தற்போது சீனாவிலான பேரிடர் நீக்க மீட்புதவிப் பணி தொடர்கின்றது. பாதிக்கப்பட்ட மக்களை குடியமர்த்தி புனரமைப்பு பணியை உற்சாகத்துடன் கையாளும் அதேவேளையில் நிலநடுக்கத்தால் நிகழக் கூடிய இழப்பை குறைப்பது குறிப்பாக பாதிக்கப்பட்ட நீர் சேமிப்பு வசதிகள் நிலநடுக்கத்தால் உடைந்த ஏரிகள் ஆகியவற்றால் நிகழக் கூடிய ஆபத்தை சமாளிப்பது சீனாவின் பல்வேறு துறைகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நீர் சேமிப்பு வசதிகள், உடைந்த ஏரிகள் ஆகியவற்றில் முன்னெச்சரிக்கை திட்டத்தை சீனா வலுப்படுத்தியுள்ளது. அத்துடன் ஆபத்து நிலைமையை நீக்கும் திட்டம் மற்றும் மக்களை இடமாற்றி குடியமரச் செய்யும் திட்டத்தையும் வகுத்துள்ளது என்று 25ம் நாள் சீன அரசவையின் செய்தி பணியகம் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் தொடர்புடைய அதிகாரிகள் விவரித்தனர்.
நிலநடுக்கத்தால் ஏற்படும் இழப்பை குறைந்த அளவாக கட்டுப்படுத்தி மக்களின் உயிர் மற்றும் சொத்து பாதுகாப்பை உத்தரவாதம் செய்ய சீனா பாடுபடுவதாக அவர் தெரிவித்தார். 25ம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சீன நீர் சேமிப்பு அமைச்சகத்தின் துணை அமைச்சர் எ ச்சிங் பிங் சீனாவில் ஆபத்து நிலைமையில் உள்ள 2000 நீர் தேக்கங்கள் பற்றி எடுத்து கூறினார். அவற்றில் 70 விழுக்காடு சிச்சுவான் மாநிலத்தில் உள்ளவை என்பது குறிப்பிடத்தக்கது. ஆபத்தான நீர் தேக்கங்கள் குறிப்பாக கடும் ஆபத்துக்களை உருவாக்கும் நீர் தேக்கங்கள் பற்றி நீர் சேமிப்பு அமைச்சகம் விழிப்புடன் இருப்பதாக அவர் கூறினார்.
1 2
|