• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-27 10:03:25    
சீன விசிறிகள் (ஆ)

cri

மூங்கில் விசிறிகள்: மலைகளில் காணப்படும் மெல்லிய மூங்கில்களை தேர்ந்தெடுத்து, மிக நேர்த்தியாக செய்யப்படும் மூங்கில் விசிறிகள் மிகவும் புகழ்பெற்றவை. இத்தகைய விசிறிகள் பக்குவமாக செய்து முடிக்கப்பட்ட பின் தொட்டுப் பார்க்க பட்டு போல் மென்மையாக இருக்குமாம். மேலும் மூங்கில் விசிறிகள் ஐந்தாறு ஆண்டுகளில் கொஞ்சம் செந்நிறமாகிவிடுவதுண்டு. பொதுவாக மூங்கில் விசிறிகள், சதுர வடிவில், வட்ட வடிவில் அல்லது அறுகோண வடிவில் இருப்பதுண்டு.. நேற்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்ட சிச்சுவான் மாநிலத்தில், ச்சிங்ஷென் வட்டத்தில் பசும் மூங்கில் விசிறிகள் என்று அழைக்கப்படுகின்றன. கொஞ்சம் எளிய முறையில், மூங்கில் பத்தைகளைக்கொண்டு தைக்கப்படும் விசிறிகளையும் பார்க்கலாம். இவை நீண்டகாலம் உழைக்கக்கூடியவை. வட சேச்சியாங் மற்றும் தென் ஆன்ஹுய் மாநிலங்களில் இத்தகைய விசிறிகள் பரவலாக தயாரிக்கப்படுகின்றன.
பனையோலை விசிறிகள்: ஆம் நம்மூரில் நாம் பயன்படுத்தும் பனையோலை விசிறிகள் சீனாவிலும் உண்டு. வட்ட வடிவ விசிறி, நீண்ட கைப்பிடி என கிட்டத்தட்ட நமக்கு பழகிய பனையோலை விசிறி போலத்தான் இவை காணப்படுகின்றன. இங்கு சீனாவில் பொதுவாக பனையோலை விசிறி செய்யும் உள்ளூர் மக்கள், பனையோலையை வெட்டி, அதை தலைகீழாய் கீழே வைத்து, அதன் மீது பாராமான ஏதாவது ஒரு பொருளை வைக்கின்றனர். இது பனையோலையை மென்மையானதாக மாற்றுமாம். பின் அதை வட்ட வடிவத்தில் வெட்டி, அதன் ஓரங்களில் பூவேலைப்பாட்டுத் துணி அல்லது நூலை கட்டுகின்றனர். பனையோலையின் நீண்ட காம்பே இந்த விசிறியின் கைப்பிடியாகிறது. சில சமயங்களில் தந்தம், மூங்கில், ராஜாளிப் பறவையின் அலகு ஆகிய்வற்றாலான கைப்பிடிகளும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வகை கொஞ்சம் ஆடம்பரமானது, கலைநயமிக்கது.
பனையோலையும், பனையோலையின் காம்பு அல்லது தண்டும் கொண்டு உருவான எளிமையான, விலை மலிவான பனையோலை விசிறிகளே மக்களிடையே பரவலாக புகழ்பெற்றவை.


1 2