• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-08 14:59:31    
உள்மங்கோலிய தன்னாட்சி பிரதேசத்தில் எரியாற்றலைச் சிக்கனப்படுத்தும் பணி

cri

இது மீத்தேன் வாயுவை பயன்படுத்தும் சோறு பொங்கும் வாணலி. இதற்கு மின்சாரம் தேவையில்லை. தவிர, குளிர்காலத்தில் மீத்தேன் வாயு மூலம் வெப்ப காற்று பெறுகின்றோம் என்றார் அவர்.

வடக்கு சீனாவில் அமைந்துள்ள உள் மங்கோலியத் தன்னாட்சி பிரதேசத்தில், இயற்கை வளங்கள் அதிகம். சில பிரதேசங்களில் இந்த மேம்பாடுகளைப் பயன்படுத்தி, தூய்மையான எரியாற்றல் வளர்க்கப்படுகின்றது. எடுத்துக்காட்டாக, WU LAN CHA BU நகரின் காற்று வளம் முழு தன்னாட்சி பிரதேசத்திலுள்ள காற்று வளத்தில் 30 விழுக்காடு வகிக்கின்றது. 2 ஆண்டுகளுக்கு முன், சீனாவில் பிரதேச நிலை வாய்ந்த முதலாவது காற்ற ஆற்றல் வளர்ச்சி திட்டத்தை இந் நகரம் வகுத்துள்ளது. நாட்டின் மூத்த காற்று மின்னாற்றல் நிபுணர்களை ஆலோசகர்களாக அழைத்து, நகரில் 6828 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்புடைய காற்று மின்னாற்றல் நிலையத்தை கட்டியமைக்க இந்நகரம் திட்டமிட்டுள்ளது. இந்த நகரத்துக்கும் பெய்ஜிங்கிற்கும் இடையிலான தூரம், 336 கிலோமீட்டர் தூரம் மட்டுமே. ஆகையால், இங்கே உற்பத்தி செய்த ஒரு பகுதி மின்னாற்றல் பெய்ஜிங்கிற்கு அனுப்பப்படுகின்றது. 2008 பெய்ஜிங் பசுமை ஒலிம்பிக்கிற்கு இது வலுவான ஆதரவு அளிக்கும்.

சீனாவின் காற்று மின்னாற்றல் நகராக wu lan chabu நகரைக் கட்டியமைக்க வேண்டும் என்று இந்நகரின் கம்யூனிஸ்ட் கட்சி கமிட்டியின் செயலாளர் wu yong xin கூறினார். அவர் கூறியதாவது

எமது நகரில் எங்கெங்கும் நல்ல காற்று வீசுகின்றது. காற்று மின்னாற்றல் நிலையம் கட்டியமைக்கலாம். WU LAN CHA BU நகரில் உற்பத்தி செய்யப்பட்ட மின்னாற்றல் எப்போதும் வெளியூருக்கு அனுப்பப்படலாம். இந்நகரைச் சீனாவின் காற்று மின்னாற்றல் நகராக கட்டியமைப்பது ஒரு கனவு இல்லை என்றார் அவர்.

தூய்மையான எரியாற்றலை வளர்க்கும் அதேவேளையில், உள் மங்கோலிய தன்னாட்சி பிரதேசம் பின்தங்கிய உற்பத்தி ஆற்றலை நீக்குவதிலும் ஈடுபடுகின்றது. மக்களுக்கு தெள்ளத்தெளிவான வானத்தை திரும்பி வழங்குவதென, கடந்த 10 ஆண்டுகளாக சுற்றுச்சூழலை கடுமையாக மாசுபடுத்திய 600க்கு அதிகமான நடுத்தர மற்றும் சிறிய தொழில் நிறுவனங்களை ஊ ஹாய் நகரம் சரிப்படுத்தியுள்ளது அல்லது மூடியுள்ளது என்று நகரின் தலைவர் BAI XIANG QUN தெரிவித்தார். தவிரவும், எரியாற்றலைச் சிக்கனப்படுத்தி மாசுபொருட்களை வெளியேற்றும் தொழில் நுட்பச் சாதனங்களை சீர்செய்வதில் சில பெரிய தொழில் நிறுவனங்களுக்கு, நகராட்சி உதவி செய்துள்ளது. அவர் கூறியதாவது

தொழில் நுட்ப சாதனங்களின் தரத்தை உயர்த்த நகர அரசு உதவி செய்கின்றது. உற்பத்தி வசதியின் தொழில் நுட்பம் மல்லடுமல்ல, எரியாற்றலைச் சிக்கனப்படுத்தி மாசுபொருட்களை வெளியேற்றும் தொழில் நுட்பமும் அரசு தொழில் நிறுவனங்களின் தரத்தை எட்ட வேண்டும் என்றார் அவர்.

நேயர்களே.சுமார் 10 ஆண்டுகால ஆய்வு மூலம், தற்போதைய உள் மங்கோலியத் தன்னாட்சி பிரதேசம், எரியாற்றலைச் சிக்கனப்படுத்தி, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வளர்ச்சி பாதையைக் கண்டுப்பிடித்துள்ளது.


1 2