• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-26 18:05:55    
நிலநடுக்கத்தால் ஏற்படும் இழப்பை குறைக்க கையாளும் முயற்சிகள்

cri


உடைப்பெடுக்கலாம் என்று கடும் ஆபத்தில் உள்ள நீர் தேக்கங்கள் பற்றி நீர் சேமிப்பு அமைச்சகம் நிபுணர்களை வரவழைத்து மதிப்பீடு செய்தது. அத்தகைய நீர்தேக்கங்களின் நீர் மட்டத்தை குறைக்கவும் நீர் தேக்கத்திலுள்ள நீரை முற்றிலும் வெளியாக்கிவிட்டு காலியாக்குவதென்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அவர்கள் தீர்மானித்துள்ளனர். ஏற்கனவே இதுவரை சிச்சுவான் மாநிலத்தில் நிலநடுக்கத்தால் நாசப்படுத்தப்பட்ட 69 நீர் தேக்கங்களில் தண்ணீர் இல்லை. 826 நீர் தேக்கங்களின் நீர் மட்டத்தை குறைப்பதென்ற முயற்சியும் மேற்கொள்ளப்படுகின்றது. அதன் மூலம் நீர் தேக்கத்தின் பாதுகாப்பு உத்தரவாதம் செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.


நீர் தேக்க பாதுகாப்பை உத்தரவாதம் செய்வது தவிர, நிலநடுக்கத்தால் ஏற்படும் இழப்பை பொறுத்தவரை, உடைந்த ஏரிகளை பாதுகாப்பது பேரிடர் நீக்கப் பணியில் முக்கிய அம்சமாகும். இத்தகைய ஏரிகள் சீர்குலைக்கப்பட்டால் ஏரியிலுள்ள நீர் முழுவதும் வெளியேறும். வெள்ள பெருக்கு உருவாகும். அதன் ஆபத்து மிக கடுமையானதாக இருக்கும். தகவலின் படி, சிச்சுவான் வென்ச்சுவான் நிலநடுக்கம் நிகழ்ந்த பின் அதிகமாக பாதிக்கப்பட்ட சிச்சுவான் மாநிலத்தில் 30 பெரிய மற்றும் சிறிய ஏரிகள் உருவாயிற்று. இந்த ஏரிகள் அவற்றின் கீழ் பகுதிகளில் வாழ்கின்ற மக்களின் உயிர் மற்றும் சொத்துக்களின் பாதுகாப்புக்கு எப்போதும் தீங்கு விளைவிக்கக் கூடும். இதனை சமாளிப்பதற்காக சீன நீர் சேமிப்பு அமைச்சகம் மே 12ம் நாள் நிலநடுக்கம் நிகழ்ந்த பின் பெருமளவில் சிறப்பு தொழில் நுட்ப ஊழியர்களை உடனடியாக அணிதிரட்டி நிலநடுக்கத்தால் உடைந்த ஏறிகளுக்கு அனுப்பியது. இப்போது அவர்கள் ஒவ்வொரு ஏரியின் அளவு, நிலவியல் கட்டமைப்பு, நீர் சேமிப்பு நிலைமை ஆகியவற்றையும் அவை அவற்றின் கீழ் பகுதிகளுக்கு விளைவிக்கும் பாதிப்பையும் ஊழியர்கள் அடிப்படையில் ஆய்வு செய்துள்ளனர். அத்துடன் நிலவியல் மற்றும் நீரியல் மூலம் நிபுணர்கள் அனைத்து ஏரிகளின் ஆபத்தையும் மதிப்பிட்டுள்ளனர். இது பற்றி எ ச்சி பிங் கூறியதாவது.

ஏரியின் கீழ் பகுதிகளில் வாழ்கின்ற மக்களின் உயிர் மற்றும் சொத்துகளுக்கு ஆபத்து ஏற்படுத்தும் ஏரிகள் அனைத்திலும் முன்னெச்சரிக்கை கண்காணிப்பு நிலையங்களை நாம் நிறுவியுள்ளோம். மக்களை இடமாற்றி குடியமர வைக்கும் திட்டத்தையும் வகுத்துள்ளோம். அவசரமான நிலையிலுள்ள ஏரிகளை கையாண்டு சீரமைக்கும் வாரியங்களும், நீரியல் முன்னெச்சரிப்பு நிலையங்கள், வானிலை அறிவிப்பு வாரியங்கள், பணி நடைமுறை காலம் ஆகியவையும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன என்றார் அவர்.
நிலநடுக்கத்தால் உடைந்த ஏரிகளில் மிகவும் அச்சுறுத்தல் மிக்க ஏரி நிலநடுக்கத்தின் மையத்துக்கு அருகிலுள்ள தான் சியா சான் ஏரியாகும். அதன் ஆபத்தை நீக்குவது தொடர்பான ஆயத்தப் பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது பற்றி சீன நீர் சேமிப்பு அமைச்சகத்தின் தலைமை பொறியியலாளர் லியூ நின் கூறியதாவது.
 
உள்ளூர் அரசும் மக்களை இடமாற்றி குடியமர்த்தும் திட்டத்தை வகுத்துள்ளது. ஏரியின் ஆபத்து அதிகரித்தால் முன்னெச்சரிக்கை திட்டத்தை துவக்கும். நிலநடுக்கத்தால் ஏற்படும் ஆபத்தை முழுவதுமாக குறைப்பது என்பது இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதன் நோக்கமாகும் என்றார் அவர்.


1 2