• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-14 20:15:55    
கை கால் மற்றும் வாய் நோய் தடுப்பு பற்றிய அறிவுகள்

cri

1.கை கால் மற்றும் நோய் என்றால் என்ன?

கை கால் மற்றும் வாய் நோய் வாழ்க்கையில் பொதுவாக காணப்படும் தொற்று நோய்வகைகளில் ஒன்றாகும். இது முக்கியமாக சின்னஞ்சிறு குழந்தைகளிடையில் பரவுகிறது. இது வயிற்றிலுள்ள குடல் நோய் நச்சுயிரிகளால் ஏற்படுவதாகும். EV71 என்னும் நச்சுயிரி இவற்றில் ஒனறாகும். ஆண்டு முழுவதும் இந்த நோய் பரவ வாய்ப்பு உண்டு. ஆனால் வழக்கமாக மே திங்கள் முதல் ஜுலை திங்கள் வரையான காலத்தில் உச்ச நிலையில் இந்த நோய் பரவகிறது.

இந்நோயின் அறிகுறிகள் என்ன?

நோய் உள்ளங்கை, பாதம் ஆகிய பகுதிகளில் சிவப்பு நிற புள்ளி தோன்றும். வாய்க்குள்ளே புண் காணப்படும். வலி அதிகமாக இருக்கும். சில சிறுவர்களுக்கு இருமல், உணவு உட்காள்ள விரும்பமின்மை, வாந்தி, தலை வலி போன்ற அறிகுறிகள் காணப்படுகின்றன. சிலருக்கு பாதிப்பு கடுமையாக இருக்கும். எடுத்துக்காட்டாக மூளைக் அழற்சி, இதயம், நுரை ஈரல் அழற்சி போன்ற கடுமையான பக்க விளைவுகள் ஏற்படும். சரியான நேரத்தில் சிகிச்சை பெறாவிட்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்.

2. கை கால் மற்றும் வாய் நோய் எப்படி பரவுகிறது, இதற்கான தடுப்புப் பூசி உண்டா?

இந்த நோய் பரவுவதற்கு பல வழிகள் உள்ளன. முக்கியமாக நெருக்கமான தொடர்பு கொண்டரின் மலம், எச்சில், புண்ணிலிருந்து கசியும் நீர், கை, முகம் துடைக்கும் துணி, விளையாட்டு பொம்மைகள், சாப்பிட பயன்படுத்தும் கருவிகள், பால் புட்டி, படுக்கை பொருட்கள் ஆகியவை மூலம் நோய் பரவலாம். இதுவரை அதற்கு தடுப்பு பூசி ஏதும் இல்லை. ஆனால் நோய் கண்டதும் சிகிச்சை பெற்றால் குணமடையலாம்.

3. யாருக்கு இந்த நோய் பரவும் வாய்ப்பு அதிகம்?

3 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த நோய் பரவும் வாய்ப்பு அதிகம். இவ்வயதை விட வளர்ந்தவர்களிடம் நோய் தடுப்பு ஆற்றல் முழுமையாக்கப்பட்டு விடுவதால் நோய் நச்சுயிரி பரவினாலும் அதனால் பெரிய பாதிப்பு ஏற்படுவதில்லை. ஆனால் அவருடைய உடலிலுள்ள நச்சுயிரி மற்றவருக்கு தொற்றி விடலாம். ஆகவே குழந்தைக்கு இந்த நோயை பரவவிடாமல் தடுக்கும் வகையில் பெரியோர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

4. கை கால் மற்றும் வாய் நோய் ஒரு வகை புதிய தொற்று நோயா?

இல்லை. கை கால் மற்றும் வாய் நோய் புதிய வகை தொற்று நோயல்ல. இது உலகளவில் காணப்படுகின்ற தொற்று நோயாகும். மனித குலம் 1957ம் ஆண்டில் முதல் முறையாக இந்த நோயை கண்டுபிடித்து பெயரிட்டது. உலகின் பல்வேறு நாடுகளில் ஆண்டுதோறும் இந்த நோய் ஏற்படும் வழக்கம் உண்டு. சீனாவில் 1981ம் ஆண்டு கை கால் மற்றும் வாய் நோய் பரவியது. அப்போது முதல் ஆண்டுதோறும் சிலர் நோய்வாய்ப்படுகின்றார்கள்.

5. சிகிச்சை அளிக்கப்பட்டால் கை கால் மற்றும் வாய் நோய் தீருமா?

இந்த நோய் தொற்றிவிட்ட பின் பெரும்பான்மையாக 7 முதல் 10 நாட்களுக்குள் தானே குணமடையும். பின் விளைவுகள் ஏற்படாது. தோலில் வடுக்கள் ஏதும் இருக்காது. முந்தைய நோய் பரவல் மற்றும் சிகிச்சை நிலைமையை பார்த்தால் கடுமையாக நோய்வாய்பட்டவருக்கு மூளை மற்றும் நுரை ஈரல் தொடர்புடைய அழற்சி ஏற்பட்டது. மருத்துவர்களின் சிகிச்சைக்கு இசைவாக செயல்பட்டால் இந்த நோயை எளிதாக குணமடையச் செய்யலாம்.

1 2