• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-01 15:47:22    
புகை தடுப்புக்கான முயற்சி

cri

மே திங்கள் முதல் நாள் தொடக்கம் சீனாவின் பெய்ஜிங் மாநகரில் புகை பிடிக்க தடை செய்வது தொடர்பான புதிய விதி நடைமுறைக்கு வர துங்கியுள்ளது. பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் அனைத்து திடல்கள் அரங்குகள் உடல் பயிற்சி அரங்குகளும் சமூகத்திற்கு திறந்து வைக்கப்பட்ட தொல் பொருள் பாதுகாப்பு இடங்களும் புகை பிடிக்க தடை செய்யப்பட்ட இடங்களாகியுள்ளன. சட்ட விதியின் நடைமுறையாக்கத்தை கண்காணிக்கும் வகையில் தொடர்புடைய பெய்ஜிங் மாநகர வாரியங்கள் ஆயிரத்துக்கு மேற்பட்ட சிறப்பு கண்காணிப்பு பணியாளர்களை அணித்திரட்டியுள்ளது. புகையில்லா ஒலிம்பிக்  என்ற குறிக்கோளை நனவாக்கும் வகையில் இப்பணியில் பங்கு கொள்ள ஒரு லட்சம் தொடண்டர்களும் சேர்க்கப்படுவர்.

பெய்ஜிங் மாநகராட்சி 1992ம் ஆண்டில் பொது இடங்களில் புகை பிடிக்க தடைசெய்வது தொடர்பான விதிகளை முன்வைத்தது. சில பொது இடங்களில் புகை பிடி தடை நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. புகையில்லா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி என்ற குறிக்கோளை நிறைவேற்றுவதை உத்தரவாதம் செய்யும் நோக்கத்துடன் புகை பிடி தடை அளவு பொது இடங்களுக்கு அப்பால் விரிவாக்கப்பட்டுள்ளது. இது பற்றி பெய்ஜிங் நகரவாசிகள் ஆதரவையும் வரவேற்பையும் தெரிவித்துள்ளனர்.

 

 

பொது இடங்களில் புகை பிடிக்க தடைசெய்வது என்பது மிக அவசியமானது. புகைபிடிப்பவர்களையும் சாதாரண மக்களையும் பொறுத்தவரை இம்முயற்சி அன்பு காட்டும் முயற்சியாகும். இது ஒலிம்பிக் விளையாட்டு தோற்றத்துடனும் இணைக்கப்படுகின்றது என்று ஆண் நகரவாசி ஒருவர் கூறினார்.

இந்த விதிகளுக்கு நாங்கள் உடன்பட்டுள்ளோம். பெண்கள் முதியோர் மற்றும் குழந்தைகள் பொது இடங்களில் புகையினால் அல்லல்படுகின்றனர். அவர்களை பொறுத்தவரை பசுமையான காற்றை பெறும் உரிமை அழிக்கப்பட்டது என்று பெண் நகரவாசி ஒருவர் கூறினார்.

இதை வரவேற்கும் வகையில் பெய்ஜிங்கிலுள்ள உணவகங்கள், உணவு விடுதிகள் உற்சாகத்துடன் செயல்பட்டுள்ளன. புதிய விதியின் படி புகை பிடிக்க தனி இடத்தை  வகுப்பதோடு புகை பிடிக்க தடை செய்யப்பட்ட இடங்களில் தெள்ளத் தெளிவான புகை பிடி தடை அடையாளங்கள்  நிறுவப்பட்டுள்ளன. இது பற்றி காபிஃ கடையாளர் லியான் சிங் கூறியதாவது.

1 2