• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-15 14:31:12    
சீன மீட்புதவிப் படை நிலநடுக்கத்தின் மையப்பகுதியில் நுழைந்தது

cri

15ம் நாள் காலை 8மணி வரை, சீனாவின் சிச்சுவான் மாநிலத்தின் வென்ச்சுவான் மாவட்டத்துக்குச் செல்லும் பாதைகள் திறக்கப்படவில்லை என்ற போதிலும், ஆயிரக்கணக்கான சீனப் படை வீரர்களும் ஆயுதக்காவற்துறையினர்களும், பாரசூட்டில் துறையிறங்குதல், நீர்வழியில் பயணித்தல், கால்நடையாக நடத்தல் ஆகியவற்றின் மூலம், வென்ச்சுவான் மாவட்டத்திற்கு விரைந்து சென்று, மீட்புதவிப் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

மே 12ம் நாள் நிகழ்ந்த கடுமையான நிலநடுக்கத்துக்கு பின், மின்சார விநியோகம், செய்தித்தொடர்பு முதலியவை துண்டிக்கப்பட்டதால், வென்ச்சுவான் மாவட்டத்துக்கும் வெளியூர்களுக்கு மிடையிலான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இம்மாவட்டத்திலான ஒரு லட்சம் மக்களின் நிலைமை பற்றிய எந்த தகவல்களும் கிடைக்கவில்லை. அத்துடன், நிலநடுக்கத்தால் மலையில் ஏற்பட்ட மண் சரிவு, மோசமான காலநிலை, தொடர்ச்சியான நில நடுக்கம் மற்றும் அதிர்வுகள் ஆகிய காரணங்களால், மீட்புதவிப்பணியாளர்கள் வென்ச்சுவான் மாவட்டத்தில் நுழைய முடியாத நிலை நீடித்தது. இந்நிலைமையில், அனைத்து வழிமுறைகளையும் பயன்படுத்தி, படைகள் வென்ச்சுவான் மாவட்டத்தில் விரைவாக சென்று மீட்புதவிப் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று சீன அரசு கோரியுள்ளது.

13ம் நாள், முதலாவது தொகுதி படைவீரர்கள், கால்நடையாக, வென்ச்சுவான் மாவட்டத்தைச் சேர்ந்த யீங் சியூ வட்டத்தை சென்றடைந்த பின், மேலும் கூடுதலான சீன மீட்புதவிப் படைகள் இம்மாவட்டத்தில் நுழைந்து கொண்டிருக்கின்றன.

சீன ஆயுதக் காவற்துறைபடையின் 200 வீரர்களும் அதிகாரிகளும் கொண்ட ஒரு படை பிரிவு, கால்நடையாக 20மணிநேரத்துக்கு மேலாக பயணித்து, 90 கிலோமீட்டர் தொலைவை விரைவாக கடந்து, வென்ச்சுவான் மாவட்ட நகரில் நுழைந்ததோடு, 13ம் நாளிரவில் அங்கே உடனடி மீட்புதவிப் பணியை மேற்கொண்டு வருகின்றது. இங்கு பாதிக்கப்பட்ட நிலைமை மிகவும் கடுமையாக உள்ளது என்று இப்படை பிரிவின் முதன்மைத் தலைவர் Wang Yi கூறினார். அவர் மேலும் கூறியதாவது:

இது வரை, இம்மாவட்ட நகர் பகுதியில் நிலநடுக்கத்தால் காயமுற்றோரின் எண்ணிக்கை 3000க்கு மேலாகும். இம்மாவட்ட நகரில் 33விழுக்காட்டு வீடுகள் இடிந்து வீழ்ந்துள்ளன. இதர கட்டடங்கள் கடுமையாக சேதமடைந்ததோடு, வசிக்க முடியாத நிலைக்குள்ளாகியுள்ளன. சுற்றுப்புறங்களிலுள்ள இம்மாவட்டத்தின் மலையிலான கிராமங்கள் முழுமையாக தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து துண்டிக்கப்பட்டத்தால், காணாமல் போனோர் மற்றும் காயமுற்றோரின் எண்ணிக்கை கணக்கிடப்பட முடியாத நிலையில் உள்ளது என்றார் அவர்.

வென்ச்சுவான் மாவட்டத்தைச் சேர்ந்த யீங் சியூ வட்டத்தின் நிலைமையும் கடுமையாக உள்ளது. நிலநடுக்கத்துக்கு முன், 10ஆயிரத்துக்கு மேலான மக்கள் அங்கே வாழ்ந்தனர். இது வரை, கண்டறியப்பட்ட உயிர்தப்பியோரின் திரும்பினரின் எண்ணிக்கை 2300 மட்டுமே. அவர்களில் 1000க்கு அதிகமானோர் கடுங்காயமுற்றுள்ளனர்.

1 2