• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-06-10 09:35:21    
காகித அல்லது தாள் குடைகள்

cri

குடை நவநாகரிக அடையாளம்

இன்றைய சீனாவில் குடைகள் பல்வகை பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. எண்ணெய்த்தாள், பருத்தி, பட்டு, பிளாஸ்டி எனும் நெகிழி, செயற்கை இழையாலான நைலான் ஆகியவற்றால் செய்யப்பட்ட குடைகள் பரவலாக காணப்படுகின்றன. மழைக்கு பாதுகாப்பாகவும், வெயிலி நிழல் தரவுமாக குடைகள் பெரிதும் பயன்படுகின்றன.

சீனக்குடைகளில் அழகானவை பட்டால் செய்யப்பட்ட குடைகளே. ஹாங்ஷோவின் பட்டால் செய்யப்பட்ட குடைகள், சில்வண்டின் இறகைப்போன்று மெல்லிய பட்டுத்துணியாலானவை. மூங்கிலால் செய்யப்பட்ட ஈர்க்கும், கம்பிகளும் கொண்ட இந்த பட்டுக்குடைகளில் மிக அழகான வடிவங்கள், படங்கள் அச்சடிக்கப்பட்டிருக்கும். 53 செண்டி மீட்டர் நீளமுடைய ஹாங்ஷோ குடைகள், பொதுவாக 250 கிராம் எடை கொண்டிருக்கும். கையடக்கமாக, வசதியாக அமையும் இந்த குடைகள் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் ஒரு அன்பளிப்பு பொருளாகவும் பயன்படுவதுண்டு. பெண்களின் ஆடை அணிகலன்களோடும், அழகு சாதனப் பொருட்களோடும் ஒன்றாகியவை இக்குடைகள்.

அது மட்டுமல்ல, நாடகக் கலைஞர்கள், கழைக்கூத்து கலைஞர்களின் உடைமைகளில் ஒன்றாக குடை முக்கிய பங்கு வகிக்கிறது. கம்பி அல்லது கயிற்றின் மீது நடக்கும்போது கழி, கம்பைத் தவிர, குடையையும் பிடித்து சமநிலைப் படுத்தி சமாளிக்கும் வித்தையை இக்கலைஞர்கள் செய்கின்றனர்.


1 2