• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-27 10:03:25    
சீன விசிறிகள் (ஆ)

cri

வடிவ விசிறிகள்: பல்வகை வடிவங்களில் அமைந்த விசிறிகள் எளிய மக்களிடையே மிகவும் பரவலாக புகழ்பெற்றவை. இருபக்கமும் நீலம் அல்லது, பொன்னிறத்தில் முழுநிலா, அறுகோணம், முந்திரி ஆகிய வடிவங்களில் அமைந்த விசிறிகள் மக்களிடையே மிகப்பிரபலம். இந்த விசிறிகளின் பிடிகள் மூங்கிலால் செய்யப்பட்டவை. குறிப்பாக பழுப்பு நிற மூங்கில், புள்ளிகள் கொண்ட கொண்ட மூங்கில்கள். தந்ததத்தாலான பிடிகளும் பயன்படுத்தப்பட்டதுண்டு. பட்டாலான விசிறிகள் பொதுவாக முழு நிலா வடிவத்தில், வட்டமாக அமைந்தன. இது தவிர அறுகோணம், எண்கோணம்,  பலகோணம், பனையோலை, ஈச்சம் இலை முதலிய வடிவங்களிலும் விசிறிகள் செய்யப்பட்டன. விசிறிகளின் முகப்பில் பூக்கள் மற்றும் பறவைகள், மீன்கள் மற்றும் பூச்சிகள், இயற்கைக்காட்சிகள், புத்தரின் உருவம் மற்றும் பூவேலைப்பாடுகள் காணப்பட்டன.
பிரம்பு விசிறிகள்: பிரம்புகள் பல வகைப்படும். வெண்பிரம்பு, செம்பிரம்பு, ஊதா பிரம்பு போன்றவை. 1644 முதல் 1911ஆம் ஆண்டு வரையிலான ச்சிங் (Qing) வம்சக்காலத்தில் கைவினைக் கலைஞர்கள் மெல்லிய, தளர்ந்த பிரம்புகளைக் கொண்டு விசிறிகளை உருவாக்கினர். இத்தகைய விசிறிகள் நீடித்து உழைக்கக்கூடிய தன்மை கொண்டவை என்பது சிறப்பு.
கோதுமை வைக்கோல் விசிறிகள்: கோதுமை வைக்கோல் கொண்டு தயாரிக்கப்படும் இந்த விசிறிகள் சீனாவின் சேச்சியாங் (Zhejiang) மாநிலத்தில் மிகவும் புகழ்பெற்றது. அங்குள்ள ஷுச்சி (Zhuji) என்ற இடத்தில் ஒரு வழமை உண்டு. அங்கே இளைஞன் ஒருவன் பெண்ணொருத்தி மீது காதல்வயப்பட்டால், கோடைக்காலம் நெருங்கும் வேளையில் அவனுக்கு ஒரு அழகிய கோதுமை வைக்கோல் விசிறி கிடைக்குமாம். அவனது காதலி அன்பின் அடையாளமாய் அவனுக்கு இந்த விசிறியை கொடுப்பாளாம்.
1 2