• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-15 14:31:12    
சீன மீட்புதவிப் படை நிலநடுக்கத்தின் மையப்பகுதியில் நுழைந்தது

cri

14ம் நாள், வென்ச்சுவான் மாவட்ட நகர், யீங் சியூ வட்டம் முதலிய கடுமையாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு, செயற்கைகோள் தொலைத் தொடர்பு வசதி, மருந்து, போர்வை உள்ளிட்ட மீ்ட்புதவிப் பொருட்களை சீனப் படை வானிலிருந்து பாதுகாப்பாக எறிந்துள்ளது. மீட்புதவிப் பொருட்கள் மற்றும் பணியாளர்கள் கொண்ட ராணுவ ஹெலிகாப்டர்கள் வென்ச்சுவான் மாவட்ட நகரில் நுழைந்து, காயமுற்ற் பலரை சிச்சுவான் மாநிலத்தின் செங்து நகருக்கு கொண்டு சென்று கொண்டிருக்கின்றன.

செய்தித்தொடர்பு விவகாரத்துக்கு பொறுப்பான குழு, இம்மாவட்ட நகரில் செய்தித்தொடர்பு மையத்தை உருவாக்கியுள்ளது. உள்ளூர் செய்தித்தொடர்பு நிலையை மேம்படுத்த இது துணை புரியும்.

தவிரவும், 30 பேர் கொண்ட ஒரு மருத்துவ அணி, இம்மாவட்ட நகரில் நுழைந்து, காயமுற்றோருக்கு சிகிச்சை அளித்து வருகின்றது.

14ம் நாள் பிற்பகல், சீனத் தலைமை அமைச்சர் வென் சியாபாவ், ஹெலிகாப்டர் மூலம், வென்ச்சுவான் மாவட்ட நகருக்குச் சென்று, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நிலைமையை பரிசோதனை செய்தார். உள்ளூர் மக்களிடம் பேசுகையில், மீட்புதவிப் படை, காயமுற்றோருக்கு சிகிச்சை அளிக்க தன்னால் இயன்றதனைத்தையும் செய்யும் என்று அவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:

நடுவண் அரசு, இவ்விடத்தை மறந்து விடவில்லை. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு காயமுற்றோரை காப்பாற்றுவது உறுதி. பாதைகள் துண்டிக்கப்பட்ட போதிலும், விமானங்கள் மூலம், காயமுற்றோரை கொண்டு சென்று, அரசு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கவுள்ளது என்று வென் சியாபாவ் கூறினார்.

14ம் நாளிரவு, செங்து நகரிலிருந்து பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் ஒன்றான Guang Yuan நகருக்குச் செல்லும் தொடர் வண்டியில் நடைபெற்ற பேரிடர் நீக்க பணிக்கான தலைமையகத்தின் கூட்டத்தில், மனிதர்களைக் காப்பாற்றும் பணி, மீ்ட்புதவிப் பணியின் மிகவும் முக்கிய அம்சமாகும் என்று வென்ச்சியாபாவ் மீண்டும் வலியுறுத்தினார். 90 ஹெலிகாப்டர்களை அதிகரித்து, அவசர மீட்புதவிப் பணியில் ஈடுபடுத்த முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார்.

இது வரை, பாதைகள் முழுமையாக துண்டிக்கப்பட்டதால், பெருவாரியான அவசர மீட்புதவிப் பொருட்கள் இம்மாவட்டத்திற்கு கொண்டு செல்லப்பட முடியவில்லை. பாரசூட் வழிமுறை மூலம், மீட்புதவிப் பொருட்கள் கொண்டு சேர்க்கப்படுகின்றன.
இது பற்றி, சீனத் துணை போக்குவரத்துத் துறை அமைச்சர் Feng Zhenglin கூறியதாவது:

இந்நிலநடுக்கத்தின் மையப்பகுதியான வென்ச்சுவான் மாவட்டத்தை முக்கியமாக கொண்ட பாதைகளுக்கான செப்பனிடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 4 திசைகளிலிருந்து இம்மாவட்டத்துக்குச் செல்லும் பாதைகளை விரைவாக செப்பனிட்டு திறக்க பாடுபடுகிறோம் என்றார் அவர்.

14ம் நாள் பிற்பகல் வானிலை சீரடைந்ததையடுத்து, மீட்புதவிப்பணியின் வேகம் விரைவுபடுத்தக் கூடும் என்ற நம்பப்படுகிறது.


1 2