• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-01 15:47:22    
புகை தடுப்புக்கான முயற்சி

cri

 

 

காபிஃ குடிக்க கடைக்கு வந்த வாடிக்கையாளர்கள் புகை பிடிக்க குறிப்பிட்ட இடத்தில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் புகை பிடித்த போது ஏற்படும் புகை மாசுபாடு மற்ற வாடிக்கையாளர்களை பாதிக்காது. ஏனென்றால் இந்த இடம் மின் தூக்கிக்கு பக்கத்தில் இருக்கின்றது. அங்கே காற்று சுழற்சி சூழ்நிலை உள்ளது என்று அவர் கூறினார்.

புதிய விதியின் நடைமுறையாக்கத்தை உத்தரவாதம் செய்யும் வகையில் ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு இது பற்றிய பயிற்சியளிக்கப்பட்டது. நகரின் பல்வேறு இடங்களில் கண்காணிப்புக் கடமையை அவர்கள் செயல்படுத்துவர் என்று பெய்ஜிங் மாநகர சுகாதார வாரியத்தின் அதிகாரி சன் சியன் லீ கூறினார். தவிரவும், நகரில் ஒரு லட்சம் தொண்டர்களை சேர்த்து தாம் பணிபுரிகின்ற வாரியங்களில் புகை தடுப்பு பற்றி அவர்கள் பிரச்சாரம் செய்ய பெய்ஜிங் மாநகரின் சுகாதார வாரியம் திட்டமிட்டுள்ளது.

சீனா ஒரு பெரிய புகையிலை நுகர்வு நாடு. சீனாவில் புகைபிடிப்போரின் எண்ணிக்கை உலகின் நான்கில் ஒரு பகுதியாகும். ஆகவே பொது இடங்களில் பெருமளவில் புகை தடுப்பு நடைமுறைப்படுத்துவது கடினமானது. ஆனால் கடந்த சில ஆண்டுகளில் சீனா இத்துறையில் முதலீடு செய்த ஆற்றல் மென்மேலும் அதிகரித்துள்ளது. பொது மக்கள் அரசு நடைமுறைபடுத்திய புகை பிடி தடை நடவடிக்கைகளுக்கு மேலும் அதிகமாக ஆதரவு அளித்துள்ளனர். அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பின் படி பெய்ஜிங் நகர வாசிகளிடையில் 80 விழுக்காட்டினர் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் புகை பிடி தடை என்ற முயற்சிக்கு ஆதரவளித்துள்ளனர். ஆகவே பெய்ஜிங் மாநகராட்சி புகையில்லா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்துவதற்கு மிகப் பல மக்களின் ஆதரவு உண்டு என்று கருத்துக் கணிப்பு எடுத்துக்காட்டுகின்றது.

ஒலிம்பிகிற்கு புகையில்லா சூழ்நிலையை உருவாக்கி இந்த முயற்சி மூலம் பெய்ஜிங்கில் புகை கட்டுப்பாட்டுப் பணியை முன்னேற்றவுள்ளதாக அதிகாரி சன் சியன் லீ கூறினார்.

 

 

எங்களை பொறுத்த வரை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி ஒரு வாய்ப்பாகும். நாங்கள் மேற்கொண்டுள்ள புகை பழக்கக் கட்டுப்பாட்டு பணியை அது முன்னேற்றலாம். ஆகவே நாங்கள் இந்த வாய்ப்பினை போதியளவில் பயன்படுத்தி பெய்ஜிங்கின் புகை பழக்கக் கட்டுப்பாட்டுப் பணியை உயர் நிலையில் வைப்போம் என்று அவர் கூறினார்.


1 2