• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-06-09 16:17:50    
அமோக அறுவடை பெறும் கோடைகாலத் தானியம்

cri

இவ்வாண்டு கோடைக்கால தானியம் அமோக அறுவடை பெறுவதில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை காணப்பட்டுள்ளது. தொடர்ந்து 5 ஆண்டுகளாக இந்த அறுவடை நீடித்திருக்கலாம் என்று சீன வேளாண் அமைச்சகத்திலிருந்து கிடைத்த தகவல் எடுத்துக்காட்டுகின்றது. கோடைக்காலத் தானியத்தில் முக்கிய பகுதி கோதுமை பயிராகும். இது முக்கியமாக சீனாவின் மையப் பகுதியிலுள்ள ஹோ நான் மாநிலத்தில் விளைகின்றது. ஹோநான் மாநிலத்தின் வேளாண் ஆணையத்தின் தலைமை பொருளியலாளர் வேய் ச்சுங் செங் இது பற்றி கூறியதாவது.
 
இவ்வாண்டு கோடைக் கால பயிர்களின் நிலபரப்பும் வகைகளும் தரமும் விரிவாக்கப்பட்டுள்ளதால், மாநிலத்தின் மொத்த தானிய விளைச்சல் 3050 கோடி கிலோகிராமை எட்டக் கூடும். கடந்த ஆண்டில் இருந்ததை விட இது 75 கோடி கிலோகிராம் அதிகமாகும். ஆகவே ஹோநான் மாநிலத்தில் இவ்வாண்டின் கோடைக்கால தானிய விளைச்சல் வரலாற்றில் புதிய உயர் பதிவு செய்யும் என்று நம்பிக்கையுடன் மதிப்பிடலாம். விவசாயிகளுக்கான முன்னுரிமை, வேளாண்மைக்கு தந்த வலிமையான கொள்கை ஆகியவற்றுடன் வேளாண் அறிவியல் தொழில் நுட்பம் தொடர்ந்து வளர்ந்துள்ளமை, தானியம் பயிரிடுவதிலான விவசாயிகளின் உற்சாகம் அதிகரித்தமை, ஹோநான் மாநிலத்தில் தானிய வளர்ச்சியிலான உள்ளார்ந்த ஆற்றல் ஆகியவை இவ்வாண்டின் கோடைக்கால தானிய விளைச்சல் வரலாற்றில் புதிய உயர் பதிவை உருவாக்குவதற்கான காரணங்களாகும் என்று அவர் கூறினார்.

1 2