
சொங் அர் அரசனாக முடிசூட்டிய பின் அவனோடு காட்டிலும், மேட்டிலும் உடனிருந்து உதவிய ஆதரவாளர்களுக்கு பட்டங்களையும், பதவிகளையும் வழங்கி மகிழ்ந்தான். ஆனால் தன் சதையையே உணவாக்கி தந்து காப்பாற்றிய ஜியே ஸிதுயை அரசன் மறந்தேபோனான். இதை கண்ட சிலர் அரசன் ஜியேஸிதுயை கண்டுகொள்ளாமல் புறக்கணித்ததை எண்ணி கோபமடைந்தனர். ஜியே ஸிதுயிடம் அரசரை சந்தித்து விருதோ, பரிசோ பெற்று வரும்படி கூறினர். ஆனால் அவர்கள் கூறியதையெல்லாம் ஏற்றுக்கொள்ளாத ஜியே ஸிதுய் தன்னிடமிருந்தவற்றையெல்லாம் சீர் செய்து மூட்டை கட்டி, தனது தாயாருடன் மியன்ஷான் மலைக்கு சென்றான். இதனிடையில் அரசன் ஜின் வென்குங்காக மாறிய சொங் அர் நடந்தவற்றையெல்லாம் கேள்விப்பட்டு, வருத்தமும், வெட்கமும் அடைந்தான். தான் ஜியே ஸிதுயை மறந்துவிட்டதை எண்ணி மனம் நொந்த அரசன் தன் ஆட்களுடன் ஜியே ஸிதுயின் வீட்டுக்கு சென்றான். ஆனால் அங்கே பூட்டிய கதவுதான் காத்திருந்தது. அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் சிலர், ஜியே ஸிதுய் பதவியேதும் தேவையில்லை என்று முடிவு செய்து தன் தாயை முதுகில் சுமந்தபடி மியன்ஷான் மலைக்கு சென்றுவிட்டான் என்று சொன்னார்கள். 1 2
|