


இறந்தோருக்கு மரியாதை செய்யும், மூதாதயருக்கு நினைவேந்தல் செய்யும் ஒரு விழாவே சிங்மிங் திருவிழா. இந்த விழா தோன்றியதற்கான பின்னணியில் ஒரு பழங்கதை உண்டு. கிமு 770 முதல் 476ம் ஆண்டு வரையான காலத்தில் ஜின் என்ற நாட்டை ஆண்டு வந்த ஷியாவ் என்ற அரசனின் வைப்பாட்டி லி, தனது மகனுக்கு முடிசூட்டவேண்டி, அரசனின் மகனான் அபட்டத்து இளவரசனை கொன்று, அவனது மகனான சொங் அர்ரையும் கொல்ல வழி தேடினாள். இதையறிந்த சொங் அர், ஆதரவாளர்கள், நம்பகமானவர்கள் சிலருடன் தலைமறைவானான். காடு மேடெல்லாம் அலைந்து திரிந்து ஒருநாள் பசியில் மயங்கி விழுந்த சொங் அர்ருக்கு அவனது ஆதரவாளனாக இருந்த ஜியே ஸிதுய் தன் சதையை வெட்டி அதை சமைத்து கொடுத்தான். உண்மையறிந்த சொங் அர், மனம் நெகிழ்ந்து போக, ஜியே ஸிதுய் எதிர்காலத்தில் ஒளிநிறைந்த, தெளிவு கொண்ட அரசனாக வருவீர்கள் என்று தன் எதிர்பார்ப்பையும், விருப்பத்தையும் கூறினான். நாட்கள் உருண்டோடி ஆண்டுகள் பலாவாக சொங் அரசனானான்.
1 2
|