• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-07 09:25:45    
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி பற்றிய CHEN YAN HONGகின் கனவு

cri
29வது பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெறும் நாள் நெருங்கி வருகிறது. அதன் மீதான சீன மக்களின் உற்சாகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தக் கட்டுரையில், பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பெரும் கவனம் செலுத்தும் ஓய்வு நேர செய்தியாளரான ஒரு சிறுமி பற்றியும் அவரது கனவு பற்றியும் உங்களுக்கு அறிமுகப்படுத்துகின்றோம்.

"அனைவருக்கும் வணக்கம். என் பெயர் CHEN YAN HONG. இவ்வாண்டு எனக்கு 14 வயதாகிறது. பரந்துபட்ட துறைகளில் ஆர்வம் கொள்கின்றேன். தற்போது சீன மத்திய தொலைக்காட்சி நிலையத்தில் குழந்தைகள் தொலைக்காட்சியின் தொகுப்பாளராக இருக்கின்றேன். செய்தியாளராக இருக்கின்றேன்" என்றார் CHEN YAN HONG.

பல்வகை துறைகளில் திறமைமிக்க குழந்தையாக CHEN YAN HONG திகழ்கிறார். சிறு வயதில் அவர் செழிப்பான அனுபவங்களைக் கொண்டுள்ளார். மிக இளைய செய்தியாளரான அவர் செய்தியாளர்களுடன் இணைந்து சீனாவின் முக்கிய அரசியல் நிகழ்ச்சிகளை பற்றி அறிவித்துள்ளார். சீன அரசுத் தலைவரை அவர் பேட்டி கண்டார். பேட்டி கண்டதன் மூலம் சீனாவிலுள்ள அமெரிக்கத் தூதரின் நண்பராக அவர் மாறியுள்ளார். 6 ஆண்டுகால துவக்கப் பள்ளியில் இயல்பான படிப்பை நிறைவேற்றியது மட்டுமல்ல, இசையிலும், நடனத்திலும், திரைப்படக் கல்லூரியிலும் அவர் முறையாக பயிற்சி பெற்றுள்ளார். ஆடல் பாடல் துறையில் தேர்ச்சி பெற்ற அவர், திரைப்படத்திலும் தொலைக்காட்சி நாடகத் தொடரிலும் நடித்தார். சமவயது குழந்தைகளால் பாராட்டப்பட்ட சாதனை பெற்ற அவர், ஒருபோதும் தற்பெருமை கொண்டதாக இல்லை.

எண்ணற்ற பேட்டி காணும் பணிகளால், CHEN YAN HONGவின் அனுபவம் செழிப்பாகி வருகிறது. சொந்த வாழ்க்கையில் அருகில் நிகழ்ந்த பல்வகை செய்திகளில் அவர் எப்போதும் கவனம் செலுத்துகிறார். நாட்டின் முக்கிய விவகாரங்களில் அவர் மேலும் பெரும் கவனம் செலுத்துகிறார். நடைபெற இருக்கும் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, அவரது கவனத்தை ஈர்க்கும் முக்கிய நிகழ்ச்சியாக மாறியது இயல்பே. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்த விண்ணப்பம் செய்யும் குழுவைச் சேர்ந்த காவற்துறையின் தொடர்பாளர் WANG SHENG ANனை கண்ட பேட்டி, மிக முக்கியத்துவம் வாய்ந்த பேட்டிகளில் ஒன்றாகும். இது பற்றி CHEN YAN HONG கூறியதாவது—

"WANG SHENG AN மாமா, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான விண்ணப்பத்தின் வெற்றிக்காக, பலவற்றைக் கைவிட்டார். எனக்கு ஊக்கம் ஊட்டினார். நான் மனம் உருகினேன். அவரை பேட்டி கண்ட போது, அவர் மகிழ்ச்சியாகவும் உற்சாகத்துடனும், தெளிவான உணர்வுப்பூர்வமான முகத்துடன் காணப்பட்டார். தாய்நாடு மற்றும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி மீதான அவரது பாசத்தையும் உற்சாகத்தையும் உணர முடிந்தது. அந்தப் பேட்டிக்குப் பின், எனக்கு நேரடி அனுபவம் கிடைக்கும் வகையில், நடவடிக்கையில் அல்லது விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ளும் போது அவர் ஒவ்வொரு முறையும் என்னை அழைத்து செல்கிறார்." என்றார் அவர்.

1 2