த சில ஆண்டுகளாக, இத் தொழில்களில் ஈடுபடும் சில முக்கிய நிறுவனங்களில், தன்னாட்சி பிரதேச அரசு எரியாற்றலைச் சிக்கனப்படுத்தி, வெளியேற்றக் கழிவுப் பொருட்களைக் குறைத்து, பயனை அதிகரிப்பது என்ற தூய்மை உற்பத்தியை மேற்கொண்டு வருகின்றது. தற்போது, உள் மங்கோலியாவின் SHEN HUA ஊ ஹாய் நிலக்கரிக்கீல் கூட்டு நிறுவனம் போன்ற நூற்றுக்கு மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் எரியாற்றலைச் சிக்கனப்படுத்தி சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பாதையில் நடைபோடுகின்றன.

இதனிடையில், உள் மங்கோலிய மக்களும், தங்களது அன்றாட வாழ்க்கையில் எரியாற்றலைச் சிக்கனப்படுத்தி சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முயற்சி செய்கின்றனர். bao tou நகரிலுள்ள, lian feng என்னும் கிராமத்தில், ஒவ்வொரு குடும்பத்தின் பன்றி வளர்ப்பு இடத்தின் நிலத்தடியில் மீத்தேன் வாயு குளம் அமைக்கப்பட்டுள்ளது. குளத்திலிருந்து உருவாக்கும் மீத்தேன் வாயு சமாக்கவும் நீர்ப்பாசனம் செய்யவும் பயன்படுத்தப்படுகின்றன.

மீத்தேன் வாயுவைப் பயன்படுத்தும் பல புதிய உற்பத்தி பொருட்களை இக்கிராமவாசிகள் கண்டுபிடித்துள்ளனர். கிராமத்தின் பொறுப்பாளர் ZHANG JIE PING மகிழ்ச்சியுடன் எங்களுக்கு எடுத்து கூறியதாவது
1 2
|