இவ்வாண்டின் துவக்கத்தில் சீனாவின் சில பிரதேசங்கள் மழை மற்றும் பனியிழப்புகளுக்கு ஆள்ளாக்கப்பட்டன. மே திங்கள் சிச்சுவான் மாநிலத்தில் நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த பேரிடர் சீனாவின் தானிய உற்பத்திக்கு ஏற்படுத்திய தாக்கம் பெரியதல்ல. இது சீனத் தானிய பாதுகாப்பை பாதிக்கவில்லை என்று சீன வேளாண் அறிவியல் கழகத்தின் தானிய நிபுணர் ஈன் சான் பிங் தெரிவித்தார். அவர் கூறியதாவது. இவ்வாண்டின் துவக்கத்தில் சில பிரதேசங்களில் பனிச் சீற்றம் நிகழ்ந்தது. ஆனால் குளிர்காலத்தில் பனி பெய்தது பயிர்களின் வளர்ச்சிக்கு நன்மை தந்தது. சிச்சுவான் நிலநடுக்கம் ஏற்படுத்திய இழப்பு ஒரு பகுதி மட்டுமே. கடுமையாக பாதிக்கப்பட்ட இடங்கள் முக்கியமாக மலைப் பிரதேசங்களில் உள்ளன. அங்கே விளையும் தானியம் வகிக்கும் வணிக விகிதம் பெரிதல்ல. அப்பிரதேசத்தில் தானிய விளைச்சல் பத்து விழுக்காடு குறைந்தாலும் சீனாவின் மொத்த தானிய உற்பத்தியின் கட்டமைப்பை அது பாதிக்காது என்று அவர் பகுத்தாராய்ந்து விளக்கிக் கூறினார். சிச்சுவான் தவிர தானியம் விளையும் இன்னொரு முக்கிய மாநிலம் ஷான்சி மாநிலமாகும், இந்த முறை நிலநடுக்கத்தால் ஷான்சியும் பாதிக்கப்பட்டது. கோடைக்கால தானிய அறுவடை நெருங்கியதுடன் ஷான்சி மாநிலம் பெருமளவில் இயங்திரங்களின் மூலம் பயிர்களை அறுவடை செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டு உற்சாகத்துடன் கோதுமை பயிர்கள் முழுவதையும் அறுவடை செய்வதை உத்தரவாதம் செய்துள்ளது. கூடிய அளவில் சீற்றத்தால் ஏற்பட்ட இழப்பை குறைக்க முயற்சி செய்துள்ளது. இவ்வாண்டின் கோதுமை பயிரின் விளைச்சல் 2006ம் ஆண்டில் இருந்ததை விட 5 விழுக்காடு கூடுதலாக கிடைக்கும் என்று நமது செய்தியாளர் ஷான்சி மாநிலத்தின் வேளாண் வாரியத்திலிருந்து அறிந்து கொண்டார்.
கடந்த சில ஆண்டுகளில் சீனா தானிய விளைச்சலின் நிதான அதிகரிப்பு நிலைமையில் உள்ளது. முக்கிய வேளாண் உற்பத்திப் பொருட்களின் விநியோகம் போதியளவில் உள்ளது. தானியத்தின் விநியோகம் தேவை அளவை நிறைவேற்றியுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் விவசாயிகளுக்கு சீனா மேற்கொண்ட நன்மை தரும் கொள்கை இதற்கு முக்கிய காரணமாகும். விவசாயிகளுக்கு முன்னுரிமை தரும் கொள்கையுடன் தானியம் பயிரிடும் விவசாயிகளின் உற்சாகம் அணித்திரட்டப்பட்டுள்ளது. தற்போது சீனாவின் தானிய சேமிப்பு அளவு போதியளவில் உள்ளது. சர்வதேச உணவு மற்றும் வேளாண் அமைப்பு உறுதிப்படுத்திய தானிய சேமிப்பு பாதுகாப்பு எச்சரிக்கை அளவு ஆண்டு தானிய நுகர்வில் 18 விழுக்காடாகும். சீனாவில் தானிய சேமிப்பு விகிதம் 35 விழுக்காட்டில் உள்ளது. ஆகவே சீனாவில் தானிய பற்றாக்குறை நிலவவில்லை என்று நிபுணர் ஈன் சான் பிங் சுட்டிக்காட்டினார். கடந்த ஆண்டு சீனாவின் மொத்த தானிய விளைச்சல் 50 ஆயிரம் கோடி கிலோகிராமை எட்டியது. 1985ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக 4 ஆண்டுகளாக அமோக அறுவடையை சீனா பெற்றது. தானிய விளைச்சலில் கோடைக்கால தானியம் வகிக்கும் விகிதம் 23 விழுக்காடாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
1 2
|