
இதனால், ஒலிம்பிக் பற்றி அறிந்து கொள்ளவும், பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி தொடர்பான பல்வகை செய்திகளை அறிவிக்கவும் CHEN YAN HONG மேலதிக வாய்ப்புகளைப் பெற்றுள்ளார். இந்தப் போக்கில் ஒலிம்பிக் தொடர்பான ஒரு கனவு அவரது மனதில் தோன்றியது. சீனாவின் இடைநிலை பள்ளி மாணவர்களின் சார்பில் அவர் உலகத்துக்கு அழைப்பு விடுக்க விரும்புகிறார். 2004ஆம் ஆண்டில் நடைபெற்ற 28வது ஏதென்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் மொத்தம் 649 விளையாட்டு வீரர்கள் தங்கப் பதக்கம் வென்றனர். அவர்கள் சார்ந்த நாடுகள் மற்றும் பிரதேசங்களின் 54 சீனாவுக்கான தூதர்களுக்கும், ஒலிம்பிக் கமிட்டித் தலைவர்கள் மூவருக்கும் அழைப்பு கடிதத்தை அனுப்ப அவர் திட்டமிட்டார். ஆசிரியர் மற்றும் பெற்றோரின் உதவியுடன், சிறந்த முறையில் எழுதப்பட்ட உற்சாகம் நிறைந்த இக்கடிதம் அந்தத் தூதர்களுக்கு வழங்கப்பட்டது.

"மதிப்புக்குரிய தூரர்கள், ஒலிம்பிக் கமிட்டித் தலைவர்கள், தங்கப்பதக்கம் பெற்றவர்கள் அவர்களுக்கு, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான தொண்டர் என்ற முறையில், பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்காக மனமார்ந்த வார்த்தைகளை வழங்க நான் உங்களுக்கு உளமார்ந்த அழைப்பு விடுக்கின்றேன்" என்று CHEN YAN HONG எழுதினார்.

தற்போது பல்வேறு தூதரங்களின் வாழ்த்துகளை அவர் பெற்று வருகிறார். ஒலிம்பிக் பற்றிய அவரது கனவு நிறைவேறி வருகிறது. செய்தியாளர் என்ற முறையில் ஒலிம்பிக் பற்றிய செய்திகளை தாமாகவே அறிவிப்பது என்பதும் அவரது விருப்பம். அனைவரின் முயற்சிகளின் மூலம் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி வரலாற்றில் மிகச் சிறந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியாக இருக்க வேண்டும் என்பது அவர் நிறைவேற்ற விரும்பும் மேலும் பெரும் கனவாகும். 1 2
|